Pages

Saturday, February 24, 2007

Your Bodyguard is just "What Good You do to your fellowmen"

அன்புள்ளம் கொண்ட இனிய நண்பர்களே,

இந்த வலைப்பதிவு துவக்கிடும் முதல் பக்கத்திலேயே நான் குறிப்பிட்டது "அறம் செய விரும்பு " என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்ன ஆத்தி சூடியை .விரும்பு எனும் சொல்லுக்கு desire என பொருள் கொள்வின், அந்த விரும்புதலுக்குப்பின்னே ஒருஅழுத்தமான ஆவல், ஒரு தொலை நோக்கு இருக்கவேண்டும். மற்றோருக்கு உதவிட வேண்டும் என்ற ஆசை இருப்பினும், எத்தனை பேருக்கு அந்த ஆசையை உடன் செயல்படுத்திட வேண்டுமென முனைப்பு ஏற்ப‌டுகின்ற‌து...? ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தையே ந‌ம்மில் ப‌ல‌ர் ஒத்திப்போடுகின்ற‌ன‌ர். ந‌ன்றே செய்க‌ அதை இன்றே செய்க‌ என்போர் சான்றோர்.வ‌ள்ளுவ‌ர் கூறுகிறார்:"

அன்று அறிவாம் என்னாது அற‌ம் செய்க‌, ம‌ற்ற‌து
பொன்றும் கால் பொன்றாத்துணை."

இறக்கும்போது ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னாக‌ நிற்ப‌து அற‌ம் ஒன்று ம‌ட்டுமே.


அறநெறிச்சாரம் எனும் வெண்பா வடிவில் அமைந்த ஒரு அற்புதமான நீதி நூல் தமிழ் இலக்கியத்தில் ஓர் பொக்கிஷமாக உள்ளது. ஏறக்குறைய 500 ஆண்டுகட்கு முன்னே சமண மதத்தைச் சார்ந்தவராக கருதப்படும் முனைப்பாடியார் என்பவரால் ‌இயற்றப்பெற்றதாகும். நாயக்கர் மன்னர் காலம் எனச்சொல்லப்படும் 13ம் நூற்றாண்டில் சமயங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு மக்கள் யாவருக்கும் நீதியையும் நேர்மையும் புகட்டிய தமிழ் நூல் இதுவாம்.

அறத்தினை புவியில் பிறந்தோர் யாவரும் உரிய காலத்தில் தம் உயிரோடு உள்ள காலத்திலேயே செய்யவேண்டும் அறத்தினை உடலை வருத்தி உழைத்தாகிலும் செய்யவேண்டும் . பாடலைப் பார்ப்போம்.

" மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்ற்ல் பேதைமை
‍‍ தன்னைத் துணித்தானும் தூங்காது அறம் செய்க ! கூற்ற‌ம்
அணித்தாய் வருதலும் உண்டு."

இளமைக்காலம் மின்னல் போலே,

அது என்றும் நிலைத்து நிற்கும் என நினைத்து பிற்காலத்தில் அறம் செய்வோம் என காலம் தாழ்த்துவது பேதைமை ஆம். யமன் வருவான் எப்போது என யாருக்குத்தெரியும் ?இளமைக்காலத்திலே அவன் வரின் அறம் செய்வது எப்போது ?

ஆகவே தன்னை வருத்திக்கொணடாவது தாமதம் ஏதும் இன்றி உடன் அறச்செயல்களைச் செய்க.

வள்ளுவர் கூறுவார்:

"நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்,
நல்வினை மேற்சென்று செய்யப் படும் "

பேச்சு நின்று விக்க‌ல் மேல் நோக்கி வ‌ருவ‌த‌ற்கு முன்னே ந‌ல்ல‌ க‌ரும‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட‌வேண்டும்.

Lesson:

Never delay doing good things when you are active,
since by the time,
you think of starting,
you may not be.

Sunday, February 18, 2007

Fix your Mind on "What You Want?"

மனிதனின் அன்றாற வாழ்க்கையிலே எல்லாமே எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்காது. எல்லாமே தனக்கு வேண்டும் என ஆசைப்படுவதில் பெரிய தவறு இல்லை என சொன்னாலும் கடைசியில் எது தனக்கு மிகவும் முக்கியம் என வரையறுத்துக்கொள்வது மிக அவசியம்.

