Pages

Sunday, July 03, 2011

சுரக்கட்டும் எழட்டும். கிட்டட்டும். மலரட்டும்.

 இன்று காலையில் கணினியைத் திறந்தபோது ஒரு செய்தி காத்திருந்தது. 
தமிழ் வலை உலகத்தின் ஆன்மீக எழுத்தாளர் திருமதி கீதா அவர்கள் விடுத்திருந்த செய்தி என்னைப் பெரிதும் கவர்ந்தது.  MY WISH FOR YOU 
என்னும் தலைப்பிலே அவர்கள் எழுதியது காண இங்கே கிளிக்குங்கள்.

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்றும் அறியேன் பராபரமே

என்னும் வள்ளலாரின் வாசகம் நினைவுக்கு வந்தது. 

ஆங்கிலத்தில் இருக்கும் அவ்விருப்பங்களை தமிழில் எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றியது.
அவர்களுக்கு எனது நன்றி.

-Where there is pain, I wish you peace and mercy.
 வேதனை வருகையிலே உனக்கு அமைதியும் ஆண்டவனின் அருளும் கிட்டட்டும்.
-Where there is self-doubting, I wish you a renewed confidence in your ability to work through it.
தன்னைப்பற்றியே நீ ஐயுறும்போது, இன்னல்களை நான் சந்திக்கும் சக்தி பெறுவேன் என  ஒரு புது உறுதி நின் நெஞ்சில் சுரக்கட்டும்./
-Where there is tiredness, or exhaustion, I wish you understanding, patience, and renewed strength.
சோர்வும் அயற்சியும் உண்டாகும்போதெல்லாம், பொறுமையும் சூழ்னிலை குறித்த சரியான உணர்வுகளின் அடிப்படையில் ஒரு புதிய சக்தி உண்டாகட்டும்.
-Where there is fear, I wish you love, and courage.
பயம் ஏற்படும்பொதெல்லாம், அன்பும் துணிவும் உள்ளத்தில் மலரட்டும்.

கிட்டட்டும்.சுரக்கட்டும்./எழட்டும்.  மலரட்டும்.

3 comments:

  1. பயம் ஏற்படும்பொதெல்லாம், அன்பும் துணிவும் உள்ளத்தில் மலரட்டும்.

    கிட்டட்டும்.சுரக்கட்டும்./எழட்டும். மலரட்டும். //

    அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நல்ல மொழிபெயர்ப்பு ஐயா.… எல்லோருக்கும் எல்லாமும் கிட்டட்டும்…. அன்பு என்றென்றும் மலரட்டும்…..

    ReplyDelete
  3. திரு வெங்கட நாகராஜ் , திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களது வருகைக்கும் உற்சாகம் அளித்திடும் கருத்துக்களுக்கும்
    நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி