Pages

Thursday, September 01, 2011

கற்பக விநாயகக்..கடவுளே போற்றி... பாரதி பாடல்.


கற்பக விநாயகக்  கடவுளே போற்றி 
சிற்பர மோனத் தேவன் வாழ்க 
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க 
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன் 
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான் 
சந்திர மவுலித் தலைவன் மைந்தன் 
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம். 
குணமதில் பலவாம் கூறக் கீளீர்.
உட்செவி திறக்கும் அதன்கண் ஒளி தரும். 
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் 
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம் 
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம் 
விடத்தையும் நோவையும் வெம்பகை எதனையும் 
துச்ச மென்று எண்ணித் துயரிலாது இங்கு, 

நிச்சலும் வாழ்த்து நிலைபெற்று ஓங்கலாம். 
அச்சம் தீரும், அமுதம் விளையும். 
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்.
அமரத் தன்மை எய்தவும் 
 இங்குநாம் பெறலாம் இது உணர்வீரே.

மகாகவி சுப்பிரமணிய பாரதி பாடல்.

Sunday, August 21, 2011

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் 
புருஷோத்தம் குரல் பாடுங்களேன்.

இன்று கண்ணன் பிறந்த நாள்.




கிருஷ்ணா நீ பேகனே பாரோ ... சித்ரா பாடுகிறார். 


Monday, August 01, 2011

எண்ணா தேனோ இருக்கின்றாய் !!!

எப்பொழுது என்னை ஆட்கொள்வாய் ? என ஈற்றடியுடன் முடியும் கவிஞர் சிவகுமாரன் கவிதை படித்தபோது எனக்கு திரு மந்திரத்தைத்தான் படிக்கிறோமோ என்ற ஐயம் வந்தது. அங்கெங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாக இருக்கும் அந்த பரம்பொருள் சிவன் என உணர்வின், அந்த
சிவனை ஒரு குறியில் வைத்து வணங்க இயலாது எனச் சொல்ல வந்த ஆசிரியர் :

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும் 
பறக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் 
நிறைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை 
வரித்து வளம் செய் யுமாறு அறியேனே.( திருமூலர் 1773 )

பஞ்ச பூதங்கள் எனப்படும் , நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகிய ஐவற்றிலும் இணைந்து அவையாகவே காட்சி அளிக்கும் சிவன் , கவிஞர்  சிவகுமாரன் சொற்களிலே எங்கெலாம் காட்சி அளிக்கிறான் பாருங்கள்: 

அண்ணா மலையில் அனலானாய் 
   ஆனைக் காவில் புனலானாய் 
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய் 
   மாகாள ஹஸ்தியில்
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய் 
   விந்தைகள்  பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய் 
  எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 

இப்பாடலை நானும் ஒருமுறை பாட வேண்டும் என்ற முனைப்புடன் ஐந்து ராகங்களில் இந்த பத்து பாசுரங்களை பாட முயற்சித்து இருக்கிறேன்.  பாடல் எனது உள்ளம் கவர்ந்த பஜன் சங்கீதத்தில் வல்லவராம் ஜக்ஜித் சிங் அவர்களின் நம சிவாய ஓம் எனும் hymn  உடன் துவங்குகிறது.