Pages

Friday, March 09, 2007

What is "Righteousness"?

அறம் யாவது என்ன ?

பொறாமை, பேராசை, கோப‌ம், க‌டுஞ்சொல் ஆகிய‌ நான்கு குற்ற‌ங்க‌ளையும் நீக்கி வாழ்வ‌து அற‌மாகும் என‌ வ‌ள்ளூவ‌ர் (Valluvar) கூறுவார். (Righteousness is basically that which rids jealousy, greed, anger, loathful words)

"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், நான்கும்
இழுக்கா இய‌ன்ற‌து அற‌ம்"

மற்றும், "ம‌ன‌த்துக்க‌ண் மாசில‌ன் ஆத‌ல், அனைத்து அற‌ன்" என‌வும் குறிப்பிடுகிறார். (Righteousness springs from a mindset rid of all dirts)

ஆக‌, அற‌ம் என்ப‌து "இதுவ‌ல்ல‌" என‌ச் சில‌ தீய‌ குண‌ங்க‌ளைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், அற‌ம் என்றால் இதுதான் என‌ எங்கே சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?

அற‌ நெறிச்சார‌ம் என்ற‌ ப‌ண்டைய‌ நூலில், அறத்தின் வ‌ழியாய் அமையும் ப‌த்து ப‌ண்புக‌ள் யாவை என‌ அழ‌காக‌ தொகுத்து த‌ரப்ப‌ட்டுள்ள‌து.

பார்ப்போமா?

"மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, த‌வ‌ம், அட‌க்க‌ம்,
செம்மை, ஒன்று இன்மை, துற‌வுடைமை,
‍ ந‌ன்மை,திற‌ம்பா விர‌த‌ம் த‌ரித்த‌லோடு -
இன்ன‌அற‌ம் ப‌த்தும் ஆன்ற‌ குண‌ம்."

உண்மை பேசுத‌ல்,(Truthful words) பொறுமை காத்த‌ல்,(patience) பெருமைப‌ட‌ வாழ்த‌ல் (magnanimity), த‌வ‌ம் (penance), அட‌க்க‌ம் (humility), ந‌டு நிலைமை, (unbiased judgmental level)த‌ன‌க்கென‌ ஒன்றும் வைத்துக்கொள்ளாது பொது ந‌ன்மைக்காக‌வே உழைத்து ஈட்டிய‌ பொருளை செல‌விடுத‌ல்,(not to keep even one's wealth for personal gains but to spend it for welfare of community) எதிலும் ப‌ற்று இலாது இருத்த்ல்,(detachment) ந‌ல்ல‌ன‌ எதுவோ அதை துணிந்து செய்த‌ல்,(to steer to do what one feels as right), த‌ன் நிலைகள், கொள்கைக‌ள் யாவ‌ற்றையும் காலத்திற்கேட்ப, மாற்றாது க‌டைப்பிடித்த‌ல்,(to stick to one's own principles,even during adversity), இவை தான் அறம் .

ஐநூறு ஆண்டுக‌ட்கு முன்னே சொல்ல‌ப்பட்ட‌து இது.

இன்றைய‌ கால‌ ந‌டைமுறைக்கு, அர‌சிய‌ல், பொருளாதார‌ வாழ்விற்கு ஒத்து வ‌ருமா என‌ ந‌ம‌க்கு ஐய‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ற்கையே.

1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி