காலமும் காலனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
அந்த நாளும் வந்திடாதோ !!!
இங்கே மூன்று வித்தியாசமான காட்சிகள்.
முதலில், இள வயதில், சின்னஞ்சிறு வயதில் எந்தக்கவலையுமின்றி விளையாடியே பொழுதைக்கழித்த நாட்கள் .
அவற்றை நினைத்து ஏங்குகிறார் கவிஞர் சிவகுமாரன் அவர்கள்.
அவை மீண்டும் வருமா ? என அவர் ஏங்கும் அதே வேளையில்
இன்னொரு காட்சி. வாலிப வயது இது.
இள வயதில் காதலித்த ஒரு பெண்ணை கடுகி மணம் புரிந்து
ஏதோ ஒரு நாள் சாலை விபத்தில் அவள் நடைப்பிணம் போல ஆன நிலை.
ஐ.ஐ.டி. மாணவர் ஒருவர் எடுத்த குறும்படம் இது. முழுதும் பாருங்கள்.
கடந்த நாட்கள் மணல் தரையில் சிந்திய பால் போலல்லவோ ?
திரும்பப்பெறுதலும் இயலுமோ ?
பிறிதொரு காட்சி.
அவனை நினைத்து அவள் பாடும் பாடல்
கண்ணனை ஏங்கி மீரா பாடும் பாடல் இங்கே.
அந்த நாளும் வந்திடாதோ என எம்.எஸ். சுப்பு லட்சுமி பாடுகிறார்.
இது இன்னொரு கோணம். இன்னொரு பார்வை.
காணொளியை வீட்டில் சென்றுதான் பார்க்கணும். பார்த்துட்டு சொல்றேன்
ReplyDeleteவெவ்வேறு கோணங்களில் - நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteவயதின் மாற்றத்தால் மனமும் பக்குவப்படுகிறதுதானே.காணொளிகள் கதை சொல்கிறது !
ReplyDeleteநன்றி அய்யா
ReplyDelete