Pages

Sunday, March 18, 2007

The right and Just Use of one's tongue.

பொறிகள் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு ன்றியமையாதவை.
All senses of perception are essential for man, to lead his day-to-day life.

அப்பொறிகள் யாவும் நன்றாக அமைந்து நன்றாக செயல்பட்டாலொழிய மனிதன் இயல்பாக வாழ்வது கடினம். These senses of perception are to be anatomically well. They also need to perform well for anyone to live a life of quality.

ஆயினும் இப்பொறிகளை கட்டவிழ்த்து விடின் அவை மனிதனைத் தீய எண்ணங்களுக்கும், தீய சொற்களுக்கும் தீய செயல்களுக்கும் இட்டுச்சென்றுவிடும். ஆகையால் புலன்களை அடக்கி வாழ்வதே நன்னெறியாகும். However, if one does not have control over these five senses, it is quite probable that they may lead man to wicked deeds and live a unethical life. It is hence ethical to have these senses under one's control.

பொறி என்பவை ஐந்தாம். உடல், வாய், கண், மூக்கு, காது ஆகியவை.
The five senses of Perception are skin, tongue, eye, nose and ear.
இந்த பொறிகளின் தன்மைகளை புலன் எனச் சொல்கிறோம்.
உண்ர்வது, சுவைப்பது, பார்ப்பது, நுகர்வது, கேட்பது எல்லாம் பொறிகளின் தன்மை எனப்படும்.

பொறிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கருமங்களைச்செய்யும் இயல்புடையவை.
உதாரணமாக, சுவைப்பது நா. நா பேசுவதிற்கும் முக்கிய உறுப்பாம்.
Each sense of perception does more than one job. For instance, the tongue aids in tasting the food as well as helping speak.

நாவில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சுவையை உண‌ரும் மொட்டுக‌ள் (buds) உள்ள‌ன‌. க‌ச‌ப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உவ‌ர்ப்பு ஆகிய‌ ஆறு வ‌கையான‌ சுவைக‌ளையும் உடன் உண‌ர்ந்து தேவைக்கேற்றவாறு உண்ண உறு துணையாய் இருப்பது நாவே. There are taste buds in tongue which convey the right taste and aid in the intake of the right food needed for one.

ஆயினும் நாவின் மற்றோர் சிறந்த பணி பேசுவது. நற்சொற்களைப் பேசி இறைவன் நாமத்தினை என்னேறமும் போற்றிப்புகழ்ந்து பேசுவதே பாடுவதே நாவின் முக்கிய வேலை என்பார்.
Nevertheless, the more important job of the tongue would be to speak only such words as to create an environment which helps everyone around. To talk of His Greatness, to speak of His Glory and to sing songs of His glory would be the tongue's prime job.

அறனெறிச்சாறம் கூறுவதைப்பார்ப்போமா?
The epic Aranericharam summarizes the vital function of tongue as follows:

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளி மதுரம்
உப்புஇரதம் கொள்வன நாஅல்ல ‍‍ தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.

Let not the function of tongue be JUST to distinguish and convey different tastes like sweet, bitter, hot etc.; for, verily, the tongue exists to extol His Glory who has won over all the five senses of perception.




No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி