இறைவன் திடீரென ஒரு நாள் உங்கள் முன்னே வருகை தந்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டால் என்ன கேட்பீர்கள் ?
Suppose God were to appear before you one day and ask you, "what do you want?" , what will you reply?
உண்மையைச்சொல்லப்போனால், நாம் அந்த ஒரு நிகழ்வு நடக்கும் என நினைத்து அதற்கான ஆயத்தினைச் செய்யவில்லை .
To be honest, to ourselves, most of us do not believe that such an event would ever happen. Possibly, on that pretext, we are never prepared for such an event.
ஏன் என்றால் கடவுள் நம் முன்னால் வருவார், வரக்கூடும் என நம்மில் பலர் நம்புவதில்லை.
We hardly believe that God will appear before us, when we introspect what we do.
தமிழ் நாட்டின் சிறந்த பாடகர் ஒருவர் நாகூர் அனிபா அவர்கள்.அவர் பாடுகிறார்:
One of the foremost singers of Tamil Nadu, India, Nagoor Hanifa sings:
இறைவனிடம் கையேந்துங்கள் = அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை.
(Stretch your hands before God. He never says No.)
கோவிலுக்குச் செல்கிறோம். மற்ற தவத்திருத்தலங்களுக்குச் செல்கிறோம். கடவுள் முன்னே நின்று கண்களை மூடிக்கொண்டு நம்மில் பலர் மனம் உருக கண்களில் நீர் பெருக பிரார்த்திக்கிறோம். கடவுள் நமக்கு வேண்டியதை த் தருவார் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையிலே வீடு திரும்புகிறோம். அந்த நம்பிக்கையிலேயே வாழ்கிறோம். ஆயினும் ஏதேனும் ஒரு நாள் இறைவன் நம் முன்னே பிரத்யக்ஷமாகி என்ன வேண்டும் என க்கேட்பான் என நாம் நினைத்துப்பார்ப்பதில்லை. அந்த நிகழ்வுக்கு நாம் தயாராக இல்லை. (உண்மையைச்சொல்லப்போனால், நாம் நடந்து கொள்ளும் விதத்தை நாமே மனச்சாட்சியின் கண் வழியே பார்க்கும்போது, கடவுள் நமக்கு முன் வருவான் என தோன்ற வில்லை.)
இருப்பினும், ஒருவேளை கடவுள் வந்து விட்டால்,உனக்கு என்ன வேண்டும் என கேட்டுவிடின், என்ன கேட்பது ?
நாகூர் அனிபா அவர்கள் மிகவும் அழகாக மற்றொரு பாடலில் சொல்கிறார்.
அதன் கருத்து:
இறைவா ! நீ இதுவரை எனக்கு கொடுத்ததிற்கே நன்றி சொல்ல எனது எஞ்சிய ஆயுட்காலம் போதாது. அவ்வாறு இருக்க, இன்னும் நான் என்ன கேட்பது " என்று...
Oh God! For All the things you gave me so long, I do not have enough time left in my life to thank You. What else can I ask You ?
மிகவும் அற்புதமான பாடல்.
உலகத்தமிழர் யாவரும் ரசித்து உளம்மகிழ்ந்த பாடல்.
கருத்து ஆவது..
போதும் என்ற மனம் வரவேண்டும்.
இறைவன் கொடுத்த்ததை வைத்து நல்ல வாழ்வு வாழவேண்டும். அது வேண்டும், இது வேண்டும் என ஆசைப்பட்டு வாழ்வின் அமைதியை இழக்கக்கூடாது.
We must live an honest ethical life through whatever we have been given by God. To desire for more and more is just losing our own mental peace and tranquility.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதெனின் அதெனின் இலன்...
என்பது வள்ளூவப்பெருந்தகையின் பொய்யாமொழியாம்.
One who is rid of thoughts of "what is this? what is this?" is also rid of the miseries that flow out of acquiring those things.
ஆசைப்படுவதனால், இறைவனின் காலடிகளை அடைய வேண்டும் என ஆசைப்படவேண்டும்.
If ever to desire for anything, desire for reaching the Bliss of the Almighty.
இறைவன் சன்னதி, இறைவனது பாத நிழல் எவ்வாறு இருக்கும்?
" மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே"
குற்றமில்லாத ஸ்வரங்களுடன் வாசிக்கப்படும் வீணை,மாலை நேரம், தென்றல் வீசும அந்த வேநிற்காற்றில் ஓர் தடாகம் (குளம்)அதன் கரையிலே அமர்ந்து அங்கே வண்டுகளின் ரீங்காரம் கேட்டால் எப்படி உணருவோமோ அது போன்றதாம் இறைவனின் நிழல்.
காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Sunday, March 25, 2007
Sunday, March 18, 2007
The right and Just Use of one's tongue.
பொறிகள் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு ன்றியமையாதவை.
All senses of perception are essential for man, to lead his day-to-day life.
அப்பொறிகள் யாவும் நன்றாக அமைந்து நன்றாக செயல்பட்டாலொழிய மனிதன் இயல்பாக வாழ்வது கடினம். These senses of perception are to be anatomically well. They also need to perform well for anyone to live a life of quality.
ஆயினும் இப்பொறிகளை கட்டவிழ்த்து விடின் அவை மனிதனைத் தீய எண்ணங்களுக்கும், தீய சொற்களுக்கும் தீய செயல்களுக்கும் இட்டுச்சென்றுவிடும். ஆகையால் புலன்களை அடக்கி வாழ்வதே நன்னெறியாகும். However, if one does not have control over these five senses, it is quite probable that they may lead man to wicked deeds and live a unethical life. It is hence ethical to have these senses under one's control.
பொறி என்பவை ஐந்தாம். உடல், வாய், கண், மூக்கு, காது ஆகியவை.
The five senses of Perception are skin, tongue, eye, nose and ear.
இந்த பொறிகளின் தன்மைகளை புலன் எனச் சொல்கிறோம்.
உண்ர்வது, சுவைப்பது, பார்ப்பது, நுகர்வது, கேட்பது எல்லாம் பொறிகளின் தன்மை எனப்படும்.
பொறிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கருமங்களைச்செய்யும் இயல்புடையவை.
உதாரணமாக, சுவைப்பது நா. நா பேசுவதிற்கும் முக்கிய உறுப்பாம்.
Each sense of perception does more than one job. For instance, the tongue aids in tasting the food as well as helping speak.
நாவில் பல்வேறு இடங்களில் சுவையை உணரும் மொட்டுகள் (buds) உள்ளன. கசப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு ஆகிய ஆறு வகையான சுவைகளையும் உடன் உணர்ந்து தேவைக்கேற்றவாறு உண்ண உறு துணையாய் இருப்பது நாவே. There are taste buds in tongue which convey the right taste and aid in the intake of the right food needed for one.
ஆயினும் நாவின் மற்றோர் சிறந்த பணி பேசுவது. நற்சொற்களைப் பேசி இறைவன் நாமத்தினை என்னேறமும் போற்றிப்புகழ்ந்து பேசுவதே பாடுவதே நாவின் முக்கிய வேலை என்பார்.
Nevertheless, the more important job of the tongue would be to speak only such words as to create an environment which helps everyone around. To talk of His Greatness, to speak of His Glory and to sing songs of His glory would be the tongue's prime job.
அறனெறிச்சாறம் கூறுவதைப்பார்ப்போமா?
The epic Aranericharam summarizes the vital function of tongue as follows:
கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளி மதுரம்
உப்புஇரதம் கொள்வன நாஅல்ல தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.
Let not the function of tongue be JUST to distinguish and convey different tastes like sweet, bitter, hot etc.; for, verily, the tongue exists to extol His Glory who has won over all the five senses of perception.

Friday, March 09, 2007
What is "Righteousness"?
அறம் யாவது என்ன ?
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களையும் நீக்கி வாழ்வது அறமாகும் என வள்ளூவர் (Valluvar) கூறுவார். (Righteousness is basically that which rids jealousy, greed, anger, loathful words)
"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"
மற்றும், "மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன்" எனவும் குறிப்பிடுகிறார். (Righteousness springs from a mindset rid of all dirts)
ஆக, அறம் என்பது "இதுவல்ல" எனச் சில தீய குணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், அறம் என்றால் இதுதான் என எங்கே சொல்லப்பட்டிருக்கிறது ?
அற நெறிச்சாரம் என்ற பண்டைய நூலில், அறத்தின் வழியாய் அமையும் பத்து பண்புகள் யாவை என அழகாக தொகுத்து தரப்பட்டுள்ளது.
பார்ப்போமா?
"மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, தவம், அடக்கம்,
செம்மை, ஒன்று இன்மை, துறவுடைமை,
நன்மை,திறம்பா விரதம் தரித்தலோடு -
இன்னஅறம் பத்தும் ஆன்ற குணம்."
உண்மை பேசுதல்,(Truthful words) பொறுமை காத்தல்,(patience) பெருமைபட வாழ்தல் (magnanimity), தவம் (penance), அடக்கம் (humility), நடு நிலைமை, (unbiased judgmental level)தனக்கென ஒன்றும் வைத்துக்கொள்ளாது பொது நன்மைக்காகவே உழைத்து ஈட்டிய பொருளை செலவிடுதல்,(not to keep even one's wealth for personal gains but to spend it for welfare of community) எதிலும் பற்று இலாது இருத்த்ல்,(detachment) நல்லன எதுவோ அதை துணிந்து செய்தல்,(to steer to do what one feels as right), தன் நிலைகள், கொள்கைகள் யாவற்றையும் காலத்திற்கேட்ப, மாற்றாது கடைப்பிடித்தல்,(to stick to one's own principles,even during adversity), இவை தான் அறம் .
ஐநூறு ஆண்டுகட்கு முன்னே சொல்லப்பட்டது இது.
இன்றைய கால நடைமுறைக்கு, அரசியல், பொருளாதார வாழ்விற்கு ஒத்து வருமா என நமக்கு ஐயம் ஏற்படுவது இயற்கையே.

Subscribe to:
Posts (Atom)