Pages

Thursday, April 09, 2015

நீ கொடுத்ததற்கே


அருள் மழை பொழிவாய் ரஹ்மானே 

நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல  முடியவில்லை இன்னும்,
இனி அடுத்ததற்கு  கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்  !!

Monday, March 23, 2015

எதிர்த்து வாழ்தல் எந்நாளோ ?




தமிழர் கிராமப்புற வாழ்விலே நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை சுவைபட தனது வலையிலே கவிதையாக மிளிரச் செய்யும் இந்த புலவர் தனது படைப்புகளிலே 

காதலையும் காணக் கிடைக்கா அன்பினையும்
நாணத்தையும் நா நயத்தையும்
பண்பையும் வண்ணமிகு விழாக்களையும்
வயலோரக் கதைகளையும்
எண்ணிலடங்கா இலக்கிய நயங்களையும்

சளைக்காமல் சலிக்காமல்
அயராமல், உறங்காமல்
வானத்தே  மின்னும்  
நட்சத்திரங்கள் போல்
அன்றாடம்
அன்னை அன்ன பூரணியாக

அள்ளித் தருவதில்
வல்லவர்.

இன்று
கோபம் கொண்டு ஒரு
கவிதை எழுதி இருக்கிறார் என்றால்
அது ஏன்
எனத் தெரிந்து கொள்ள
இங்கே செல்லுங்கள்.

நன்றி: சசிகலா மேடம்.

Saturday, February 21, 2015

உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்

எந்த ஒருவனிடமும் அவன் அறியும் மொழியில் பேசு.
அது அவன் மூளைக்கு செல்லும்.
எந்த ஒருவனிடமும் அவன் தாய் மொழியில் பேசு.
அது அவன் இதயத்தை அடையும்.

...நெல்சன் மண்டேலா.

If you talk to a man in a language he understands,
 that goes to his head;
If you talk in his language, that goes to his heart' 

- Nelson Mandela.
இன்று உலக தாய் மொழி தினம். 
அதை ஒட்டி, பலர் கவிதை பாடி இருக்கின்றனர். 
ஒரு அழகிய கோலம் வரைந்து இருக்கிறார். 
அதை கீழே பாருங்கள்.

தாய் மொழியைப் போற்றும்  அனைவருக்கும் 
உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள் 
என்ற தலைப்பிலே 
திரு யாதவன் நம்பி 
அவர்கள் எழுதிய கவிதை 
சுப்பு தாத்தா 
இங்கே பாடுகிறார்.