நீங்கள் சிரியுங்கள்.
உங்களோடு சிரிக்க
உலகத்தில் ஒரு நூறு பேர் இருப்பர்.
ஒரு தடவை அழுது பாருங்கள்.
ஒருவனுமே
அடுத்த முறை
அணுகமாட்டான்.
தோழமையுடனும் ஏழைமை பேசேல்
ஏழைமை என்பது பொருள் இல்லாமை மட்டுமா ?
பொருள் குவித்திருப்பான் ஒருவன்.
பாய்க்கு பதிலாக அவனிடம் பஞ்சு மெத்தைகள் ஏராளம்.
மெத்தென படுத்தாலும்
நித்தமுமே தூக்கமில்லை.,
நிம்மதி இல்லை.
நட்புகள் எனக்கு ஆழி
அலைகள் போல என
ஆரவாரித்தான் அடுத்தவன்.,
பொருள் இழந்தான் ஒரு நாள்.
புன்னகையும் இழந்தான்.
இருளோ இது என மருண்டான்.
இனிய நண்பர்களை அழைத்தான்.
இருக்குமிடம் தெரியவில்லை.
அருள் இருப்பதாகச் சொல்லி அடுத்தவன்
அனைவரையும் கவர்ந்தான்.
அவனியில் உள்ள சுகம்
அனைத்தையுமே பெற்றான்.
அகலக்கால் வைத்தான்.
அடுத்த படியிலே
தடுக்கி விழுந்தான்.
அறிந்தவனோ ...
இருப்பதே இன்பமென
இல்லாதது வேண்டேன் என
இல்லத்து அரசியுடன்
இருப்பதை நுகர்ந்தான்.
இனிமையைக் கண்டான்.
உலகத்து நியதி இது.
உண்மையும் இதுவே ஆம்.
சற்றே
சிரிக்க,
சிந்திக்கவும் செய்ய,
சந்தியில் நடந்த ஒரு காட்சி இதோ.