Pages

Monday, March 24, 2008

ஆத்திசூடிஅறங்செய விரும்பு

ஆத்திசூடி என்றாலே முதல் 10 வரிகள் மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது.
ஒளவை பிராட்டி தமிழ் மக்களுக்குத் தந்த தங்கப் பேழை இது.

நல் வாழ்வு வாழ்ந்திட நல்லுரை வழங்கிடும் இந்த 106 வரிகளும் எல்லாபபள்ளிகளிலும் பாடத்தொகுப்பினில் அமைதல் அவசியம்.

நேற்றும் ஒரு வலைப்பதிவில் பார்த்தேன். ஏதோ போட்டியாம். அதில் பங்கெடுத்துக்கொள்ள அறஞ்செய விரும்பு முதல் 10 வரிகளைத் தந்து விட்டு, அதற்கு மேல் எங்கு இருக்கிறது
எனக் கேட்டிருக்கிறார்கள். அத்தனையும் இரவு 12 மணிக்கு மேல் உட்கார்ந்து
தட்டச்சு செய்து அதை பின்னோட்டமாகத் தந்தேன்.
அதற்கும் போட்டி முடிந்துவிட்டதால், அதற்குரிய ஈடுபாடும் குறைந்துவிட்டது
போலும் !!

என்னுடைய இந்த வலைப்பதிவின் முதல் பதிவே 'அறஞ்செய விரும்பு " தான்.
மற்ற வரிகள் இதோ !!
12. ஒளவியம் பேசேல்.
13. அ:கம் சுருக்கேல்.
14. கண்டு ஒன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. (இ)டம்பட வீடு எடேல்.
19. (இ) ணக்கம் அறி ந்து இணங்கு.
20. த ந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித்து உண்ணேல்.
24. (இ)யல்பு அலாதன் செயேல்.
25. (அ) ரவம் ஆட்டேல்.
26. (இ)லவம்பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன் செயேல்.
29. இளமையில் கல்.
30. அறனை மறவேல்.
31. அன ந்தல் ஆடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப்பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41.கொள்ளை விரும்பேல்.
42. கோது ஆட்டு ஒழி.
43. சக்கர நெறி நில்.
44. சான்றோர் இனத்து இரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திரு ந்தச்செய்.
50. சேரிடம் அறி ந்து சேர்.
51. சைஎனத் திரியேல்.
52. சொல்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோன் எனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக்கு அடிமைசெய்.
57. தீவீனை அகற்று.
58. துன்பத்திற்கு இடம்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வம் இகழேல்.
61. தேசத்தோடு ஒத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி.
66. நாடு ஒப்பன் செய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல். 70. நூல்பல கல். 71. நெற்பயிர் விளை. 72. நேர்பட ஒழுகு.
73. தைவினை நணுகேல். 74. நொய்ய உரையேல். 75. நோய்க்கு இடம்கொடேல்.
76.பழிப்பன் பகரேல். 77.பாம்பொடு பழகேல். 78. பிழைபடச் சொல்லேல். 79. பீடுபற நில். 80. புகழ் ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தி உண். 82. பெரியாரைத் துணை கொள். 83. பேதைமை அகற்று. 84. பையலோடு இணங்கேல். 85. பொருள்தனைப் போற்றி வாழ். 87. மனம் தடுமாறேல். 88. மாற்றானுக்கு இடம்கொடேல். 89. மிகைபடச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுகத்து நில்லேல்.92. மூர்க்கரோடு இணங்கேல். 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள். 95. மைவிழியார் மனையகல். 96. மொழிவது அற வழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாது முன்கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெற நில். 102. உத்தமனாய் இரு.
103. ஊருடன் கூடிவாழ். 104. வெட்டு எனப் பேசேல். 105.வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓரம் சொல்லேல்.

8 comments:

 1. எனக்கும் இப்போதுதான் தெரியும். நன்றி சார்.

  ReplyDelete
 2. //ஙப்போல் வளை.//
  யப்பா, இவ்வளவு வளைவா?
  :-)

  ReplyDelete
 3. தருவித்தமைக்கு நன்றிகள்!

  ReplyDelete
 4. ஐயா
  இதுவே அழகாக ஃபிளாசில் குரலுடன் கொடுத்துள்ளார்கள்.
  இங்கு பார்க்கவும்.
  இன்றைய ஸ்பெசல் பகுதியில் இருக்கு.

  ReplyDelete
 5. ஐயா,

  இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன், ஆன்மிகம் இலக்கியம் ஆகியவற்றில் உங்கள் ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது.

  உங்கள் பதிவை தமிழ்மண திரட்டியில் இணைத்தால் பலரும் படித்து மகிழ்ந்து பாராட்டுவார்கள்.

  ReplyDelete
 6. என் தந்தைக்கு அப்புறம், ஙப் போல் வளையை இப்போதுதான் பார்க்கிறேன்.

  உங்களுக்கும் ஒரு பதிவு உண்டு என்று இன்றுதான் தெரிந்தது.

  மிகவும் இனிமையாக ,உணர்வு பூர்வமாக இருக்கிறது உங்கள் பதிவு.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. சில நாட்களுக்கு முன் வள்ளுவனை வாழ்த்திக் (குறள்வெண்பாவிலேயே) சில குறள்களைச் செய்தேன்.
  அதிலொன்று:-

  சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்
  ஈரடி போதும் இவர்க்கு!

  என்று எழுதினேன்.

  அவ்வையின் இரண்டிரண்டு சொற்களையுடைய ஆத்திச் சூடியைப் பார்க்கின்ற போது இப்படி மாற்றிப் பாடத்தோன்றியது!

  இருவரியால் பாரளந்தான் இன்குறட் றேவன்
  இருசொல்லே போதும் இவட்கு!

  அய்யா! நான் கூறியது சரிதானே?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி