http://www.musicindiaonline.com/music/devotional/s/diety.7/language.8/
Click on the above line, and select and listen to songs by S.P.Balasubramanian
இந்த நாள் மிக்க நல்ல நாள். வருடம் முழுவதும் சிவ நாமத்தை ஜபிக்க முடியாது போனாலும் இந்த சிவராத்திரி நாள் அன்றாவது இறைவன் நாமத்தை உச்சரித்தல் வேண்டும்.
சிவாய நமஹ என்பது ஸூக்கும பஞ்சாட்சரம்.
நம சிவாய என்பது தூல பஞ்சாட்சரம்.
ஸ்தூலத்தின் உள்ளே ஸூக்சுமம் உள்ளது. ஆக நமது உடலையே கோவிலாகக் கொண்டு, உள்ளத்தில் ஒளி விளக்காக இறைவனை நினைவு கொண்டு மனதை ஒரு முகப்படுத்தி ஓம் நம சிவாய என மனதிற்குள்ளே தொடர உச்சரித்தல் நலம்.
அதுவாகி அவனவளாய் எல்லாம் ஆகி
அடி நடுவு முடிவாகிய கண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வ்ண்டாகி சுவையுமாகி
மலராகி மணமாகி மதிக்கவொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டம் எல்லாத் தாங்கி நின்ற அம்மூலமே
அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது.. .தாயுமானவர்.
உபனிடதம் கூறுகிறது...அவன் அங்கு இருக்கிறான். இங்கு இருக்கிறான். தூரத்தில் இருக்கிறான். அருகிலும் இருக்கிறான். பெரிதிலும் பெரிதாக இருக்கிறான். சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறான்.
பாரதி தனது பாட்டுக்களிலே கூறுவான்.
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ..ஒன்றே ஆனாகிலுகனைதூம் சாரும்...அவை அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை.
திருமூலர் கூறுவார்.
உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலுமய் நிற்க்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அன்சும் ஆகி நின்றானே.
ஆகவே எல்லாம் ஆகி எல்லாவற்றிலும் நிறைந்து பரவி பிரகாசித்து அருள் பொழிவது பராபரமே .
பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கடவுளை இன்னார் என்று 28ம் சூத்திரத்தில் வர்ண்ணனை செய்யப்படுவதைப் பார்ப்போம்.
" ஸ ஏஷ பூர்வேஷாம் அபி குரு காலேனாவச் சேதாத்"
அதாவது, இறைவன் கால எல்லைக்குட்படாதவன். எல்லா குருமார்களுக்கும் அவனே குரு"
அவ்வாறு குருவாக் போற்ற்ப்படும் இறைவன் "தனக்கு உவமை இல்லாதான்" எனவும் "வேண்டுதல் வேண்டாமை இலான்" என திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் (கடவுள் வாழ்த்து) குறிப்பிடுதல் காண்க.
குயிற்பத்து என்னும் தில்லையில் அருளிய திருவாசகத்தில் ஒரு விருத்தம் :
"கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின்
பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லின்
சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்
அந்தம் இலான் வரக்கூவாய்."
புலப்படுகிற பிரபஞ்சமாகவும் புலன்களுக்கு அப்பாற் பட்டவனாகவும் இருப்பவன் பரமன் ஒருவனே. அவனுக்கு அன்னியமாக ஒன்றுமில்லை.
இதே கருத்தினை க்கொண்ட உபனிஷத் மந்திரம் :
யஸ்மாத் பரம் ந அபரம் கிந்சிது யஸ்மாது அனீயோர் ந ஜ்யாய: அஸ்திவிருக்ஷ இவ ஸ்தப்த; திவி திஷ்டதி ஏக; தேன இதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்.( மஹா நாராயணோபனிஷதம்...12 13)
யாரைக்காட்டிலும் மேலானதும் வேறானதும் ஏதும் இல்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணியதோ பெரியதோ ஏதுவில்லையோ, அவர் தனிப்பொருள். விருக்ஷம் போன்று அவர் உறுதி பெற்றவர். வான் மகிமையில் அவர் நிலைத்து நிற்கிறார். அந்தப்பரம புருஷணால் இவை யாவும் நிறைந்து இருக்கின்றன.
ஞான சம்பந்தர் கூறுவார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
நான்கு வேதங்கள் யாவும் உன்னைப்புகழும். எல்லாம் உன்னிடத்தில்இருந்து இயங்கும் தன்மையுடையன ஆகையால் மெய்ப்பொருளான உன்னை நாதன் எனவும் நமச்சிவாய எனவும் போற்றுகின்றன.
உன் திருவடிகள் மேல் நாட்டம் கொண்டேன். உன் பணி செய்யும் ஓதுவார் மத்தியிலே மனம் உருகி கண்ணீர் மல்க நமசிவாய நமசிவாய என உன் நாமத்தை ஜபிப்பதே என் உயிரின் மேலான கடமை என உணர்ந்தேன்.
No comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி