Pages

Thursday, January 13, 2011

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக! மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!


தைப்பொங்கல் திருநாள் முன்னிட்டு எனக்கு வாழ்த்து அனுப்பியிருக்கும் திரு ஆர். நடராஜன் அவர்கள் நான் பணி புரிந்த நிறுவனத்திலே வேலை பார்ப்பவர். என்னை விட ஒரு 20   வருடம் இளையவர். இருப்பினும் அவர் மனதிலே நான் ஒரு நல்ல நண்பனாக இருந்து இருக்கிறேன். நான் ஒய்வு பெற்று ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகியபோதிலும் என்னை நினைவு கூர்ந்து வாழ்த்து மடல் அனுப்பியிருக்கும் அவரது அன்பு உள்ளத்துக்கு நன்றி சொல்ல, ஒரு வழியாக  அவர்தம் வாழ்த்து மடலையே இங்கு பதிவிடுவோம் என்று எண்ணினேன்.

அடுத்து வருவது தமிழ் பதிவுலக கவிதாயினி கவிநயா அவர்கள் கவிதை. இது இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இயற்றி நான் மெட்டு அமைத்து அவரது வலையில் இட்டது.
அழகான கவிதை.  என்றும் உயிர் துடிப்புடன் அமைந்த கவிதை இது.





பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பதிவு உலக கவிதாயினி திருமதி கவிநயா அவர்களின் கவிதையை இந்த வருட பொங்கலன்று மறுபடியும் பதிவிட்டு தமிழ் மக்கள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்க


திருமதி துளசி கோபால் அவர்கள் தமது வலைப்பதிவிலே ஒரு அழகான வாழ்த்து படம் இட்டு இருக்கிறார்கள்.  அதையும் பார்த்து மகிழுங்கள். பொங்கல் திருவிழா வட மா நிலங்களிலும் பல விதமாகக் கொண்டாடப் படுகிறது. துளசி மேடம் என்னமா அழகாக  வர்ணிக்கிறார் என்று பார்க்க இங்கே சொடுக்குங்கள்.









8 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்.

    இரண்டு வாழ்த்துக்களும் அருமை.

    தாங்கள் குரலில் பாடலும் இனிமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அய்யா
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய
    பொங்கல் வாழ்த்துகள்

    இனிய நாளில்
    இனிக்கும் கவிதைகள்

    நன்றி அய்யா

    ReplyDelete
  3. மனம் நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்..
    பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

    ReplyDelete
  5. பொங்கல் வாழ்த்துக்கள் ஈந்த திருமதி ராமலக்ஷ்மி, ஹேமா, திகழ், மற்றும்
    ஜீவி அவர்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. தங்களுக்கும் தங்கள்
    அலைபோல் வரும் வலைச்சுற்றத்துக்கும் எனது நன்றி.

    மேடம் திகழ் . உங்கள் வெண்பாவனத்திலே ஒரு மலர், நாராயணனை அர்ச்சித்துக்
    கொண்டிருப்பதைப்பார்த்து மனம் மலர்ந்தேன். உடல் சிலிர்த்தேன். அப்பாடலை
    உடன் பாடிட விழைந்தேன்.
    ஆரபி ராகத்தில் அருமையாக வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் எனது வழக்கமான‌
    வலையில் வரும். (உங்கள் பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லை. அதனால் இங்கு
    எழுதுகிறேன். )

    உங்கள் வலையில் உள்ள படங்கள் சித்திரங்களா ! அல்ல !
    அவை நமது சரித்திரங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  6. நன்கு மெட்டு அமைத்து இருக்கிறீர்கள். கவிதையும் வாழ்த்தும் அருமை.
    இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்றி அய்யா
    உங்களின் குரலில் கேட்க அருமையாக இருக்கிறது.

    தமிழுடன்
    திகழ்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துகள் தாத்தா!

    மீண்டும் கவிதை/பாடலை இங்கே இட்டமைக்கு நன்றிகள் பல.

    திகழுடைய வெண்பாவை நீங்கள் பாடியதை, இனிமேல்தான் கேட்கணும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி