Pages

Monday, December 14, 2009

எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க !எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க ! உங்க ஊர்லே டெம்பிள் அப்படின்னு சொல்றீங்க ..இல்லயா ?

நான் அசந்து போனேன். எனது ஆறு வயது பேரனின் கேள்விகளுக்கு சரியான பதில் தெரியவில்லை.
தனது கின்டர் கார்டன் ஸ்கூலிங்கை அமெரிக்காவில் செய்த என் பேரன், இப்பொழுது தமிழகத்தின் சிங்காரச்
சென்னையில் ஒரு துவக்கப்பள்ளியில் படிக்கிறான்.

நமது கடவுள் சிலைகளை எல்லாம் பார்க்கும்பொழுது அவன் கேட்கும் கேள்விகள் ஏராளம். எனது பூஜை அறையில் இருக்கும் சாமிகளைப் பார்த்து அவனது முகத்தில் ஏகப்பட்ட வினாக்கள் !

ஏன் இத்தனை கைகள் ! இத்தனை ஆயுதங்கள் ஏன் அவர்களிடம் ?
ஒவ்வொரு கைக்கும் என்ன பணி அப்படின்னு சொல்லிமுடிப்பதற்குள் எனக்கு மூச்சு முட்டிவிடுகிறது.
அறுபத்தி எட்டு வரை எனக்கு வராத ஐயங்கள் இந்த ஆறு வயது சிறுவனுக்கு வருகிறது.

எல்லா சாமியும் நம்ம மாதிரி மூஞ்சி இருக்கும்பொழுது, ஏன் பிள்ளையாருக்கு மட்டும் யானை மூஞ்சி ?
திடிரென வந்ததா ? புறக்கும்பொழுதே அப்படித்தான் இருந்ததா ?

இதெல்லாம் போதாதென்று, ஒரு போடு போட்டான் பாருங்கள். நான் அசந்து போய்விட்டேன்.

தாத்தா ! இந்தியாவிலே டெம்பிள்லே யானை, சிங்கம், குரங்கு, சேவல், காளை மாடு, பசு மாடு, கிளி, மயில், எலி, காக்கா எல்லாம் இருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் இருக்கற இடத்த நாங்க ஜூ அப்படின்னு சொல்லுவோம்.

நம்ம டெம்பிள்லே இதெல்லாம் இருக்கா ? என்னடா சொல்றே அப்படின்னு கேட்டேன்.

"இங்க வந்து பாரு. ஒரு யானை பிள்ளையாரா இருக்கு. இங்க ஒரு குரங்கு.. கேட்டா அனுமார் அப்படிங்கற் நீ.. ஒரு சிங்க மூஞ்சியோட இந்த நரசிம்மர் இருக்காரு.
ஒரு பாம்பு சிவன் கழுத்துலே இருக்கு. ஒரு காளை மாடு வேற அவர் வாசல்லே இருக்கு. இங்க பாரு ஒரு சிங்கத்து மேல இந்த துர்கை சாமி இருக்கு. ஒரு சேவலும், மயிலும் முருகன் கோவில்லே இருக்கு. ஒரு கருடன் கூட இங்க இருக்கு. விஸ்னு பாம்பு மேலே படுத்துக்கிட்டு இருக்கார். அடடே ! ஒரு காக்கா மேல இந்த சனி சாமி இருக்கு. இங்க பாரு. பைரவர் சாமி நாய் மேலே உட்கார்ந்துகினு இருக்குதே ! மூஞ்சூர் மேல
பிள்ளையார் இருக்கார்... புலி மேல அய்யப்பன் வர்றாரு... "

"மிருகங்கள், பறவைகள் எல்லாமே ஜூவிலே தானெ இருக்கணும் !

இத்தன இருக்கற இடம் ஜூ தானே !! நீயே சொல்லு தாத்தா..." என்றான்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இந்த வாகனங்களுக்குப் பின்னால் இருக்கும் தத்துவங்களை விளக்கினால், அச்சிறுவன் புரிந்து கொள்வானா என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

எளியதாக யாரேனும் விளக்க இயலுமா ?

ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.

இந்த ஜூவை பொறுமையுடன் மேய்க்கறானே அவனைத் தான் ஆண்டவன் எனவும் சொல்கிறோமோ ?

9 comments:

 1. அந்த காலத்தில் இயற்கையோட ஒட்டி வாழ்ந்தோம் என்று சொல்லிட வேண்டியது தான்.
  பிற்காலத்தில் தாத்தா நம்மிடம் எப்படி சமாளித்திருக்கார் என்று நினைத்துக்கொள்வான். :-)

  ReplyDelete
 2. //ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
  சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.//

  நினைச்சேன், சொல்லிட்டீங்க.
  சாமி ஒவ்வொரு உயிரினத்திலேயும் இருக்கார் ன்னு சொல்லிப்பாக்கலாம்.:-))

  ReplyDelete
 3. வடுவூர் குமார் அவர்களுக்கும்
  ஜீவி அவர்களுக்கும்
  ஸோஃபியா அவர்களுக்கும்
  வருகைக்கும் கருத்துக்களுக்கும்
  உளமார்ந்த நன்றி.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 4. //ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
  சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.

  இந்த ஜூவை பொறுமையுடன் மேய்க்கறானே அவனைத் தான் ஆண்டவன் எனவும் சொல்கிறோமோ ?//

  --------

  ஹா..ஹா...ஹா... சரிதான்... இதையே நான் முன்வு ஒரு புத்தாண்டு பதிவில் :

  “ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க, ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
  மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
  விரட்டி அடிப்போம் அதை இந்த நேரத்தில்”

  என்று எழுதி இருந்தேன்...

  ReplyDelete
 5. //ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
  சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.

  இந்த ஜூவை பொறுமையுடன் மேய்க்கறானே அவனைத் தான் ஆண்டவன் எனவும் சொல்கிறோமோ ?//

  --------

  ஹா..ஹா...ஹா... சரிதான்... இதையே நான் முன்வு ஒரு புத்தாண்டு பதிவில் :

  “ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க, ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
  மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
  விரட்டி அடிப்போம் அதை இந்த நேரத்தில்”

  என்று எழுதி இருந்தேன்...

  ReplyDelete
 6. Vanakkam Sir,,epdi irukkeenga naan mudhalla rombhavum santhosham padren intha idathukku vanthathil,, ellam arumaiyana pathippugala vechurukkenga ellam padichen athellam vida ungaludaya paeren ketta kezhvigal thaan migavum arumai intha siru vayathula epdi oru aarvam theriyatha oru vishayatha kezhvikalai eluppi epdi thanakku puriyavechukanumnu thoenirukku paarungalaen,,

  ReplyDelete
 7. சத்யா ஸ்ரீதர் அவர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  எனது பேரன் வலைப்பதிவில் இன்னமும் சில
  கதைகள் இருக்கின்றன.
  http://ourceebrosgarden.blogspot.com
  http://menakasury.blogspot.com

  சுப்பு ரத்தினம்.
  http://ceebrospark.blogspot.com

  ReplyDelete
 8. "இதெல்லாம் மனிதனின் கற்பனை வடிவங்கள், முட்டாள் தனங்களின் முழு பிம்பங்கள், இந்த வயதில் உன் பகுத்தறிவு என் வயதில் எனக்கு வரவில்லையே என வருத்தம் கொள்கிறேன்" என்றுகூறுங்கள்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி