Pages

Tuesday, May 10, 2016

குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை

தமிழகத்தில் இன்னமும் ஏழே நாட்களில் பொது தேர்தல் நடக்க இருக்கின்றது.

 யார் ஆட்சியைப் பிடித்தாலும் சரி, ஆண்டாலும் சரி,  தமிழ் மக்கள் முன்னே, குறிப்பாக, தமிழ்ப் பெண்டிர் முன்னே இது ஒரு பிரச்னை தான் முழுமையாகத் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்து நிலவி இருக்கிறது.

அதுதான் மதுவிலக்குப் பிரச்னை.

பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பள்ளி முடிந்ததும் டாஸ்மாக் கடை முன்னே நிற்கும் காட்சி பார்க்க, மனம் நொந்து போகிறது.  கல்லூரி மாணவிகள் சிலர் குடிப்பதை ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகக் கருதும் நிலையும் பள்ளி மாணவிகள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலையையும் இந்நாட்களில் படிக்க வேதனைக்கு எல்லை இல்லை.

கடந்த ஐம்பது வருடங்களில் நாலைந்து தலை முறைகள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி தம் வாழ்வையும் மதிப்பையும் கௌரவத்தையும் இழந்து இருப்பது வெள்ளிடை மலை.

இதற்கு ஒரு விடியல் உண்டா !!



ஆஸ்திரிலேயா நாட்டில் வாழும் தமிழ் வலை உலகப பதிவாளர்
திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
தமிழ் மக்களுக்காக ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

குடிக்கும் குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை .


திருமதி கீதா மதிவாணன் அவர்கள் கவிதை
அதை நான் மதுரைத் தமிழன் அவர்கள்  பதிவிலே கண்டேன்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


இன்றைய தமிழ் நாட்டுச் சூழ்நிலையிலே இதை விட ஒரு சிறப்பான கவிதை இருக்க முடியாது.

இந்த அற்புத மனதைத் தொடும் கவிதையை
சுப்பு தாத்தா பாடுகிறார்.

திருமதி கீதா மதிவாணன் அவர்கள் பாடுவதற்கு அனுமதி தருவார் என
எதிர்பார்க்கிறேன்.

தமிழ் நாடு முன்னைய சிறப்பு பெற வேண்டுமெனின்
குடிப்பழக்கம் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

வரும் அரசு இதைச் செய்யவேண்டும்.

தமிழ்ப் பெண்டிரைக் காப்பாற்ற வேண்டும்.

Sunday, May 08, 2016

அன்னையர் தினம் இன்று.



இன்று அன்னையர் தினம்.
உடன் பிறவா சகோதரர் புலவர் இராமானுசம் இயற்றிய அற்புதக்கவிதை.
இங்கே 
இது போன்ற கவிதை தமது மகன் எழுத அந்த தாயும் எத்துணை புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

கண்களிலே நீர் மல்க பாடலைப் பாடினேன்.
எல்லாம் அவர் என்றும் பாடி மகிழும் அந்த கோவிந்தனின் அருள்.



இங்கும் அந்தப் பாடலைக் காணலாம். 

Wednesday, May 04, 2016

921 முதல் 930 வரை.

தினமும் ஒரு குறள் அதிகாரம் முழுவதும் படித்து அதன் பொருளை உள்வாங்கும் தினசரிப் பழக்கம்  என்னிடம் பல வருடங்களாக இருக்கிறது. 
நான் வரிசையாக போவதில்லை.
புத்தகத்தைத் திறப்பேன். 
எந்த அதிகாரம் கண்களுக்கு எதிரே வருகிறதோ அதில் கவனம் சேர்ப்பேன். 
பொதுவாக, அதே அதிகாரம் மறுபடி மறுபடி பெரும்பாலும் வருவதில்லை. 

இந்த அதிகாரம் கடந்த ஒரு ஆண்டில் முதல் தடவையாக வருகிறது. 
அதுவும் இந்தச் சமயத்தில் !!  எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

இது தற்செயலாகத் தான் நடக்கிறது என்று நினைத்தேன். 

நீங்கள் நினைப்பது என்ன ?

என்னைப் பொறுத்த அளவில் ஒரு நல்ல காலம் வருகிறது என்றே  
நம்புகிறேன். 

நீங்கள் ?

****************************************************
#####################################
921 முதல் 930 வரை.  குறட்பாக்களும் அவற்றின் பொருளும். 
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; 
சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.


ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்  கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
 குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.


குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறி யாமை கொளல்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
றியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கலைஞர் உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.


குறள் 927:
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
.
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

நல்லதோர் எதிர்காலம் வருமென நம்புவோம். 

இன்று மக்கள் மனம் திரும்பி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 

அடுத்த தலைமுறைகள் நல் வாழ்வு வாழ வழி தோன்றும் .



ஒன்று முதல் 234 வரை.