Pages

Friday, January 22, 2010

நாய் நமக்கு ஒரு ஆசான் ஆக இருந்தால், நாம் என்ன கற்க வேண்டியிருக்கும்?" ஙப்போல் வளை" என்றார் ஆத்திசூடி இயற்றிய அவ்வைப்பிராட்டி.

எத்தனை வளையவேண்டும் , எத்தனை வளைந்தால் வாழ்வில் வெற்றி பெற இயலும் என்பது அவரவர் சூழ்னிலைக்கும் அறிவுக்குமே தரப்பட்ட பாடம்.

அண்மையில் எனக்கு ஒரு ஈ மெயிலில் ஒரு செய்தி வந்தது. ஒரு நாய் நமக்கு ஆசிரியராக இருப்பின், நாம் என்னென்ன‌ கற்க வேண்டியிருக்கும் என்பது தான் செய்தியின் சாரம். படிக்கத் துவங்கும்பொழுது இது நகைச்சுவையாக இருக்கும் என்று தான் நினைத்தேன்.படித்து முடித்தபின்னே, இது போன்ற அறிவுரை என்னைப்போன்ற யாவருக்குமே தேவை என நினைத்தேன்.நாய் நமக்கு ஒரு ஆசான் ஆக இருந்தால், நாம் என்ன கற்க வேண்டியிருக்கும்?


http://llerrah.com/ifadogweremyteacher.htm


உங்களுக்குப் பிரியமானவர் வீட்டுக்கு வருகையில், வாசலுக்கு ஓடிச்சென்று வா, வா என்று அழையுங்கள்.
( வாலாட்டுங்கள் !)

நடப்பது, நடக்க இருப்பது உங்கள் நலனுக்குத் தான் எனத் தெரிந்துவிடின், எப்பொழுதுமே கீழ்ப்படிந்துவிடுக.

அவ்வப்போது குட்டித்தூக்கம் போடு. எழுந்திருக்குமுன் கை கால்களை நனறாக நீட்டிக்கொள்.

உங்கள் மேல் மற்றவர் கவனம் படும்படி புதுமையாக ஏதேனும் செய்துகொண்டே இருக்கவும். ( நடந்துகொள் ). மற்றவர் உன்னைத் தொட( உன் உள்ளத்தைத் தொட‌) அனுமதி.

ஓடு, புரளு, விளையாடு தினமே.

ஒரு சிறிய குறைப்பு போதுமென்றால், கடிக்காதே. If a barking will do, do not bite.

ஒரு சிறிய செய்தியானாலும், உனது சந்தோஷத்தைத் தெரிவிக்க உடலை வளைத்து நடனமாடு.

.
வெயில் காலங்களில் ஓய்வு எடுத்துக்கொள். ( பொருள்: கடினமான உழைப்பு தேவை எனத் தெரிந்தால் மெடிகல் லீவு போடு அப்பாடி என்ன வெய்யில் எனப் பல முறை கூவு.

எத்தனை முறை உன்னை வசவு பாடினாலும், குற்ற உணர்வு கொள்ளாதே. அவர்களிடமே திரும்ப ஓடி,நட்பு கொண்டாடு.

நீ இல்லாத ஒன்றை இருப்பவனாக பாவனை செய்யாதே. Never pretend to be one you are not.

எவருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அவர்கள் கைகளில் சென்றமர். அவர்கள் முகத்தில் புன்னகை வரவழை.

எல்லாவற்றையுமே பின்பற்றுதல் கடினம் என்றாலும் ஓரிரண்டாவது முடியுமா என்று பார்க்கலாமே !!
அன்றாட குடும்ப, அலுவலக, சமூக வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல்களைக் குறைக்கலாமே !!

பின் குறிப்பு:
!எனது அதிருஷ்டம், இந்த பாடத்தை ஒரு ஐம்பது ஆண்டுகட்கு முன் கற்க இயலவில்லை.
கற்றிருந்தால், எனது நிறுவனத்தில், டெபுடி ஜோனலமேனேஜராக ஒய்வு பெறாது, இன்னமும் மேன் மேலே போய்,சேர்மன் ஆகியிருப்பேன். !!!!

Courtesy: www.llerrah.com

To listen to good musical advice:
Please copy and paste the URL below
http://llerrah.com/ifadogweremyteacher.htm


if a dog were your teacher, you would learn stuff like:

When loved ones come home, always run to greet them,
allow the experience of fresh and the wind in your face to be pure ecstasy.
When it is in your best interest practice obedience.
Take naps and stretch before rising
Thrive on attention and let others touch you
Run romp and play daily
Avoid biting when a simple gorwl will do
When u are happy dance around,and wage your entire body
On hot days lay down and rest.
No matter how often u r scolded dont buy into
guilt thing. Run right back and make friends
Never pretend to be something u r not.
When someone is having a bad day just jump in their arms and bring a happy smile.

2 comments:

  1. நல்ல பகிர்வு சார்!

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரை.
    ஆறறிவு மனிதன் விலங்கிடமும் சில பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.. என்பதை
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி