எப்பொழுது என்னை ஆட்கொள்வாய் ? என ஈற்றடியுடன் முடியும் கவிஞர் சிவகுமாரன் கவிதை படித்தபோது எனக்கு திரு மந்திரத்தைத்தான் படிக்கிறோமோ என்ற ஐயம் வந்தது. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாக இருக்கும் அந்த பரம்பொருள் சிவன் என உணர்வின், அந்த
சிவனை ஒரு குறியில் வைத்து வணங்க இயலாது எனச் சொல்ல வந்த ஆசிரியர் :
குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பறக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிறைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரித்து வளம் செய் யுமாறு அறியேனே.( திருமூலர் 1773 )
பஞ்ச பூதங்கள் எனப்படும் , நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகிய ஐவற்றிலும் இணைந்து அவையாகவே காட்சி அளிக்கும் சிவன் , கவிஞர் சிவகுமாரன் சொற்களிலே எங்கெலாம் காட்சி அளிக்கிறான் பாருங்கள்:
ஆனைக் காவில் புனலானாய்
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய்
மாகாள ஹஸ்தியில்
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய்
விந்தைகள் பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய்
எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? இப்பாடலை நானும் ஒருமுறை பாட வேண்டும் என்ற முனைப்புடன் ஐந்து ராகங்களில் இந்த பத்து பாசுரங்களை பாட முயற்சித்து இருக்கிறேன். பாடல் எனது உள்ளம் கவர்ந்த பஜன் சங்கீதத்தில் வல்லவராம் ஜக்ஜித் சிங் அவர்களின் நம சிவாய ஓம் எனும் hymn உடன் துவங்குகிறது.
என்ன பேறு பெற்றேன் நான் அய்யா. கண்ணீர் மல்க , கரங்கூப்பி தங்களை வணங்குகிறேன்.
ReplyDeleteகடற்கரையில் இருக்கும் அந்த சிவன் சிலை எங்குள்ளது?
ReplyDeleteபாடலை வடித்து தந்துள்ளதைக் கேட்க நிறைவாக இருந்தது, நன்றிகள் ஐயா.
ReplyDeleteஎண்ணா தேனோ இருக்கின்றாய் - இருப்பினும் நான்
ReplyDeleteஎண்ண தேனாய் இருக்கின்றாய்!