Pages

Sunday, June 19, 2016

இதுதானே உன் அப்பா

தந்தையைப் போற்றுவோம் 


அதான் என் அப்பா.
அந்தப் பாடல் 
க்ளிக்குங்கள். கேளுங்கள்.
நன்றி:
லெரா கார்ட்ஸ்

*************************************************************************

எந்த அப்பா வும் இந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருந்திருப்பாரோ !

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்று
அப்பா சொன்னவை:

ஊஹூம். போகக்  கூடாது போகக் கூடாது. நானெல்லாம் உன் வயசுல்லே அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போனதே கிடையாது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏண்டா ! மாட்டுத் தொழுவத்திலா நீ வளர்ந்தே ! கதவைச் சாத்துடா !!
***************************************
காபி உன் உடம்பைக் குட்டிச் சுவராக்கிடும்டா !!
***********************************
சொல்றதைக் கேளுடா...
*****************************************

எதுக்கு என்னைக் கேட்கிறே ! அம்மாவைக் கேளு....!!

*************************************************************

அந்த லைட் எல்லாத்தையும் அணை. 
நான் என்ன உனக்கு பாங்க் லாக்கர் ஆ ?
அப்பப்ப பணம் எடுத்து எலெக்ட்ரிக் பில் கட்ட ?

********************************************************************

தூக்கம் வல்லையா ? 
இந்தா !  சீத்தலைச் சாத்தனார் பத்தி ஒரு  புஸ்தகம் . நான் படிச்சது.
படி. தூக்கம் வர நானும் இப்படித்தான் செஞ்சேன்.

*****************************************************************************
போர் அடிக்குதா !! நான் ஒரு வேலை தரேன். அதைச் செய்.
அந்த இரண்டு சைக்கிளுக்கு காத்து அடிச்சுண்டு வா.

**********************************************************

டேய்! நான் உன் வயசிலே பத்து அடி தண்ணிலே  ஆத்துலே நீஞ்சிப் போயி,
ஸ்கூலுக்கு போய் இருக்கேன்.

*************************************************************
இப்படியே தொனா தொனா  அப்படின்னு பேசிக்கிட்டே வந்தே ! சைக்கிளை நிறுத்தி உன்னை இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.

*******************************************************************

அப்பா !!

உன் ஒவ்வொரு வார்த்தைக்குப்
பின்னே இருந்த 

பொருளை நான் இன்று உணர்கிறேன். 




********************************************************************************
இப்ப சொல்லப்போறது


 அப்பா.

உன்னைப் படைச்ச 
கடவுள்

மலைலேந்து வலிமை .
மரத்துலேந்து மாட்சிமை 
வசந்தத்தின் இளஞ்சூடு இவ் 
வையத்தின் இதயம். 

ஆழ்கடலின் அமைதி. 
அவனி கண்ட அறிவு. 

விண்ணிலே பறக்கும் கருடன் - அதன் 
கண்ணிலே கூர்ந்த பார்வை 
மண்ணிலே எவ்விலக்கையும் அடையும் 
திண்ணமிகு திடம். 

இளவேனில் இதயத்தின்  
வளமான கற்பனைகள். 
சிறு  கடுகின் விதையில் 
உருவாகும் சிற்பங்கள். 

காலத்தின் நித்தியத்தில் - நாம் 
காணாத பொறுமை 
கருமை சூழ் இரவினில் - என்னை 
இரு கரம் கொண்டணைப்பு .

இத்தனையும்  இணைத்து - என் முன் 
இந்தா  என இறைவன் சொல்ல 
இரு கண்கள் திறந்து பார்த்தேன். 
இதுதானே உன் அப்பா என்றார் .



கருத்து: லீரா கார்ட்ஸ். 



அப்பா நீ எங்கிருக்கே ! 
அப்பப்ப ஒரு லெட்டர் போடு. 



He is your hero, guide and friend. He is always there for you with his love. It is now your time to express your love on Father's Day


7 comments:

  1. தூக்கம் வர நானும் இப்படித்தான் செஞ்சேன்.// :-)))

    ReplyDelete
  2. //அப்பா நீ எங்கிருக்கே?
    அப்பப்ப ஒரு லெட்டர் போடு.. //

    என்ன நேர்லேயே வர்றையா?
    கொஞ்சம் இரு; என்னில் பாதியைக்
    கேட்டுச் சொல்றேன்..

    இவ உனக்கேன் சிரமம்
    என்கிறாள் அப்பா.
    என்ன, நீங்களும் அம்மாவிடம்
    கேட்டுச் சொல்றீங்களா...

    ஓ! அம்மா ஒருதடவை போய்ப்
    பார்த்துட்டு வந்துடலாம்ன்னு சொல்றாளா?..
    கொஞ்சம் இரு; இவ கிட்டே கேட்டுடறேன்

    சரி, அப்பா.. நீங்க ரெண்டு பேரும் வந்திடுங்கோ..
    இவளும் இவ அம்மாவைப் பாக்கணுமாம்
    நீங்க இங்க வர்றத்தே
    நான் அங்கே போயிட்டு
    நீங்க கிளம்பறத்தே
    நானும் திரும்பிடறேங்கறா..

    என்னப்பா.. லெட்டரே போதுமா?
    சரிப்பா.. அதான் பெஸ்ட்.
    எதுக்கு வீண் சிரமம்?..
    லெட்டரே போதும்... .

    ReplyDelete
  3. தந்தையைப்போற்றிய நினைவலைகள் அருமை தாத்தா தந்தையர் தினவாழ்த்துகள் நானும் தந்தையைக்குறித்து பதிவு எழுதியுள்ளேன்

    ReplyDelete
  4. நல்ல பதவி. தந்தையர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. >>> அப்பா நீங்க எங்கிருக்கீங்க..
    அப்பப்ப ஒரு லெட்டர் போடுங்க!... <<<

    என்னவென்று சொல்வது - ஐயா!..
    இதயம் கனக்கின்றது..

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு....

    தந்தையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தந்தையர் தின வாழ்த்துக்கள் அருமையான பதிவு.
    என் அப்பா அடிக்கடி கனவில் வந்து என்னுடன் பேசுவார்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி