மனிதனின் அன்றாற வாழ்க்கையிலே எல்லாமே எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்காது. எல்லாமே தனக்கு வேண்டும் என ஆசைப்படுவதில் பெரிய தவறு இல்லை என சொன்னாலும் கடைசியில் எது தனக்கு மிகவும் முக்கியம் என வரையறுத்துக்கொள்வது மிக அவசியம்.
ஆங்கிலத்தில் Eat the Cake and Have it too என சொல்வார்கள்.
கையிலே கேக் வைத்துக்கொள்ளவேண்டும், அதே சமயம் அதை சாப்பிடவும் வேண்டும் என்றால் முடியுமா ?
அது போல வாழ்க்கையில் ஒன்று வேண்டுமெனில் இன்னொன்றை விட்டுக்கொடுக்கவேண்டித்தான் வருகிறது.
நியாயமான ஆசைகள், விருப்பங்களுக்கே இப்படி என்றால் பேராசை பிடித்தவர் நிலை என்ன?
பொன்னிலும் பொருளிலும் மற்ற சுகங்களிலும் பேராசை கொண்டவர் எதெல்லாம் இழக்க நேரிடும் என்பதை ஒரு நீதி வெண்பா மிக துல்லியமாக எடுத்துரைக்கிறது.
" போற்று குருகிளைஙர் பொன்னசை யோர்க்கு இல்லை.
தோற்றுபசிக்கு இல்லை சுவைபாகம்... தேற்று கல்வி
நேசர்க்கு இல்லை சுகமும் நித்திரையும் காமுகர்தம்
ஆசைக்கு இலைபயம்மானம். "
பணத்தாசை கொண்ட உலோபியர்க்கு நல்ல ஆசிரியர், நல்ல உறவினர் கிடைப்பது அரிது.பசி பசி என அலைபவருக்கு நல்ல சுவை மிகுந்த சமையல் கிடைப்பது அரிது.நல்ல அறிவு பெற விளைவோருக்கு உறக்கம் கிடைப்பது அரிது. கல்வியில் சிறந்து விளங்க முனைவோருக்கு மற்ற இன்பங்கள் கிடைப்பதுஅரிது.காமம் கொண்டவர் ஆசைக்கு அவமான பயம் இல்லை.
எத்துணைக் கருத்தாழம் உள்ள வெண்பா பாருங்கள்.தினமும் ஒரு நீதி நூல் கருத்தினை உள் வாங்கிக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி