Pages

Saturday, October 13, 2007

ஏதாவது ஒரு அடைக்கலம்

மனிதராய்ப்பிறந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஏதாவது ஓர் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டி எதையாவது மனிதன் நாடுகிறான். சிறிது நாள் சென்ற பின்னே மற்றோர் பயம் பற்றுகிறது. முன்னைய அடைக்கலம் இப்போதைய பயத்தினை அகற்றுவதில்லை. புதியதென ஒரு அடைக்கலத்தைத் தேடி நிற்கிறான்.

இவ்வாறாக வாழ் நாள் முழுதுமே ஏதாவதொரு பயம், ஏதாவது ஒரு அடைக்கலம் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறான். இவனுடைய பயங்களுக்கு என்றுதான் நிரந்தர தீர்வு வருமோ ?

இது என்னுடையது என்ற மன உணர்வு உள்ளவரை, பயம் நீங்காது. இந்த பொருள் நமதல்ல, இந்த உறவு நிலைத்ததல்ல, இந்த தேகம் நிரந்தரமல்ல என்ற உணர்வு ஓங்கி நிலைகொள்ளூம்போதுதான், மனிதன் கவலை ஒழிந்து, பயம் நீங்கி, உண்மையான மெய்யறிவினைப் பெறுகிறான்.

மாணிக்கவாசகர் சொல்லுவார்:

" அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே....."
உடல், பொருள், ஆவி எல்லாமே அந்த ஈசனிடம் அர்ப்பணித்தோருக்கு வேறேதும் அடைக்கலம்தான் தேவையோ ?

5 comments:

  1. Very nice and thought provoking.

    ReplyDelete
  2. உணர்வு மட்டுமிருந்தால் போதுமா? புரிதல், புரிந்து அறிதல், அறிந்து நடத்தல் தேவையாயிற்றே.

    ReplyDelete
  3. ///இது என்னுடையது என்ற மன உணர்வு உள்ளவரை, பயம் நீங்காது. இந்த பொருள் நமதல்ல, இந்த உறவு நிலைத்ததல்ல, இந்த தேகம் நிரந்தரமல்ல என்ற உணர்வு ஓங்கி நிலைகொள்ளூம்போதுதான், மனிதன் கவலை ஒழிந்து, பயம் நீங்கி, உண்மையான மெய்யறிவினைப் பெறுகிறான். //

    manathukku maithi thanda varikal

    ReplyDelete
  4. //உணர்வு மட்டுமிருந்தால் போதுமா? புரிதல், புரிந்து அறிதல், அறிந்து நடத்தல் தேவையாயிற்றே.//

    காட்டாறு வீட்டுள்ளே வந்துள்ளது. வரவேற்போம்.

    உணர்வு என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை என்ன என்று பார்த்தீர்களா?
    "ஓங்கி" என உள்ளது. ஒரு எண்ணம் ஓங்கும்போது, மற்றவைகள் ஒடுங்குகின்றன.
    (உதாரணமாக, (1) அம்மா, அப்பா,அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, மாமா, மாமி எல்லோருமே நம்மிடம்
    அன்பு செலுத்துபவர்கள்தாம். ஏன் பின் அத்தையை மட்டும் செல்ல அத்தை என்று அழைக்கிறோம். அவர் காட்டிய அன்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மற்றோர் அன்பு பின்னிலை அடைகிறது. (2) ஏதேனும் ஒரு காரியம் ( Job ) நன்றாக நீங்கள் செய்ததால் அலுவலகத்தில் உள்ள எல்லோரும் உங்களைப் பாராட்டுகிறார்கள் எனக்கொள்வோம். அத்தனை பேர் பாராட்டியிருப்பினும் உங்கள் நெஞ்சில் இருப்பவர் என்ன சொன்னார், என்ன சொல்கிறார் அல்லது என்ன சொல்லப்போகிறார் என்றுதானே உங்கள் மனம் எதிர்பார்த்து நிற்கிறது. (3) ஒரு விருந்துக்கு செல்கிறீர்கள். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த dry குலோப்ஜானை நீங்கள் வெகு நாட்கள் மறக்கவே முடிவதில்லை. இதெல்லாம் ஏன்? ஒரு எண்ணம் மேலோங்கும்போது, அந்த எண்ணம்பால் அல்லாத மற்ற உணர்வுகள் எல்லாமே ஒடுங்குகின்றன அல்லது (அந்த எண்ணம் ஓங்கி நிற்கும் வரை
    பின் வாங்குகின்றன்.)
    இந்த ஓங்கிய எண்ணத்தின்பால் விளைந்த உணர்வு மேலோங்கி நிற்கும் காலத்தே, நாம் எல்லோருமே அந்த உணர்வு சார்ந்த பேச்சுக்கள், செயல்கள் தான் புரிகிறோம்.
    ஓங்கிய உணர்வில் மனம் நிலைத்து நிற்கும் போது, (concentrated activity in full measure)
    அந்த உணர்வு புரிபடத் துவங்குகிறது. அதிலேயே நிலைத்து நில்லுங்கள்.
    அந்த உணர்வு நன்றாக ப்புரிகிறது. அது மட்டுமல்ல, புரிவதால் அதன் லாப நட்டங்களை எடை போட்டு
    அந்த வழியாகவே நடந்திட மனம் உந்தப்படுகிறது. பின்னே வருவது அந்த உணர்வு சார்ந்த பேச்சுக்கள் தான்,
    பேசியவுடன், பேசிய பேச்சினை செயலாக்கவேண்டும் என்ற துணிபு தான் மேலோங்கும் . இது வெள்ளிடைமலை.

    ஆகவே, " நான் என்பது இல்லை " என்னும் உணர்வு தான் விதை. அதை விதைத்து எரு ( concentration ) இட்டு , நீர் ஊற்றி ( meditation on one single thought) கதிரவன் ஒளி பட ( away from the darkness of other impure thoughts ) வளர விட்டோமானால், மெய்யறிவு விளங்கும் என்பதில் ஐயமில்லை.
    புரிதல், புர்ந்து நடத்தல் எல்லாமே உணர்வு மேலோங்குகையில் தானே பின் தொடரும்.
    அன்புடன்,
    சுப்பு ரத்தினம்
    you may visit at your leisure also
    http://meenasury.googlepages.com/home
    http://thesilentzonewithin.spaces.live.com

    ReplyDelete
  5. அருமையாக அழகாக எடுத்துச் சொன்னீர்கள். வேறு வேறு கருத்தின் படி நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் உங்கள் விளக்கம் அருமை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி