Courtesy: arvindsdad.blogspot.in/2012/03/who-is-great-mother-or-daughter.html |
சீக்கிரம் போடும்மா பொத்தானை !! நான் உடனே போகணும் அம்மா !!
எங்கடா கண்ணா இன்னிக்கு இத்தனை அவசரம் ஸ்கூலுக்கு ?
அம்மா அம்மா !! உனக்குத் தெரியாதா !! சசின் நூறு நூறு எடுத்துட்டாராம்
எங்க ஸ்கூல் லே விழா கொண்டாடுறாங்க...அதிலே நாங்க டான்சே ஆடப்போறோம்.
ராசாத்தி ...போயிட்டு வாடி என் கண்ணம்மா !!
ஏம்மா !! எம்புட்டு சம்பாதிக்கிறாரு அந்த சசின்னு ? நம்மைப் போலவுங்களுக்கு
ஒரு வீடு கட்டி தரக்கூடாதா ?
அத நம்ப மாரியாத்தா தான் செய்யணும். செய்ய முடியும்.
நல்ல படிச்சு நீயே காணி நிலம் வாங்குவே. அதிலே ஒரு மாளிகை கட்டுவே.
அத நினச்சு நினச்சு தான் கண்ணம்மா நான் தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன். என்னம்மா கனவு ?
காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்
அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டி தர வேண்டும்.