இன்று "திருமந்திரத்தில்" உள்ள 2335 வது பாட்டினைப் படிப்போமா?
" இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லது உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராத் தூரமென்
றெல்லை யுணர்ந்தால் உயிர்க்குயிராமே...."
உளதன்றி இலதன்று
இறைவன் எல்லா இடங்களிலும் எப்பொருள்களிலும் நீக்கமின்றி உள்ளவனாய் இருக்கின்றான். இன்ப துன்மங்கட்கு வேறாகி இல்லாதவனாக திகழ்கிறான்.
ஒரு நாடகம் நடக்கும் இடத்தில் விளக்கு ஒளி எங்கும் கலந்து உள்ளது. நாடகத்தை நடத்துகின்றது. அது காண்கிறது. நம்மை நாடகத்தைக் காணச்செய்கிறது.
சோகமான காட்சியில் நாம் அழுகின்றோம். நகைச்சுவைக் காட்சியில் நாம் சிரிக்கின்றோம். காதல் காட்சியில் நாம் மகிழ்கின்றோம். கொலைக்காட்சியில் நாம் அஞ்சுகின்றோம்.
விளக்கொளி அழுவதில்லை. சிரிப்பதில்லை. மகிழ்வதில்லை. அஞ்சுவதில்லை. சுக துக்கத்திற்கு அப்பாலாய் உள்ளது. உடனாகியும் இலதாகியும் விளக்கொளி இருப்பது போல இறைவன் இவ்வுலகில் இருந்தும் இல்லாதவனாகத் திகழ்கிறான்.
இவ்வுலகம் எங்கும் இறைவன் இருப்பான் எனில் உலக சுக துக்கங்கள் அவனைத் தாக்காதோ ?
தாக்காது.
உவர்க்கடலில் பிறந்து வளர்ந்து உவர் நீரைக்குடித்து வாழ்கிற கடல் மீனில் உப்பு ஏறுமோ ? ஏறாது.
அது போலவே இறைவன் ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளான்.
இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன் சார்!
ReplyDeleteதமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளுடன் தங்கள் பதிவை இணைத்துக் கொண்டால், மேலும் அதிக வாசகர் படித்து பயன்பெற உதவியாய் இருக்குமே!