Pages

Thursday, January 20, 2011

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

உண்மையாகத்தான் சொல்கிறேன். 
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அவரே வருவார் என்று.
ஆச்சரியம், பயம், மகிழ்ச்சி ஆகிய பல  உணர்வுகள் ஒரே சமயத்தில் மனதில் !!
எனக்கு இப்படி ஒரு அதிருஷடமா ?
நினைத்துப்பார்க்க கூட இல்லையே !  இப்படி ஒரு அதிருஷ்டம் வருமென்று எந்த சோதிடர் கூட சொல்லவில்லையே !! உடல் ஒருதரம் ஒரு கணம் புல்லரித்து போனது.,  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

நம்பக்கூடிய செய்தியா அது !!

என் மனைவி கூட பக்கத்தில் இல்லை. அவள் பக்கத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டாம் என்று சரியாக சொல்வாளே ?

(இந்த மனைவிகளே,( ஐ மீன் ஹவுஸ் வோயவ்ஸ்) இப்படித்தான்,  ஒரு கோணத்தில் பார்த்தால், கம்ப்யுடர் மாதிரி.  சரியான நேரத்தில் டவுன் ஆகி விடுவார்கள். .)

போனால் போகிறது. நாமே சமாளிக்கலாம் என்று வந்தவரை இன்னும் ஒருமுறை நன்றாக கவனித்தேன்.
ஐயமே இல்லை. அவரே தான்.

கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரம்.
வாசல் பக்கம் ஒரு கண் பார்த்தேன். வாகனம் ஏதாவது ?
அட ! கருடன் கண்ணில் பட்டார் !!
வியாழன் அதுவுமா கருடன் சேவையா !  என்ன பாக்கியம் !!
பக்தா !! ஏன் மௌனம் !! என்ன வேண்டும்? உடனே  கேள் என்றார்.
என்ன கேட்பது என்றே புரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வேண்டும் என்று எதை எதை எல்லாம் வேண்டும் வேண்டும் நினைத்துக்கொண்டிருந்தேனோ  அவை அனைத்துமே நினைவுக்கு வரவில்லை.
வீடு, வாசல், பதவி, புகழ், எல்லாமே இந்த வயதிலே எதற்கு, தேவை இல்லை துச்சம் என்று அவ்வப்போது தோன்றி கொண்டு இருந்தாலும், இந்த அவசியம் இல்லாத ஆசைகள் மனத்துக்குள் ஆரவாரிப்பது  நிஜந்தான். நேற்று கூட ஒரு ஸ்லைடிங் சேர் கம் பெட் ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ....திருவான்மியூர் கிராண்ட் ஸ்வீட் கடையில் இருந்து தினப்படி புளியோதரை, பாயசம், ஆத்து மாமிக்கு மிக்சர் (துளசி மேடம் போயிட்டு வந்தாங்களாம். ) முறுக்கு இத்யாதி, இத்யாதி.  

என் போராத காலமோ என்னவோ !  அந்த அத்தனை ஆசைகளில், தேவைகளில், ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.அவை எல்லாமே குப்பை என நினைத்து விரக்தியில் கவிதை எழுதிய காலமும் உண்டு.அதெல்லாம் அந்தக் காலம்.  ( மனுஷனுக்கு காலன் நெருங்கி வர வர காலங்கடந்த ஆசைகளும் வரும் போல் !! )

அடடா !! என் ஞாபக மறதி காரணமாக எப்படிப்பட்ட நேரம் வீணாகிறதே !!
வந்தவர் எத்தனை நேரம் எனக்காக காத்திருப்பார் ?  என்னைப்போல் எத்தனை பக்தர்களுக்கு அவர் தரிசனம் தரவேண்டுமோ ? சீக்கிரம் சொல் சீக்கிரம் சொல் உனக்கு என்ன வேண்டும் என்று எதோ ஒன்று என்னை உந்தித் தள்ளியது.

இன்னும் ஒரு சோபா கம் பெட் , ஒரு எல்சி டி.   டி .வி. ஹால் அளவுக்கு,   ஒரு டூப்ளே பிளாட் (நமக்குச் சரிப்பட்டு வருமோ ? மாடிக்கும் கீழேயும் எத்தனை நாளைக்கு ஏறி இரங்கா முடியும் ?), ,,இல்லை ..ஒரு தனி வீடு,.. சுத்தி வர ஒரு  தோட்டம், ஒரு புதிய மாடல் கார் (டோயடோ போட்டிருக்கானே 13 லச்சதிலே )  இன்னும் கொஞ்சம் வங்கி பாலன்ஸ்  மனசு அடுக்கிகொண்டே போகிறது. வெட்கத்தை விட்டு கேட்கலாம் என்று நினைத்தபோதே,  அடடா ! உனக்கு இந்த வயசிலே கூட இந்த மாதிரி அநித்தியமான குப்பையைத் தவிர வேறு ஒன்றும் கேட்கத் தோணாதா என்று மனச்சாட்சி குடைந்தது.  இன்று தானே திருமதி லலிதா மிட்டல் அவர்கள் வலைக்குச் சென்று அவர்கள் தமிழில் கருத்தாக்கம் செய்த பஜ கோவிந்தம் *அதை பாடினேன் என்று கதறினாயே !! அப்படியுமா இந்த அல்ப சமாச்சாரங்களில் உன் புத்தி போகிறது என்று மன சாட்சி சொன்னது.

வாயைத்திறக்கலாம் என்று நினைக்கும்போதே  குப்பை என்ற சொல்லும் மனதிற்கு வந்தது.   இந்த மனசு இருக்கே ! விசித்திரம்.    எதை மறக்க வேண்டும் அப்படின்னு நினைக்கிறோமோ அதுவே மனசிலேயே இருந்துகொண்டு கழுத்து அறுக்கும்.

கேட்டுவிடுவோமா ! கேட்பது  சரியா தப்பா எனச சொல்வதற்கு இந்த கிழம் கூட பக்கத்தில் இல்லை.

துணிந்து கேட்டுவிடுவோம் என்று நினைத்து , ஒரு முறை மனதிற்குள் ஒரு ஒத்திகை பார்த்துவிடுவோம் என்று சொல்லிப்பார்த்துகொண்டேன்.

இன்னும் ஒரு வீடு அடையார் மாதிரி லோகாலிடிலே, ஒரு தோட்டம் கொடைக்கானல் லே ( பக்கத்தில் பன்னைக்காடா இருந்தாலும் பரவா இல்லை ) ஒரு சுமார ஒரு கோடி ரூபா சுவிஸ் வங்கிலேநெட் பாங்கிங் வசதியோட  என்று சொல்ல நினைக்கும்போதே, மனம்,  இல்லை, மனச்சாட்சி "நீ கேட்பதெல்லாம் குப்பை"  எனச்சொல்லியது. "நீ செத்த நேரம் சும்மா இரு. என்றுஅதை ஒதுக்கி தள்ளிவிட்டு கேட்போம் என்று வாயைத் திறந்தேன்.    அதற்குள்......

ஆண்டவன் வாசல் பக்கம் பார்க்கிறார். அவருக்கு என்னைப் போல் நிறைய பேரை பார்க்கவேண்டும் என்று இருக்குமோ இன்னவோ!  சீக்கிரம் போய்விடுவார்.  போல் இருக்கிறது.

"நாற்பது வருஷத்திலே உனக்கு கிடைக்காததை எல்லாத்தையும் நாராயணன் உனக்கு நாலே வினாடிலே கொடுத்துடுவார். அதனாலே ....
"சட்டுன்னு சொல்லு, சட்டுன்னு சொல்லு" என்றது மனது.

" பகவத் சான்னித்யமே உனக்கு கிடைத்து இருக்கிறது. மற்றது எல்லாமே அல்பம், அல்பம், வாயை மூடிண்டு சும்மா இரு. " என்றது மனச்சாட்சி.

மனசு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் வாய் எழவில்லை.  வாய் திறந்தது ஆனால் குழறுகிறது.  குரல் எழவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சொல்ல ஆரம்பித்தேன்.  என்ன துரதிருஷ்டம் !! எனது ஒரு வார்த்தையில் கூட ஓலி இல்லை.

"என்ன என்ன ? "  என்று என்னை ஊக்குவித்தார் இறைவன்.
சொல்ல துவங்கினேன். சொல்லியும் விட்டேன்.

என்ன இது?  குரல் ஒலியே எழும்ப வில்லையே !!  கண்கள் நிரம்பின.

என்ன என்னவெல்லாம் எனக்கு  வேண்டும் என்று சொல்ல நினைத்தேனோ அவை எல்லாமே அடங்கிபோனால் போல் இருந்தது.  ஓலியாக வெளி வரவில்லை. கடைசி வார்த்தை ..கடைசி ஒரு சொல் அது தான் அந்த  மனச்சாட்சி சொன்னது.
 அதுதான் வெளியே ஏதோ ஒன மேன் ஆர்மி போல் தனிக்  குரலாக ஒலித்தது.

ஆம். அதுதான் .
குப்பை என்று ஒரு சொல். ஒரே சொல்.

இறைவன் அதிர்ந்து போனார் போல், திடுக்கிட்டாற்போல் தோன்றியது. இருந்தும் சொன்னார்.

"என்னது, குப்பையா !! புரியவில்லையே !! ஓஹோ !  சென்னை நகர வீதிகளில் இருக்கும் குப்பை,கழிவு, இதெல்லாம் அகற்றவேண்டுமா !!"

நான் பதில் சொல்லுமுன்னே அவர் தொடர்ந்தார்.

"ஐ ஆம் ஸோ சாரி ! என்னால் முடிந்ததைக் கேட்பாய் என்று நான் எதிர்பார்த்தேன் !!" என்று சொல்லி அவர் மறைந்து போனார்.     
அப்பறம்....?
**********************************************************************************
*தள்ளாமையால் உடல் தளர்ந்துவிட்டாலும்
             வெள்ளியாய்த்தலைமுடி வெளுத்துவிட்டாலும்
           பல்லிழந்தே வாய் பொக்கையானாலும்
           பொல்லாத ஆசைகள் போவதேயில்லை !
*************************************************************************************
பின் குறிப்பு. 
எச்சரிக்கை. 
மனைவிக்கு ஜால்ரா போடாதவர்கள் இதை தயவு செய்து படிக்க வேண்டாம்.  
டந்தது என்ன?   "என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.


அடடா ! ரொம்ப தூங்கிவிட்டேன் போல் இருக்கே !!  பகல் லே கண வந்தா பலிக்கும பலிக்காதா தெரியவில்லையே ?
ஒரு காலிங் பெல் சப்தம். தட் என்று எழுந்தேன்.
வாசல் கதவை திறந்து பார்த்தேன். கொரியர் ஒரு பார்சலை தந்தார். 
அவசரம் எனக்கு எப்பவுமே !  அதை உடைத்து பார்த்தேன். எனக்கு யார் என்ன அனுப்பி இருப்பார்கள்?
அட ! அமெரிக்காவில் இருந்து என் பெண் எப்போதோ நான் இந்த ஸ்வைன் ப்ளூ வந்த டயத்தில் கேட்ட முக மூடி அனுப்பி இருக்கிறாள்.  அந்த டப்பாவில் ஒரு ஐநூறு இருக்கும். 
என்ன்ன என்ன என்று கேட்டுகொண்டே என் வீட்டுக் கிழம் !!
கனவைச் சொல்லிவிட்டு பார்சலையும் காண்பித்தேன். 

" இந்த பாருங்க... லைப் லே சிலதெல்லாம் நம்மாலே முடியும்.  பலது நம்மாலே  முடியாது.       என்ன முடியும்...   அப்படின்னும் தெரியனும்.  அதே சமயம் , என்ன முடியாது அப்படின்னும் தெரியனும். "

" எனக்குத் தெரியாது அப்படின்னு சொல்றியா ?" நான் இடை மரித்தேன். 

" அப்படி சொல்லலை. இரண்டுக்கும் நடுவில் இருக்கிற வித்தியாசத்தையும் தெரிஞ்சுக்கணும்
 *****

************************************************************************
பரியினும் ஆகாவாம் பாலல்ல
உய்த்துச்சொரியினும் போகா தம

















Sunday, January 16, 2011

சின்ன சின்ன குஞ்சுகள் சிங்கார பிஞ்சுகள்.

இந்த சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் இந்த ஊர் சிடி யூனியன் வங்கி மாத காலண்டர் கிடைத்தது. 
 

அதில் உள்ள பிஞ்சுகளைப் பார்த்தேன். ரசித்தேன். இந்தச் சிறார்களுக்கு பெயர் வையேன் என்று எங்க வீட்டு கிழவியிடம் சொன்னேன். அவள் வைத்த பெயர்கள் கீழே.

நீங்கள் என்ன பெயர் வைத்து இந்த செல்வங்களை அழைப்பீர்கள் ?

புன்னகை மன்னன்


விஜயன்

 

Posted by Picasa


சுட்டி







Posted by Picasa





Posted by Picasa
விஷமக்காரன்




Posted by Picasa

அப்பு





Posted by Picasa

ஆயுத பாணி




Posted by Picasaசின்ன சின்ன குஞ்சுகள் 
    சிங்கார பிஞ்சுகள்.

Thursday, January 13, 2011

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக! மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!


தைப்பொங்கல் திருநாள் முன்னிட்டு எனக்கு வாழ்த்து அனுப்பியிருக்கும் திரு ஆர். நடராஜன் அவர்கள் நான் பணி புரிந்த நிறுவனத்திலே வேலை பார்ப்பவர். என்னை விட ஒரு 20   வருடம் இளையவர். இருப்பினும் அவர் மனதிலே நான் ஒரு நல்ல நண்பனாக இருந்து இருக்கிறேன். நான் ஒய்வு பெற்று ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகியபோதிலும் என்னை நினைவு கூர்ந்து வாழ்த்து மடல் அனுப்பியிருக்கும் அவரது அன்பு உள்ளத்துக்கு நன்றி சொல்ல, ஒரு வழியாக  அவர்தம் வாழ்த்து மடலையே இங்கு பதிவிடுவோம் என்று எண்ணினேன்.

அடுத்து வருவது தமிழ் பதிவுலக கவிதாயினி கவிநயா அவர்கள் கவிதை. இது இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இயற்றி நான் மெட்டு அமைத்து அவரது வலையில் இட்டது.
அழகான கவிதை.  என்றும் உயிர் துடிப்புடன் அமைந்த கவிதை இது.





பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பதிவு உலக கவிதாயினி திருமதி கவிநயா அவர்களின் கவிதையை இந்த வருட பொங்கலன்று மறுபடியும் பதிவிட்டு தமிழ் மக்கள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்க


திருமதி துளசி கோபால் அவர்கள் தமது வலைப்பதிவிலே ஒரு அழகான வாழ்த்து படம் இட்டு இருக்கிறார்கள்.  அதையும் பார்த்து மகிழுங்கள். பொங்கல் திருவிழா வட மா நிலங்களிலும் பல விதமாகக் கொண்டாடப் படுகிறது. துளசி மேடம் என்னமா அழகாக  வர்ணிக்கிறார் என்று பார்க்க இங்கே சொடுக்குங்கள்.