Pages

Sunday, October 02, 2011

ஆன்மீகப் பதிவாளர்கள் அனைவரும் வந்திருக்கும் ஒரு கொலு

ஊர் கூடி தேர் இழுத்தோம் என்று சொல்வார்கள். அது போல ஆன்மீகப் பதிவாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு பொம்மை கொண்டு வந்திருக்கும் ஒரு கொலு எங்கள் வீட்டில் அமைத்தேன். அனைவரும் வந்திருந்தார்கள்.
நீங்களும் பாருங்கள். 


வருகை புரியும் எல்லோருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்கள். 
யார் யார் வீட்டு பொம்மை என்று அவரவர்கள் தெரிந்து கொள்வார்கள். 

அது சரி, இந்தநவராத்திரி கொலுப்படிகளின் பின்னணியில் ஒரு பரிணாம தத்துவமேஅடங்கி உள்ளது. அதை இங்கே படிக்கவும். 
 
ஒவ்வொரு மாலையும் நாம் அழைத்தவர்கள் வருவார்கள். நம்முடனே சிறிது நேரம் இருந்து நமது நலம் விசாரிப்பார்கள். நாமும் அவர்கள் வருகைக்கு நன்றி தெரிவிப்போம். இது சகஜம். ஆனால் நேற்று சிறிது  கூட எதிர்பார்கவில்லை திருமதி சுசீலா அம்மா வருவார்கள் என்று. ஒரு பாட்டு பாடுங்களேன் என்று வேண்டினேன். உடனே பாடி வந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தார். 


அவருக்கும் எனது நன்றி.

4 comments:

  1. மிக அழகான கொலு...

    உங்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. மனப்பூர்வ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. :)

    நவராத்திரி வாழ்த்துகள் தாத்தா!

    ReplyDelete
  4. அற்புதமான கொலு!
    அருமையான யோசனை!!
    வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி