Pages

Monday, May 25, 2009

நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.
எதையுமே நீ செய்ய வில்லை. நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.
நடப்பதற்கெல்லாம் நீ ஒரு சாட்சி தான்.
நீ வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ என்ன ஆகப்போகிறது !
ஆக, நீ உன் கடமையைச் செய்.

பாரதப்போரில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன உபதேசத்தின் உட்கருத்து இதுவே.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்துவிட்டால்....?

என அன்று பாடினார் நம் தமிழ் மண்ணின் இணையற்ற கவியரசன் கண்ணதாசன்.

அவன் இன்று இருந்தால் என்ன பாடி இருப்பார் ?

இருக்கட்டும். அது அது அவரவர் தலைவிதி என விட்டுவிடவா ?? !!

என்றோ நடந்த நிகழ்ச்சி ஒன்று ஏனோ நினைவுக்கு வருகிறது.

பல ஆண்டுகட்குமுன் (1970ம் வருடங்களில் இருக்கலாம் !) நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றும் நினைவில் இருக்கிறது.

எனது நண்பர் எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், அவர் திடீரென் இறந்து போனார்.
முற்றிலும் எதிர்பாராத இறப்பு. அவரது மனைவி (30) இரு பெண் குழந்தைகள் ( 5, 2 )
அல்றிக்கொண்டிருந்த காட்சி அங்கு வந்திருந்த நண்பர்கள் கண்களைக் குளமாக்கியது.

அக்குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்க இருக்கிறது என ப்புரியவில்லை. புரிந்துகொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லை. குழந்தைகள் வீரிட்டு அழுதுகொண்டிருந்தன. அவர்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க வேண்டும். சின்னக்க்குழந்தைக்கு யாரேனும் பால் தரவேண்டுமே ? ஒருவரையுமே கண்ணில் காணோமே ? இறந்தவரின் சொந்தக்காரர்கள், இறந்தவரின் மனைவியின் சொந்தக்காரர்கள்
எங்கே சென்றார்கள் /

தேடின‌தில் அதே வீட்டில் ஒரு அறையில் மிக‌ப்பெரிய‌ வாக்குவாத‌மும் உர‌த்த‌ குர‌லில் ச‌ண்டையும் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

இற‌ந்த‌வ‌ரின் தாயார் இற‌ந்த‌வ‌ரின் ம‌னைவியின் கைகள் மற்றும் க‌ழுத்திலிருந்த‌ ஒரு ப‌த்து ப‌வுன் ந‌கை த‌ன‌க்குச்சேர‌‌ வேண்டும் என்ப‌தில் குறியாக‌ இருந்தார் என்ப‌து அவ‌ர‌து செய‌ல்க‌ளிலிருந்து புல‌ப்ப‌ட்ட‌து.இறந்து போன எனது நண்பர் தனக்குத் தம்பி எனச் சொன்ன ஒருவர், ஒரு ஓரத்தில் ஏதோ வரவு செலவு கணக்கு போட்டுக்கொண்டு இருந்தார்

ம‌ற்ற‌ உற‌வின‌ர், இற‌ந்த‌வ‌ருக்கு இறந்தவரின் வாரிசுகளுக்கு இற‌ப்புக்குப்பின் அவ‌ர் வேலை புரியும் நிர்வாக‌த்திலிருந்து என்னென்ன‌ கிடைக்கும் என்ப‌தை ஆராய்ந்து அதில் எது எது யார் யாருக்கு என‌ க‌ண‌க்கிட்டுக்கொண்டிருந்த‌‌ன‌ர்.

ந‌ண்ப‌ரின் ச‌வ‌ம் அப்ப‌டியே இருந்த‌து.இறந்தவரின் மனைவி கதறிக்கொண்டிருந்தார்
குழந்தைக‌ள் க‌த‌றிய‌ வ‌ண்ண‌மே இருந்த‌ன‌ர்
.

துக்க‌த்தில் ப‌ங்கு கொள்ள‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் செய்வ‌த‌றியாது திகைத்து அதிர்ச்சியுற்று
இருந்த‌ காட்சி இன்னமும் நினைவில் உள்ளது.

அங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

6 comments:

 1. தற்போது நடைபெறும் உண்மைகளைப் பதிவிட்டுள்ளீர்கள்....

  கீதையில் கூறியவற்றை நினைத்தாலே மனம் தெளிந்துவிடுமே...

  நீங்கள் கூறிய நிகழ்ச்சி நெகிழவைத்தது...

  ReplyDelete
 2. ம்ம்ம்...
  கொடுமையப்பா கொடுமை! இன்னும் இதையெல்லாம் சாட்சியாய் பாக்கிற பக்குவம் முழுமையாக வரவில்லை..

  ReplyDelete
 3. வாழ்வின் யதார்த்தமே இதுதானே! இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது?

  தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்
  நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
  வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!
  நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.

  பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய இந்தப் பாசுரம் மனித இயல்பிலுள்ள பலவீனங்களை நோயாகப் பட்டியலிட்டு திருவேங்கடவா, உன்னைக் காணும் ஆசையினால் வந்தேன், நாயேனையும் ஆட்கொண்டருளுவாய் என்று இறைவனைப் பற்றிக்கொள்ளும் பாங்குடன் மிக அழகாகச் சொல்கிறது.

  உறவுகள் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள, உண்மையான உறவு எது என்பதைத் தெரிந்து கொள்ளக் கண் முன்னாலேயே இத்தனை நடந்தும் கூட, புரிந்துகொள்ளாமல் இருக்கும் மனிதரை என்ன சொல்ல:-(

  ReplyDelete
 4. நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.

  ReplyDelete
 5. ITHU THAAN ULAGAMADA...MANITHA..ITHUTHAAN...ULAGAMADA... endru paada thondrugirathu.

  veru enna seiya...indraya ulagathin pirathaanam PANAM..PANAM..PANAME....ellorukkum alla... intha ulaga vaalkkai enbathu enna endru ariyaatha - ennamo ivargal ingeye aandukkanakkil kodikatti parakka pogirom endra ninaipai konda - mara mandaigalukku - PANAME PIRATHAANAM enbathai thanggalin intha pathivu kaattugirathu.

  Kurippu: Thanggalai 1985-il Malaysiavil muthalum kadasiyumaaga santhithen. Appoluthe en manathil pattahu.....NENGGAL oru ATPUTHA MANITHAR endr, LATCHATHIL ORUVAR endru.

  Thanggal BLOG moolam meendhum santhipathil MIGUNTHA (x1000) santhosam aiya. 16 KAVANAGAR avargale.

  ReplyDelete
 6. Kodumai Kodumai ! petra thaaye magan irantha velayil , thangam patri pesiyathu kodumayilum kodumai ! Aaanal nadappadu nadanthey theerum enbadhu moodarkal pechu !!!! Bhakthiyil sirandha Markandeyanai aavan irakkum tahruvaayil EmPeruman thaney thondri yamanai kaalall midiithu avan konda alavatra bhakthiyinal Neenda aayul tharavillaya !!! Bhakthi perugiya ediththil veru entha shakthikkum idamillai ! Om Namashivaaya !

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி