மணிராஜ் ஜகமணி வலைத் தளத்தின் பதிவாசிரியர்
திருமதி ராஜேஸ்வரி அவர்கள்
இறைவனடி சேர்ந்தார் என்னும் செய்தி கேட்டு வாடினேன்.
கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நாள் அதி காலையிலும் அவரது தளத்திற்குச் சென்று அங்குள்ள செய்திகளைப் படிப்பதும்
பாடல்களைப் பாடுவதுமே எனது வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக அவரது தளத்தில் இடுகை ஒன்றும் இல்லையே என்று நினைப்பு இருந்து வந்த நேரத்தில், இப்படி ஒரு செய்தி எனது நெஞ்சினை கனக்கச் செய்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆன்மீக உலகில் அவர் அன்னை எனத் திகழ்ந்தார்.
அவர் செய்த பணியினை அவரது செல்வங்கள் தொடர அன்னை அருளட்டும்.
சுப்பு தாத்தா.