How to Abandon the " I " in me ?
காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Sunday, January 20, 2013
Sunday, January 13, 2013
Tuesday, January 01, 2013
புத்தாண்டு தினம்
புத்தாண்டு தினம் இன்று.
ஆங்கிலம் பேசுவார் மட்டுமன்றி அனைத்து நாட்டு மக்களுமே கொண்டாடும் உலகப்பொது புத்தாண்டு தினம் இன்றே.
இந்த நல் நாளில் எல்லோருமே புத்தாண்டுக்கான உறுதி மொழி ஒன்று எடுத்துக்கொள்வர்.
மற்றும் எதெல்லாம் வேண்டும் எதெல்லாம் தவிர்க்கவேண்டும் எனவும் பட்டியலிடுவர்.
அந்த வகையிலே நானும் சிந்திக்கத்துவங்கியபோது திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலையில் புத்தாண்டு வாழ்த்தாக அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் பதிவாக்கப்பட்டிருந்தன.
வேண்டும் வேண்டும் எனத் துவங்கும் நீளும் முடியும் இந்தச் சாலச் சிறந்த சீரிய விருத்தத்திற்கு அப்பாலே வேறு என்ன வேண்டுவது எனும் நினைப்பிலே
அப்பாடலை எனது குரலிலே பாடி மகிழ்ந்தேன்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
இருபது வயதிலே வேண்டியன எல்லாம் எழுபது வயதிலே வேண்டா வெறுப்பாக போகிறது.
முப்பதிலே முகர்ந்தது எல்லாமே மூப்பு வரின் மறந்து போகிறது.
நாற்பதிலே நாடியதெல்லாம் நாடி தளர்ந்து ஓடி விடுகிறது.
ஐம்பது அறுபதில் சேகரித்த ஐச்வரியங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அறுபது முடியுமுன்னே
நம் பிள்ளைகள் நல்வாழ்வுக்காக செல்வழிந்து போயிற்று.
அறுபது முடிந்தபின்னே ஆறுதல் வார்த்தைகளுடன் துணை நிற்கும் ஒரே ஜீவன் , அந்தக்கலப்பையில் பூட்டப்பட்ட இன்னொரு மாடு எனவும் புரிகிறது.
எழுபதிலோ தேவை ஒன்று இருக்கிறது என்றால் அது நிம்மதி .
அந்த நிம்மதியைத் தேடித் தேடித்தான் மனித வர்க்கம் என்றுமே உழைஞிறது .
வள்ளலார் கண்ட பெரு வாழ்வு அத்தகைய நிம்மதியை த்தரும் என்பதிலும் ஐயம் உண்டோ ?
தாயுமானவர் விருப்பத்துடன் இப்பதிவை நிறைவு செய்வோம்
தாயுமானவர் விருப்பத்துடன் இப்பதிவை நிறைவு செய்வோம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே .
Subscribe to:
Posts (Atom)