Pages

Wednesday, December 25, 2013

இனிய கிருஸ்துமஸ்

அன்பின் ஒளியாக, வடிவாக,  அவதரித்த ஏசுபிரான் வருகையைபோற்றும் புகழ் பாடும் திருமதி இளமதி அவர்கள், யேசுவின்  சிறப்பென்ன என , நம் சிந்தையைக் கவரும் வகையில் ஒரு பாடல் இயற்றி இருந்தார்கள்.  அது இதுவே.

                                 அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
அருந்தவன் வந்துதித்தான்! - எங்கள்
ஆதவன் வந்துதித்தான்!
துன்பங்கள் தொலைந்திடத் துயரங்கள் அகன்றிடத்
தூயனாய் வந்துதித்தான்! - நல்ல
தூதனாய் வந்துதித்தான்! 

பொய்மையைப் போக்கவும் உண்மையைக் காக்கவும்
புனிதனாய் வந்துதித்தான் !- உலகில்
புதுமையாய் வந்துதித்தான்!
நல்லதை நாட்டவும் நன்மையைக் கூட்டவும் 
நமக்கென வந்துதித்தான்! - யேசு
நாட்டினைக் காக்க வந்தான்!

வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும் 
வேதமாய் வந்துதித்தான்! - வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
விரைவாக வந்துதித்தான்! - அந்த
விண்மகன் வந்துதித்தான்!

விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
பூண்டவன் வந்துதித்தான்! -
அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
மலரடி போற்றிடுவோம்!
~~~000~~~


உலகத்தே பரவி இருக்கும் கிருஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நல வாழ்த்துக்களை அவர் பதிவு மூலம் தெரிவித்த நான், இந்தப் பதிவின் மூலமும் 

எல்லோருக்கும் எங்கள் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

திருமதி இளமதி பாடிய பாடலை அங்கே நான் ஹிந்தோள ராகத்தில் பாடி இருந்தேன். அவரும் தன பெட்டகத்தில் அதை இட்டு எனக்கு கௌரவம் அளித்து இருக்கிறார்கள்.  

தமிழ் அன்னை நமக்கெல்லாம் தந்த கோஹினூர் ரத்தினம் கண்ணதாசன் அவர்களின் இயேசு காவியம் உலகப் புகழ்  பெற்றது. உலகத்தில் எல்லோராலும் பாடப்பெறுகிறது.

 அந்த யேசு காவியத்தின் ஒரு பாடலை திரு தி. எம்.சௌந்தரராஜன் பாட, 
நாம் அதனுடன் இணைந்து நாமும் பாடுவோம். 




ANIMATION VIDEO THAT TELLS US THE CHRISTMAS STORY IN FULL

TURN BACK TO GOD.


நாகையில் நாங்கள் இருந்தபோது நாங்கள் அடிக்கடி சென்ற திருத்தலம். 
வேளாங்கன்னி சர்ச். 

வேளாங்கன்னி அன்னையை தரிசித்த அடுத்த நிமிடம் வாசல் கதவு மணி அடித்தது.
திறந்தேன்.
எனக்காக எனது நண்பர் திரு பிரேம் குமார் வீட்டில் இருந்து கிருஸ்துமஸ் கேக் வந்திருக்கிறது.

எ வெரி ஹாப்பி கிருஸ்துமஸ் பிரேம் குமார் சார்.
A very happy New year 2014 .

A Tasty Christmas Cake and Breakfast from my neighbour.

6 comments:

  1. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படங்கள், பாடல்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய பாடல்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அருமை.

    ReplyDelete
  3. ஐயா!... வணக்கம்!

    முதலில் உங்களுக்கும் உங்கள் உறவினர் நண்பர்கள் யாவருக்கும் இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    உங்கள் அன்பிற்கு ஈடிணை இல்லை ஐயா!

    எனது பாடலையும் இங்கு இனைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கூறி மகிழ்ந்த உங்கள் உன்னத மனப்பான்மையைக் கண்டு பேருவகை கொண்டேன் ஐயா!

    சிரம் தாழ்த்திக் கரங்குவித்து கண்கள் மல்க வணங்குகின்றேன்! _()_

    இனிய காட்சிப் பதிவும் பகிர்வுமகாக அத்தனையும் அருமை!

    மீண்டும் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்களுடன்...
    இவள்... இளமதி!

    ReplyDelete
  4. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்! அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  6. இளமதியின் அருமையான கவிதை. சிறப்பான பாடல்கள்....

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி