ஒரு மாமத யானை நம்முள் ஒளிந்து கொண்டு இருப்பதை நாம் குருவின் அருள் பெற்றால் அன்றி காண இயலாது. அந்த மமதையை, தான் என்னும் ஆணவத்தை, மனதிலே என்றும் குடியிருக்கும் அடங்காத ஆசைகளை, பேராசைகளை, நம் குருவின் அருளால் அடக்கி நம்முள் அந்த இறைவன் குடி கொண்டிருப்பதை உணரவேண்டும் என பொருள்கூறும் திருமூலரின் இந்த பாசுரத்தை படித்துக்கொண்டிருந்தேன்.
மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தின் மறைந்தது மாமத யானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.
இப்பாடலின் பொருளை மனதிற்குள் வாங்கும் காலையில் மனதிலே ஒரு யானை வந்தமர்ந்திருப்பது போல......
ஒரு பிரமையா என்ன அது !! திடுக்கிட்டேன். பாடல் புத்தகத்தை மூடிவிட்டு, கணினியைத் திறந்தேன். அதில்......
நான் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளில் ஒன்றான " வெண்பா வனம் " அதில் திகிழ் அவர்கள் ஒரு வெண்பா எழுதியிருந்தார்கள். எனது அப்பொழுதைய மன நிலைக்கு மிகவும் ஒத்து இருந்த அந்த வெண்பாவை
பாடலாம் என நினைத்தேன். பாடியும் விட்டேன்.
அது இதோ !!
இதம்கொண்ட பார்வையால் ஈர்த்திடு !- உந்தன்
கதம்கொண்டே எந்தன் கவலைகளை யெல்லாம்
வதம்செய் தெனைக்காத் திடு !
அம்மாதவனே என் ஆசானாக வந்து எனக்கு அருள் புரியவேண்டும். என் மன இருள் அகற்ற வேண்டும்.
இந்த பாட்டை பாடி முடித்தபின் திகழ் அவர்களிடம் எப்படி சொல்வது எனத்
தெரியாது திகைத்து நின்றேன். அவர்கள் வெண்பா வலைப்பதிவில் ( அது உண்மையில் ஒரு வனமா அல்லது வண்ணப்பூங்காவா என்று பிரமித்து போகிறோம். ) பின்னூட்டத்திற்கு இடம் இல்லை. அவர்கள் இ மெயில் ஐ.டி யும் இல்லை. அவர்களே வந்து பார்த்தால் தான் உண்டு.