இன்று "திருமந்திரத்தில்" உள்ள 2335 வது பாட்டினைப் படிப்போமா?
" இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லது உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராத் தூரமென்
றெல்லை யுணர்ந்தால் உயிர்க்குயிராமே...."
உளதன்றி இலதன்று
இறைவன் எல்லா இடங்களிலும் எப்பொருள்களிலும் நீக்கமின்றி உள்ளவனாய் இருக்கின்றான். இன்ப துன்மங்கட்கு வேறாகி இல்லாதவனாக திகழ்கிறான்.
ஒரு நாடகம் நடக்கும் இடத்தில் விளக்கு ஒளி எங்கும் கலந்து உள்ளது. நாடகத்தை நடத்துகின்றது. அது காண்கிறது. நம்மை நாடகத்தைக் காணச்செய்கிறது.
சோகமான காட்சியில் நாம் அழுகின்றோம். நகைச்சுவைக் காட்சியில் நாம் சிரிக்கின்றோம். காதல் காட்சியில் நாம் மகிழ்கின்றோம். கொலைக்காட்சியில் நாம் அஞ்சுகின்றோம்.
விளக்கொளி அழுவதில்லை. சிரிப்பதில்லை. மகிழ்வதில்லை. அஞ்சுவதில்லை. சுக துக்கத்திற்கு அப்பாலாய் உள்ளது. உடனாகியும் இலதாகியும் விளக்கொளி இருப்பது போல இறைவன் இவ்வுலகில் இருந்தும் இல்லாதவனாகத் திகழ்கிறான்.
இவ்வுலகம் எங்கும் இறைவன் இருப்பான் எனில் உலக சுக துக்கங்கள் அவனைத் தாக்காதோ ?
தாக்காது.
உவர்க்கடலில் பிறந்து வளர்ந்து உவர் நீரைக்குடித்து வாழ்கிற கடல் மீனில் உப்பு ஏறுமோ ? ஏறாது.
அது போலவே இறைவன் ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளான்.
காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Wednesday, June 20, 2007
Monday, June 04, 2007
Saturday, June 02, 2007
Visual Imagery ..as Tamil Saint Periyazhwar listens to Divine Flute Music of Lord Krishna.
You are seeing the Nandhavanam of Periazhwar at Srivilliputhur.
இன்று பெரியாழ்வார் அருளிச்செய்த பாசுரம் ஒன்றினை படிப்போமா?
க்ருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவன் ஒருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வள்ர்கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.
கண்ணன் குழல் எடுத்து இசை மழை பொழியும்போது, இயற்கை எவ்வாறு அந்த இசையோடு இணைகிறது .....
அந்த கண்ணன் பீதாம்பர உடை உடுத்தி மயிற்தோகை அணிந்து குழல் ஊதும்போது, மரங்கள்கூட அசைவற்று நின்று போம். அம்மரங்களில் பூத்திருக்கும் மலர்களிலிருந்து மது தாரையாக பெருக்கெடுத்து பாயுமாம்.
விண்ணை நோக்கி வளர்ந்த் கிளைகளும் தாழ்ந்து, எவ்விடத்திலிருந்து
இசை வருகின்றது எனப்பார்க்கும். திருமால் எங்கு உள்ளார் என உயர்ந்திடும் பின் தாழ்ந்திடும். என்னே அற்புதம். !!!!
பெரியாழ்வார் தன் அற்புத கவித்திறன் கொண்டு, கண்ணனின் வேணு கானத்தினையே நம்மைக்கேட்கச்செய்கிறார், கண்ணன் குழல் கேட்டு மயங்கி நிற்கும் மரங்கள், அவற்றின் கிளைகள் காற்றில் மேலும் கீழும் அசைவதை உருவகப்படுத்தி , அந்தக்கிளைகள், கண்ணனின் குழலிசையைக் கேட்டு, கண்ணன் வருகிறான் என நினைத்து அப்பெருமானை வரவேற்க ஆயத்தங்கள் செய்வது போலவும், மலர்களிலிருந்து மது தாரையாக பெருக்கெடுத்து ஓடுவது போலவும், பூக்கள் எம்பெருமானை வரவேற்க, பூமாரி பொழிவது போலவும் நினைந்து நினைந்து உருகுகிறார்.
ஆஹா ! என்னே அற்புதம் ! தம் மனக்கண் முன்னே அவர் கண்ட காட்சி நம்மை எல்லாம் பரவசப்படுத்துகிறது அல்லவோ !
visual imagery
என ஆங்கிலத்தில் குறிப்புடுவார்கள். தாம் கண்ட அந்த தெய்வீக காட்சிதனை, அவர்தம் பாசுரத்தை படிப்போரும் காணுமாறு செய்கிறார், பெரியாழ்வார். அழகான காட்சிதனை, என்றும் என்றும் மனங்களிலே நிலைத்து நிற்குமாறு செய்து, அந்த அழகுக்கு ஓர் நித்தியத்துவம் அளித்துள்ளார்.
சத்தியம், சிவம், சுந்தரம்...
இதெல்லவோ அழகு, இதெல்லவோ நித்தியம், ஆகவே சத்தியம், இது தானே சிவம்.
The poetic ecstacy leading to visual imagery is just unparalleled.
I just recollect what the immortal Poet Keats wrote:
" Heard melodies are Sweet, but sweeter
Are the unheard ones.."
i also recollect Keats' Ode :
...Beauty is Truth and Truth is Beauty;
That's all Ye knew on earth, and all ye need to know.
Verily, whatever is intranscient in whatever one perceives as BEAUTY, must be TRUTH.
Truth is timeless. If Beauty is truth, then beauty should also be timeless.
But, as one proceeds on this logic, gradaully, one finds that all that appear beautiful this moment lose that lustre the next moment.
To sustain beauty, "that perceived beautiful one" should not be suceptible to ageing, and must remain unaffected by the contours of time. Is it all possible ?
Yes. The One and the only One that could be intranscient must be THE ONE, OMNIPRESENT, on which realisation, one became a Gnani meaning a knower or a realized person.
Vedhanta proudly proclaims: SATYAM SHIVAM SUNDARAM.
"What is true (SATYAM) is the Brahmam (transcending the boundaries of time)and that Shivam is (alone) beautiful (SUNDARAM)
Keats realized TRUTH in beauty. Periazhwar realised Beauty in Truth.
Subscribe to:
Posts (Atom)