காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Saturday, May 25, 2013
Sunday, May 12, 2013
என் நெஞ்சில் நிரந்தரமாய் நின்றவளே. அம்மா
அன்னையர் தினமான இன்று என் வலையுலக நண்பர்கள் எல்லோருமே அன்னையை நினைவு கூர்ந்து நம் கண்களைப் பனிக்க வைத்திருக்கார்கள்
வல்லி நரசிம்ஹன் , கோமதி அரசு, ராஜ ராஜேஸ்வரி, ஜெயந்தி ரமணி , ஹேமா .ரஞ்சனி , இன்னும் பற்பல மனதைத் தொடக்கூடிய பதிவுகளில் மனம் சிலிர்த்து போனேன்.
தாயின் அன்பினை உணர்ந்த ஈசனும் தாயுமானவன் ஆகினான் என்கிறார் ஜெயந்தி ரமணி அவர்கள் .
உண்மைதான் எந்த ஒரு பெண்ணும் கடவுள் அவ்விடத்தே வந்தாலும் என் தாய் இப்போது இங்கு என்னருகில் இல்லையே என்று தானே ஏங்குவாள்.
தாயின் அன்பினை உணர்ந்த ஈசனும் தாயுமானவன் ஆகினான் என்கிறார் ஜெயந்தி ரமணி அவர்கள் .
உண்மைதான் எந்த ஒரு பெண்ணும் கடவுள் அவ்விடத்தே வந்தாலும் என் தாய் இப்போது இங்கு என்னருகில் இல்லையே என்று தானே ஏங்குவாள்.
இன்று கிரேஸ் அவர்கள் எழுதிய பாடல் என் நெஞ்சத்தை நிறைத்தது
பனித் துளிகளால் அல்ல
பன்னீர் புஷ்பங்களால் .
நீங்களும் செல்லுங்கள் படியுங்கள்.
அந்த பாடலை நானும் பாடி மகிழ்வேன்
படத்தில் துளசி அம்மாவும் எங்க வீட்டு அம்மாவும்.
என் நெஞ்சில்
நிரந்தரமாய் நின்றவளே. அம்மா
உன்னை நினையாத
நாளும் ஒன்று உண்டோ அம்மா
உன்னை நினையாத
நாளும் ஒன்று உண்டோ அம்மா
அன்னையை நினைந்து உருகிய அனைத்துப் பெண்மணிகளுக்கும்
சுப்பு தாத்தாவின் ஒரு செய்தி. உங்களுக்குத் தெரியாதது எதுவுமே எனக்கும் தெரியாது
இருப்பினும் சொல்வேன்
உங்கள் வயிற்றில் பிறந்த செல்வங்கள் யாவருமேஉங்களை அம்மா அம்மா
என நினைத்து நினைத்து ஆனந்தமடைவது இயல்பே
அம்மா என ஒருவள் தோன்றியது முதல் இன்று வரை நடக்கும் நடப்பே
ஆயினும் இக்கிழவன் இன்று ஒன்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறான்
உங்கள் வயிற்றில் பிறந்த பெண்கள் மட்டும் அல்ல
உங்களை நாடி உங்கள் வீட்டுக்கு புகுந்த பெண்களையும்
நீங்கள் அம்மா என உள்ளன்புடன் உருக வைத்துவிடின்
நீங்கள் அகிலத்துக்கும் அம்மா.
அகிலாண்ட நாயகி.
Subscribe to:
Posts (Atom)