Pages

Sunday, May 12, 2013

என் நெஞ்சில் நிரந்தரமாய் நின்றவளே. அம்மா



அன்னையர் தினமான இன்று என் வலையுலக நண்பர்கள் எல்லோருமே அன்னையை நினைவு கூர்ந்து நம் கண்களைப் பனிக்க வைத்திருக்கார்கள் 

வல்லி நரசிம்ஹன் , கோமதி அரசு, ராஜ ராஜேஸ்வரி, ஜெயந்தி ரமணி , ஹேமா .ரஞ்சனி , இன்னும் பற்பல  மனதைத் தொடக்கூடிய பதிவுகளில் மனம் சிலிர்த்து போனேன்.

தாயின் அன்பினை உணர்ந்த ஈசனும் தாயுமானவன் ஆகினான் என்கிறார் ஜெயந்தி ரமணி அவர்கள் .

உண்மைதான் எந்த ஒரு பெண்ணும் கடவுள் அவ்விடத்தே வந்தாலும் என் தாய் இப்போது இங்கு என்னருகில் இல்லையே என்று தானே ஏங்குவாள். 


இன்று கிரேஸ் அவர்கள் எழுதிய பாடல் என் நெஞ்சத்தை நிறைத்தது 

பனித் துளிகளால் அல்ல 
பன்னீர் புஷ்பங்களால் . 

நீங்களும் செல்லுங்கள் படியுங்கள். 

அந்த பாடலை நானும் பாடி மகிழ்வேன்



படத்தில் துளசி அம்மாவும் எங்க வீட்டு அம்மாவும்.

என் நெஞ்சில் 
நிரந்தரமாய் நின்றவளே. அம்மா
உன்னை நினையாத
நாளும் ஒன்று உண்டோ அம்மா 


அன்னையை நினைந்து உருகிய அனைத்துப் பெண்மணிகளுக்கும்
சுப்பு தாத்தாவின் ஒரு செய்தி.   உங்களுக்குத் தெரியாதது எதுவுமே எனக்கும் தெரியாது
இருப்பினும் சொல்வேன்

உங்கள் வயிற்றில் பிறந்த செல்வங்கள் யாவருமேஉங்களை அம்மா அம்மா 
என நினைத்து நினைத்து  ஆனந்தமடைவது இயல்பே 

அம்மா என ஒருவள் தோன்றியது முதல் இன்று வரை நடக்கும் நடப்பே 

ஆயினும் இக்கிழவன் இன்று ஒன்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறான் 

உங்கள் வயிற்றில் பிறந்த பெண்கள் மட்டும் அல்ல 
உங்களை நாடி உங்கள் வீட்டுக்கு புகுந்த பெண்களையும் 
நீங்கள் அம்மா என உள்ளன்புடன் உருக வைத்துவிடின் 
நீங்கள் அகிலத்துக்கும் அம்மா. 

அகிலாண்ட நாயகி. 





14 comments:

  1. எண்ணம் இனிக்கும்
    அன்னையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    அப்படியே என்னுடைய வலைப்பூவிற்கும் தங்கள் மேலான வருகையைத் தந்து என்னுடைய ‘அன்னையர் தின வாழ்த்துக் கவிதை’யைப் படித்து உங்கள் மேலான கருத்தினை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    என் வலைப்பூ
    “manammanamviisum.blogspot.in"

    ReplyDelete
  3. அம்மாவைப் பற்றிய கவிதை அருமை. உங்கள் குரலில், உணர்ச்சிப் பெருக்கில் கவிதை வரிகள் இன்னும் ஆழமாய் மனதில் படிகின்றன.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. என் பதிவை உங்கள் பதிவில் குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி.
    உங்கள் பாட்டு அருமை, நெகிழ வைத்துவிட்டீர்கள்.
    கிரேஸ் அவர்கள கவிதையை உங்கள் பாட்டல் பெருமை படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  5. கவிதை சிறப்பு...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பஞ்ச் டயலாகோடு முடிச்சிருக்கீங்க. அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பல பதிவர்களைப் பாராட்டிய, சிறப்பு அன்னையர் தினப் பதிவு, அருமை!

    ReplyDelete
  8. அருமையாகப் பாடியுள்ளீர்கள் சுப்பு தாத்தா. உங்கள் குரலில் கேட்டவுடன் கண்ணீர் நிறைந்தது. என் கவிதையை பாடி பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக நன்றி. நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். மிக்க நன்றி
    //உங்கள் வயிற்றில் பிறந்த பெண்கள் மட்டும் அல்ல
    உங்களை நாடி உங்கள் வீட்டுக்கு புகுந்த பெண்களையும்
    நீங்கள் அம்மா என உள்ளன்புடன் உருக வைத்துவிடின்
    நீங்கள் அகிலத்துக்கும் அம்மா. // உண்மை..நான் அப்படியே செய்வேன்.

    ReplyDelete
  9. உண்மையே.
    சிந்திக்க வேண்டுய அவசியமான விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். சுப்பு சார்.
    கிரேஸ் அவர்களின் கவிதையயும் மூழுவதும் ரசித்தேன்.
    உங்கள் குரலில் இந்தப் பாடல் இன்னும் விகசிக்கிறது.
    அம்மா அம்மாதான்.
    மாமியார் மாமியார்தான் இது புது மொழி. நான் கற்றது:)

    ReplyDelete
  10. அடடா.... என்ன இந்த வருச அன்னையர் தினம் துளசிஅம்மா ஸ்பெஷலாப் போயிருச்சு!!!

    ஈரம் நிறைந்த கண்களுடன் என் நன்றி.

    ReplyDelete
  11. //அம்மா அம்மாதான்.
    மாமியார் மாமியார்தான் //



    அப்படி போடுங்க அருவாளை...

    ஆயிரத்தில் ஒரு சொல்.
    இத சொன்னதுக்காகவே
    வல்லி நரசிம்மனுக்கு வெண் சாமரம் வீசணும்

    எனக்குப் புரியுது. உங்களுக்கு புரியுது.

    இவருக்கு புரியலயே !!!

    எல்லாருமே அபிராமி அகிலாண்டேஸ்வரி
    பத்மாவதி தாயார், பரப்ர்ஹமஸ்வரூபிணி
    ஆயிட்டா
    வில்லி ரோலுக்கு ஆளே கிடைக்காது.
    இன்னொண்ணு.....

    லைஃப் ரொம்ப டல்லாப்போயிடும்.

    அதனாலேயோ என்னவோ
    மாமியார் இல்லேன்னா
    நாத்தனார் அந்த ரோல் எடுத்துக்கறாக...

    ஆனா கொஞ்சம் கொஞ்சமா உலகம் மாறிட்டு வருது.

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  12. என் கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  13. அன்பின் சுப்பு தாத்தா - அருமையான பதிவு - பிறந்த பென்கள் மட்டுமல்ல - புகுந்த பெண்களையும் அம்மா என உருக வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி