கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம் ஒன்று தா.
குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழித்துவிட்டேன்.
நிறை எது ? நிலை எது? நினையாதிருந்து விட்டேன்.
மறை சொல்லும் மாதவா நின் நாமம் அனுதினமும்
உரைத்திட வழி ஒன்று சொல்லித்தா...எனக்கின்று
கோரும் வரம் ஒன்று தா.
பஞ்ச புலன் தந்ததெல்லாம் நஞ்சென ஆயிற்றே !
அஞ்சிட வேண்டியவை அறியாது போயிற்றே !1
எஞ்சி நிற்கும் எண்ணம் எல்லாம் நின் பாதங்கள் ஒன்றே.
கெஞ்சி நிற்குமெனை காத்திடவே இன்றெனக்கு
கோரும் வரம் ஒன்று தா.. கோவிந்தா..
நாராயணா ! நான் "நான்" ல் நிலைத்திருந்தேன்.
நாரணன் நின் நாமம் நாவில் நில்லா நின்றேன்.
கார்மேனியான் நின்னடிகள் சரணம்
வா என்னை உய்த்திடு விடுதலை தந்திடு