காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Sunday, October 16, 2011
முத்தமிழ் அடைவினை
கைத்தல நிறைகனி அப்பமொடு
கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ...... பெருமாளே .
Subscribe to:
Post Comments (Atom)
தெரிந்த திருப்புகழ் பாடல் என்றாலும் அருணகிரியாரின் வரிகளை உங்கள் குரலில் கேட்க இனிமையாக இருந்தது.
ReplyDeleteகூடவே திருமுருக கிருபானந்தவாரியாரின் நினைவில் மனம் தோய்ந்தது.