ஆங்கிலத்தில் Eat the Cake and Have it too என சொல்வார்கள்.

கையிலே கேக் வைத்துக்கொள்ளவேண்டும், அதே சமயம் அதை சாப்பிடவும் வேண்டும் என்றால் முடியுமா ?
அது போல‌ வாழ்க்கையில் ஒன்று வேண்டுமெனில் இன்னொன்றை விட்டுக்கொடுக்கவேண்டித்தான் வருகிறது.

நியாயமான ஆசைகள், விருப்பங்களுக்கே இப்படி என்றால் பேராசை பிடித்தவர் நிலை என்ன?

பொன்னிலும் பொருளிலும் மற்ற சுகங்களிலும் பேராசை கொண்டவர் எதெல்லாம் இழக்க நேரிடும் என்பதை ஒரு நீதி வெண்பா மிக துல்லியமாக எடுத்துரைக்கிறது.

" போற்று குருகிளைஙர் பொன்னசை யோர்க்கு இல்லை.
தோற்றுபசிக்கு இல்லை சுவைபாகம்... தேற்று கல்வி
நேசர்க்கு இல்லை சுகமும் நித்திரையும் காமுகர்தம்
ஆசைக்கு இலைபயம்மானம். "

பணத்தாசை கொண்ட உலோபியர்க்கு நல்ல ஆசிரியர், நல்ல உறவினர் கிடைப்பது அரிது.ப‌சி ப‌சி என‌ அலைப‌வ‌ருக்கு ந‌ல்ல‌ சுவை மிகுந்த‌ ச‌மைய‌ல் கிடைப்ப‌து அரிது.ந‌ல்ல‌ அறிவு பெற‌ விளைவோருக்கு உற‌க்க‌ம் கிடைப்ப‌து அரிது. க‌ல்வியில் சிற‌ந்து விள‌ங்க‌ முனைவோருக்கு ம‌ற்ற‌ இன்ப‌ங்க‌ள் கிடைப்ப‌துஅரிது.காமம் கொண்ட‌வ‌ர் ஆசைக்கு அவ‌மான‌ ப‌ய‌ம் இல்லை.

எத்துணைக் க‌ருத்தாழ‌ம் உள்ள‌ வெண்பா பாருங்க‌ள்.தின‌மும் ஒரு நீதி நூல் க‌ருத்தினை உள் வாங்கிக்கொள்ளுங்க‌ள்.

Monday, February 12, 2007

Unravelling the Mystery of Omnipresence of Almighty

Listen to Music Dedicated to Deity Shiva ( Thevaram by Odhuvar)
http://www.musicindiaonline.com/music/devotional/s/diety.7/language.8/
Click on the above line, and select and listen to songs by S.P.Balasubramanian

இந்த நாள் மிக்க நல்ல நாள். வருடம் முழுவதும் சிவ நாமத்தை ஜபிக்க முடியாது போனாலும் இந்த சிவராத்திரி நாள் அன்றாவது இறைவன் நாமத்தை உச்சரித்தல் வேண்டும்.

சிவாய நமஹ என்பது ஸூக்கும பஞ்சாட்சரம்.

நம சிவாய என்பது தூல பஞ்சாட்சரம்.

ஸ்தூல‌த்தின் உள்ளே ஸூக்சுமம் உள்ள‌து. ஆக‌ ந‌ம‌து உட‌லையே கோவிலாக‌க் கொண்டு, உள்ள‌த்தில் ஒளி விளக்காக‌ இறைவ‌னை நினைவு கொண்டு ம‌ன‌தை ஒரு முக‌ப்ப‌டுத்தி ஓம் ந‌ம‌ சிவாய‌ என‌ ம‌ன‌திற்குள்ளே தொட‌ர‌ உச்ச‌ரித்த‌ல் ந‌ல‌ம்.















அதுவாகி அவனவளாய் எல்லாம் ஆகி

அடி நடுவு முடிவாகிய கண்ட மாகிப்

பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம்

புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி

மதுவாகி வ்ண்டாகி சுவையுமாகி

மலராகி மணமாகி மதிக்கவொண்ணா

அதுவாரும் அகாரமதே மூலமாகி

அண்டம் எல்லாத் தாங்கி நின்ற அம்மூலமே

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது.. .தாயுமானவர்.

