காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Thursday, March 04, 2010
ஒன்றும் புரியவில்லை.
எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
என்றார் வள்ளுவர்.
நல்லவையே கேட்கவேண்டும். ஏன் ! நல்லவை தனைக் கேட்டால்தான் நல்ல எண்ணங்கள் நம் மனதிலே உருவாகும். நல்ல எண்ணங்கள் உருவானால் மட்டுமே நல்ல வார்த்தைகள் நம் வாயிலிருந்து வெளிக்கிளம்பும்.
நல்ல செயல்களும் தொடரும்.
ஆயினும், இன்றைய உலகிலே நல்லவை கேட்க முடிகிறதா ? நல்லவை பார்க்க முடிகிறதா ?
காலையில் பத்திரிகையின் முதற்பக்கத்தைப் பார்க்கும்பொழுதே, தொலைக்காட்சி பெட்டியைத் திறக்கும்பொழுதே உலகத்திலே நல்லவை உளதா எனும் ஐயம் வந்துவிடுகிறதே !!
நானிலத்துக்கு நல்வழி காட்டுபவராகவும் நல்லோரெனவும் நினைக்கப்படுபவரெல்லாம் தாம் தம் எண்ணங்களிலும், வாக்கிலும் செயலிலும் நல்லோராக நடந்து கொள்ளவேண்டுமென நினயாது தீய வழிகளில் செல்வதைக்கண்டு நல் உள்ளங்கள் பதறுகின்றன.
நெஞ்சு பொறுக்குதில்லையே ! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... என என்றோ கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது.
இது ஏன் ?
உலகத்தில் நல்லவை என்பதே வற்றிப்போய் விட்டதா ? அல்லது
நல்லவை, நல்லோர் என்பதற்கு என்ன பொருள் கொண்டோமோ அது தான் மாறி விட்டதோ ?
அல்லது நல்லவைக்கும் தீயவைக்கும் உள்ள வேற்றுமையை உணரும் அறிவினை ( sense of discrimination ) நாம் இழந்துவிட்டோமா?
ஒன்றும் புரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
தீயவைகள் மட்டுமே வெளிச்சதுக்கு வருகின்றன
ReplyDeleteஎன்னங்க இவ்வளவு வருத்தப்படுறீங்க. நல்லவங்களைப் பார்க்கனும் அம்புட்டுத்தானே, திருவிளையாடல் சிவாஜி சொல்ற மாதிரி என்னை நல்லாப் பாருங்க, நல்லாப் பாருங்க. ஒரு கெட்டவனைப் பார்த்திர்கள் அல்லவா?
ReplyDeleteஇனி நீங்க யாரைப் பார்த்தாலும் நல்லவங்களா தெரிவாங்க, ஏன்னா ஒரு கெட்டவனைப் பார்த்திங்கல்ல அதான்.
துரியோதனன் கதை தெரியுமா? அதில் துரோணர் சொல்வார். நல்லவைகளும் கெட்டவைகளும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றதுன்னு.
தருமர் மாதிரி நாம் நல்லதைப் பார்ப்போம், நல்லதை நினைப்போம், நல்லதை செய்வேம். நன்றி.