Pages

Sunday, February 20, 2011

மதம்கொண்ட யானை நான், மாதவா !



ஒரு மாமத யானை நம்முள் ஒளிந்து கொண்டு இருப்பதை நாம் குருவின் அருள் பெற்றால் அன்றி காண இயலாது. அந்த மமதையை, தான் என்னும் ஆணவத்தை, மனதிலே என்றும் குடியிருக்கும் அடங்காத ஆசைகளை, பேராசைகளை,  நம் குருவின் அருளால் அடக்கி நம்முள் அந்த இறைவன் குடி கொண்டிருப்பதை உணரவேண்டும் என பொருள்கூறும் திருமூலரின் இந்த பாசுரத்தை படித்துக்கொண்டிருந்தேன்.

மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தின் மறைந்தது மாமத யானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

இப்பாடலின் பொருளை மனதிற்குள் வாங்கும் காலையில் மனதிலே ஒரு யானை வந்தமர்ந்திருப்பது போல‌......
ஒரு பிரமையா என்ன அது !! திடுக்கிட்டேன். பாடல் புத்தகத்தை மூடிவிட்டு, கணினியைத் திறந்தேன். அதில்......
நான் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளில் ஒன்றான " வெண்பா வனம் " அதில் திகிழ் அவர்கள் ஒரு வெண்பா எழுதியிருந்தார்கள். எனது அப்பொழுதைய மன நிலைக்கு மிகவும் ஒத்து இருந்த அந்த வெண்பாவை

பாடலாம் என நினைத்தேன். பாடியும் விட்டேன்.

அது இதோ !!








மதம்கொண்ட யானைநான், மாதவா ! உந்தன்
இதம்கொண்ட பார்வையால் ஈர்த்திடு !- உந்தன்
கதம்கொண்டே எந்தன் கவலைகளை யெல்லாம்
வதம்செய் தெனைக்காத் திடு !

அம்மாதவனே என் ஆசானாக வந்து எனக்கு அருள் புரியவேண்டும். என் மன இருள் அகற்ற வேண்டும். 

இந்த பாட்டை பாடி முடித்தபின் திகழ் அவர்களிடம் எப்படி சொல்வது எனத் 
தெரியாது திகைத்து நின்றேன்.  அவர்கள் வெண்பா வலைப்பதிவில் ( அது  உண்மையில் ஒரு வனமா  அல்லது வண்ணப்பூங்காவா  என்று பிரமித்து போகிறோம். ) பின்னூட்டத்திற்கு இடம் இல்லை. அவர்கள் இ மெயில் ஐ.டி யும் இல்லை. அவர்களே வந்து பார்த்தால் தான் உண்டு.
வருவார்கள் !! மாதவன் அல்லவா அழைத்துக்கொண்டு வருவார் !!!




4 comments:

  1. அருமை பாடலும் உங்கள் குரலும்

    ReplyDelete
  2. உண்மை அய்யா.ஓவ்வொருவரின் உள்ளத்திலும் எத்தனையோ எண்ணங்கள் ஒளிந்து உள்ளன.அதை அகற்ற அவன் விட்டால் வேறு யார் உண்டு ?.

    விழியத்தில் தங்களின் இனிய குரலில் பாடலையும்,கலந்துரையாடலையும் இரசித்தேன் அய்யா.

    இப்பாடலைக் கேட்டு கேட்டு என் உள்ளத்திலும் ஒளிந்து இருக்கும் பேய்கள் எல்லாம் அகல வேண்டும்.

    உங்களின் இடுகைகளை வழக்கமாகப் படிக்கும் வாசகனில் நானும் ஒருவன்.

    இடுகை இட்டு இன்பக் குரலில் பாடி இருக்கும்பொழுது வாராமல் இருப்பேனா சொல்லுங்கள்.

    மாதவனே அழைக்கும் பொழுது நான் பெற்ற பேறு மாதவம் அய்யா

    தமிழுடன்
    திகழ்

    ReplyDelete
  3. நல்ல பாடல், அடாணாவிலும், சஹானாவிலும் ஏற்றம் பெறுகிறது! நடுவில்,கருத்து வேறு!
    இனிய அனுபவத்துக்கு நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி