Pages

Wednesday, May 20, 2009

பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.


பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.

" வாங்க ! மன்மோஹன் சிங்க் ஸாரா ! ஆச்சரியமா இருக்கே ! குட் மார்னிங்க்.
என்ன இவ்வளவு தூரம்."

"என்னது ! பிரசிடென்டை பார்க்கிரதுக்கு முன்னாடி என்ன பார்த்துட்டு பேசிட்டுப் போலாம்னு வந்தீகளா !"

" அடடே ! எனக்கா ! காபினட் மந்திரி போஸ்டா ! அட வேணாம்க !"

" அதுக்குல்லேங்க.. ரொம்ப வயசாச்சுல்லே ! ஏதோ எனக்குத்தெரிஞ்ச விசயத்துலே
ஒன்னு ரண்டு உளரிட்டு இருக்கேன். இதுக்கு ஒரு ரிகக்னிஷன் மாதிரி ஒரு
காபினட் போஸ்ட்னா ரொம்ப ஜாஸ்திங்க.."

" அப்படி என்னதான் போஸ்ட்ங்க..? அட ! மினிஸ்டர் ஆஃப் கல்சுரல் அஃபேர்ஸா ! அதுவும்
அட்டேச்டு டு ஃபாரின் மினிஸ்டிரியா ! தேவலாமே !"


(( மன்மோஹன் சிங்க் சாரிடம் பேசிக்கொண்டிருக்கையிலே
நடுவிலே உள் மனசு கரடி புகுந்தாற்போல் புகுந்து " அடே சுப்பு ரத்தினம் !

வள்ளுவர் என்ன சொன்னார் நினைவு இருக்கிறதா ?

அன்பறிவு, தேற்றம், அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

உன்னிடம் இந்த நான்கில் எது இருக்கிறது என்று நினைத்துப்பார். அவசரப்படாதே என்றது.

அதே சமயம் மனசோ " இதெல்லாம் ஒன்னும் வேண்டாம். குபேரன் கண்ணைத்திறந்து
பார்த்துவிட்ட்டான். விட்டுவிடாதே சந்தர்ப்பத்தை." என நப்பாசையை மேலும் கிளறியது.))" அது சரி, நன்னா யோசிச்சு இருப்பீங்க .. அதுதான் வந்து இருக்கீங்க..
இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க.. முடியாதுன்னா நன்னா இருக்காதுல்லா.. "

" சோனியா அம்மாவும் சரின்னு சொல்லிட்டாகளா ! அட ! ரொம்ப தாங்க்ஸுங்க..!"

" நாளைக்கு ஸ்வேரிங்க் செரிமனியா !" வந்துட்டேன். வந்துக்கினே இருக்கேன். "

" அப்ப உத்தரவு வாங்கீக்கீகளா ! சரிங்க.. போயிட்டு வாங்க. நல்லபடியா அரசு நடத்தி
எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு ஒரே லட்சியத்தோட இருக்கர நீங்க . கடவுள்
உங்களுக்கு எல்லா வரத்தையும் தருவாங்க.. ! "

எங்கோ பாட்டு கேட்கிறது. " எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா ! "

" என்னது ! இந்தக் கிழவிய இப்பன்னு காணோம் ! வந்த சிங்க் ஸாருக்கு ஒரு தஞ்சாவூர்
டிகிரி காபிய் குடுத்து இருக்கக்கூடாதா ! இந்த கிழவியே அப்படித்தான்.!

" மீனாட்சி ! ஏ மீனாட்சி ! ஏ மீனாட்சி ! "

" என்னங்க தூக்கத்துலே மீனாட்சி மீனாட்சின்னு கத்தறீங்க .. என்ன விசயம். ? எதுனாச்சும்
கனவாங்க. "

" ஆமாம் ! கனவுதான் போல இருக்கு ! அப்ப மன்மோஹன் சிங்க் ஸார் வந்து மினிஸ்டர் போஸ்ட்
அப்படின்னு சொன்னதெல்லாம் கனவா ! "

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, அத்தைனையும் சொப்பனந்தான் " என்று
சும்மாவா பாடினார் பாரதியார் !


" சரிதான் ! காலைலே நெட்லே உங்களுக்கு யாரோ தெரியாத்தனமா பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்போய் எனக்குத் தூக்கம் கெட்டு ப்போயிடுச்சு. ! பேசாம சாமி பேர மூணு தரம் சொல்லிப்போட்டு
தூங்குங்க
.. இன்னும் பத்து நாள்லே இந்தியாவுக்கு திரும்பிப்போயி ஜயசந்திரன் டாக்டர்ட்டே
கன்சல்ட் பண்ணிப்போடணும். அமெரிக்கா வந்தது தான் வந்தோம். மனுசனுக்கு உளரல் ஜாஸ்தி
ஆகிடுத்து. ! "

ஆஹா ! பட்டாம் பூச்சி விருது கொடுத்தாரே அந்த புண்ணியவான் கைலாசி முருகானந்தம் !
அவ்ருக்கு முதல்லே நன்னி சொல்லணும். அது சரி, ஜீவாவுக்கு கொடுத்தீக.. ரொம்ப சரி.

கவினயா மேடத்துக்கு கொடுத்தீக. அதுவும் சரி. எனக்கு எதுக்கு !

ஏதோ அப்பப்ப மனசுலே தோணரது எல்லாம் உளறதுக்கு ஒரு இடம் வேணும்லே ! அது தான்
நான் எழுதறது. பின்னூட்டம், முன்னூட்டம் எல்லாம். இதுக்குப்போய் ஒரு விருதா ! "

சரி, சரி, நன்றிங்க. நீங்க சொன்னபடி மூணு பேர் யார் யார்னு தேட ஆரம்பிக்கரேன்.கொஞ்சம் வைட் பண்ணுங்க

5 comments:

 1. நல்லா நகைச்சுவையாகவும் எழுதுறீங்களே வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 2. வாங்கிய விருதுக்கு வாழ்த்துக்கள்!
  தூங்கிய வேளையில் கண்ட கனவு..:)!

  பத்து நாளில் இந்தியா வருகிறீர்களா?
  நல்வரவு!

  ReplyDelete
 3. பட்டாம்பூச்சி விருதுடன் பறந்து வருக!!

  ReplyDelete
 4. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, அத்தைனையும் சொப்பனந்தான் " என்று
  சும்மாவா பாடினார் பாரதியார் !

  பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்."
  அட ! மினிஸ்டர் ஆஃப் கல்சுரல் அஃபேர்ஸா ! அதுவும்
  அட்டேச்டு டு ஃபாரின் மினிஸ்டிரியா ! தேவலாமே !"

  பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் வண்ண எண்ணங்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி