தாயுமானவர் பாடல்கள் அற்புதமானவை.
"மாயா விகார மலமொழிகத் தாவத்தை
தோயா அருளைத் தொடரு நாள் எந்நாளோ?"
"தான்" என்பதை மறந்து "அவன்" தான் நான் என மன நிலை ஏற்படுவது எளியது அல்ல. எப்பொழுதுமே தனது சொத்துக்கள், தன்னைச் சேர்ந்தவர், தன்னுடைய உடல் இவற்றினைப்பற்றியே எணணுகின்ற மனிதன், இறைவன் தன்னுள்ளே இருப்பதையும் தனது இதயத்தில் அவனை நிலை நிறுத்தி தியானிப்போர் அவனை தம்முள் காணுவர் என்ற உண்மையும் எளிதாக உணர்வதில்லை. உலக மாயையின் காரணத்தினால் மட்டுமன்றி மனிதனுக்கு சுபாவத்தினால் உள்ள காம க்ரோத மத மாத்சர்ய ஆகிய
மலங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்
இதற்கென ஒரு கால கட்டம் இருக்கிறதா என்ன? தன்னை உணர்ந்து தன் மயமாவது
அஸ்பர்ஸ யோகம் என்பர்.
இதற்கான பெருமுயற்சி தான் தவம். தவத்தினை மேற்கொண்டவர் தன்னை புதுப்பித்துக்கொள்ள இயலும். தன்னை மாற்றிக்கொள்ள இயலும். ஒன்றிலிருந்து
மற்றொன்றாக ஆக இயலும்.
தான் இறைவனிடமிருந்து வேறு என நிலை அழிந்து இறைவன் தன்னிடத்தே தான்
உள்ளான் என்ற நிலை ஏற்படும்.
வள்ளுவர் தவத்தின் பெருமையைப் பற்றி கூறுகையில்:
"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும் "
அற்புதம்! வார்த்தைகள் இல்லை அய்யா... நெறையா எழுதுங்க.
ReplyDelete