உபனிடதம் கூறுகிறது...அவன் அங்கு இருக்கிறான். இங்கு இருக்கிறான். தூரத்தில் இருக்கிறான். அருகிலும் இருக்கிறான். பெரிதிலும் பெரிதாக இருக்கிறான். சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறான்.

பாரதி தனது பாட்டுக்களிலே கூறுவான்.

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ..ஒன்றே ஆனாகிலுகனைதூம் சாரும்...அவை அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை.

திருமூலர்
கூறுவார்.

உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலுமய் நிற்க்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அன்சும் ஆகி நின்றானே.

ஆகவே எல்லாம் ஆகி எல்லாவற்றிலும் நிறைந்து பரவி பிரகாசித்து அருள் பொழிவது பராபரமே .

பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கடவுளை இன்னார் என்று 28ம் சூத்திரத்தில் வர்ண்ணனை செய்யப்படுவதைப் பார்ப்போம்.

" ஸ ஏஷ பூர்வேஷாம் அபி குரு காலேனாவச் சேதாத்"

அதாவது, இறைவன் கால எல்லைக்குட்படாதவன். எல்லா குருமார்களுக்கும் அவனே குரு"

அவ்வாறு குருவாக் போற்ற்ப்படும் இறைவன் "தனக்கு உவமை இல்லாதான்" எனவும் "வேண்டுதல் வேண்டாமை இலான்" என திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் (கடவுள் வாழ்த்து) குறிப்பிடுதல் காண்க. ‌

குயிற்பத்து என்னும் தில்லையில் அருளிய திருவாசகத்தில் ஒரு விருத்தம் :

"கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின்
பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லின்
சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்
அந்தம் இலான் வரக்கூவாய்."

புலப்படுகிற பிரபஞ்சமாகவும் புலன்களுக்கு அப்பாற் பட்டவனாகவும் இருப்பவன் பரமன் ஒருவனே. அவனுக்கு அன்னியமாக ஒன்றுமில்லை.

இதே க‌ருத்தினை க்கொண்ட‌ உப‌னிஷ‌த் மந்திர‌ம் :

ய‌ஸ்மாத் ப‌ர‌ம் ந அப‌ர‌ம் கிந்சிது ய‌ஸ்மாது அனீயோர் ந‌ ஜ்யாய‌: அஸ்திவிருக்ஷ‌ இவ‌ ஸ்த‌ப்த‌; திவி திஷ்ட‌தி ஏக‌; தேன‌ இத‌ம் பூர்ண‌ம் புருஷேண‌ ஸ‌ர்வ‌ம்.( ம‌ஹா நாராய‌ணோப‌னிஷ‌த‌ம்...12 13)

யாரைக்காட்டிலும் மேலான‌தும் வேறான‌தும் ஏதும் இல்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணிய‌தோ பெரிய‌தோ ஏதுவில்லையோ, அவ‌ர் த‌னிப்பொருள். விருக்ஷ‌ம் போன்று அவ‌ர் உறுதி பெற்ற‌வ‌ர். வான் ம‌கிமையில் அவ‌ர் நிலைத்து நிற்கிறார். அந்த‌ப்ப‌ர‌ம‌ புருஷ‌ணால் இவை யாவும் நிறைந்து இருக்கின்ற‌ன‌.

ஞான சம்பந்தர் கூறுவார்.

காதலாகிக் கசி‍‍ந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நான்கு வேதங்கள் யாவும் உன்னைப்புகழும். எல்லாம் உன்னிடத்தில்இருந்து இயங்கும் தன்மையுடையன ஆகையால் மெய்ப்பொருளான உன்னை நாதன் எனவும் நமச்சிவாய எனவும் போற்றுகின்றன.

உன் திருவடிகள் மேல் நாட்டம் கொண்டேன். உன் பணி செய்யும் ஓதுவார் மத்தியிலே மனம் உருகி கண்ணீர் மல்க நமசிவாய நமசிவாய என உன் நாமத்தை ஜபிப்பதே என் உயிரின் மேலான கடமை என உணர்ந்தேன்.