எனது முந்தைய பதிவை படித்த தமிழ் வலை உலக அன்பர் நண்பர் திகழ் என்பவர் என்னுடைய பாடலை மிகவும் ரசித்ததாக எனக்கு எழுதி இருந்தார்கள். அது ஹேமா அவர்கள் பதிவுக்கு நான் எழுதிய பின்னோட்டம். எனது பழக்கம், யாரேனும் எனக்குப் பிடித்த வகையிலே பின்னூட்டம் இட்டிருந்தால் அவர்களுடைய பதிவுக்குச் சென்று பார்ப்பது. அது போலவே, அவருடைய பதிவுக்கு போய்ப பார்க்கலாம் என்று பார்த்தால் அங்கு எனக்கு அற்புதமான கவிதை மட்டும் இல்லை, ஒரு இதயத்தில் இருந்து மலர்ந்த பிரார்த்தனை கிடைத்தது. இந்த பிரார்த்தனை தமிழ்த் தாய்க்கு.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே, தேன் வந்து பாயுது காதினிலே என்பார் பாரதி.
தமிழுக்கு அமுது என்று பெயர் என்றார் பாரதி தாசன். திகழோ தமிழே தனது உடலும் உயிரும் என்று சொல்கிறார். அது மட்டுமல்ல, தமிழ்த் தாயே, நான் உன் சேயாக பிறக்க வேண்டும் என்கிறார்.
இவர் உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவும் தமிழ், தமிழ் எனக் கூவிக்கொண்டிருப்பது போல் நான் நினைத்தேன். கவிதையை வெகுவாக ரசித்தேன்.
அதை ஒரு ராகத்தில் பாடவேண்டும் எனத் தோன்றியது. பாடவும் செய்தேன்.
ஆம். அது யதுகுல காம்போஜி என்னும் கர்நாடக சங்கீத மெட்டு.
இதோ அந்த பாடல் இல்லை. இது ஒரு சங்க நாதம்.
. நீங்களும் ரசியுங்கள்.
தாயே தமிழே!
உயிராய் உடலாய் என்னுள்
உருவம் கொண்டாய் தமிழே!
செயலாய் சொல்லாய் இருந்து
என்னை ஆளும் தமிழே!
தாயாய் இறையாய் இருந்து
என்னைக் காப்பாய் தமிழே!
சேயாய் மகளாய் மீண்டும்
பிறக்க வேண்டும் தமிழே!
http://vannamum-ennamum.blogspot.com/
தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அய்யா.
ReplyDeleteஇயற்சீர் ஆசிரிய மண்டிலத்தில் எழுதிய வரிகளுக்கு,தங்களின் குரலில், மொட்டில் கோட்பதற்கு நான் உண்மையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அய்யா
மீண்டும் மீண்டும் தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி அய்யா
அன்புடன்
திகழ்