எதை நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும், ஒவ்வொரு நிமிடமும், கடந்த நிமிடத்தைவிட உயர்ந்த தாகவே நமது எண்ணமும், சொல்லும், செயலும் இருப்பது நன்று. முன்னேற்ற பாதையிலே நாம் வலுவாக இருக்கின்றோம் என்பதற்கு இதுவே ஆதாரம்.
மாணிக்க வாசகரின்" யாத்திரை பத்து" மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஏறத்தாழ டார்வின் தத்துவத்திற்கு மிக அருகே கொண்டு செல்வதை கவனிப்போமா?
"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்..:"
நவராத்திரி கொலு
நன்றி:
கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம்
இங்கே கிளிக்குங்கள்.
http://tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/navarathiri/0809/30/1080930052_1.htm
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
படி என்பது பெயர்ச்சொல் . அப்போது அது ஒரு ஏணியின் அல்லது மலைக்குச் செல்லும் வழியின் படிகளை குறிக்கும்.
படி என்பது வினைச்சொல். நாம் கற்று உணரவேண்டும் எனும் பொருள் அதற்கு.
எனைத்தானும் நல்லவை கேட்க என்பார் வள்ளுவர். படி எனும் சொல் இதனை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் ஒரே நேரத்தில் புரிதல் நல்லது.