Pages

Sunday, April 19, 2009

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்




அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

உண்மைதான். மனதிலே ஏற்படும் பல உணர்வுகளை அப்படியே பளிங்குக் கண்ணாடி போல் காட்டிவிடும்
அற்புதம் தான் முகம்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.


அன்பு, காதல், பிரிவு, சோகம், கருணை, வீரம், கோபம், மதம், பொறாமை, ஆகிய பல உணர்வுகளையும் உடனடியாக பிரதிபலிப்பது நமது முகமே.

உவத்தலையும் காய்தலையும் தான் முன்னின்று உரைத்துவிடுவது முகமே என்பார் வள்ளுவர்.

இருப்பினும், நெஞ்சிலே தோன்றும் எண்ணங்களை மிகவும் சாமர்த்தியமாக முகத்தில் தோன்றாதவாறு சமாளித்துக்கொள்வோரும் பலர் உண்டு. ஒருவன் சொல்வது பொய்யா, உண்மையா என்பதை அவன் முகத்தில் ஏற்படும் அசைவுகள், நெளிவு சுளிவுகளிலே கண்டு கொள்ளலாம் எனினும், தீய நடவடிக்கைகளிலே தேர்ந்த பலர் தம் முகத்தை ஒரு இறுக்கமாகவோ அல்லது மனதில் ஏற்படும் விகாரங்கள் தெரியாதவண்ணம்
ஒரு தேர்ந்தெடுத்த புன்முறுவலையோ அலங்கரித்துக்கொண்டும் காணப்படுவர்.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரையார் உடைத்து
என்பார் வள்ளுவர்.

வெளித்தோற்றத்தில் குன்றுமணிபோல் சிவப்பாக இருப்பினும், அதே
குன்றுமணியின் நுனியில் இருக்கும் கரு நிற மனதை உடையோரும்
உளர்.


இருந்தாலும், பொதுவாக‌,

அடுத்த‌து காட்டும் ப‌ளிங்கு போல் நெஞ்ச‌ம்
க‌டுத்த‌து காட்டும் முக‌ம்


என்பார் வ‌ள்ளுவ‌ர்.

அப்படியானால், ஒருவன் பொய் சொல்கிறான் என எப்படி கண்டுபிடிக்க இயலும் ?
அமெரிக்காவில் வெளியான ஒரு கட்டுரையில் ஒரு பொய்யனைக் கண்டுபிடிக்க பத்து வழிகள் என்ன எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் திருமதி ஹெதர் ஹாட்ஃபீல்டு.

பேச்சில் முரண்பாடு, வழ்க்கமான் மனித இயல்புகளினின்றும் மாறுபட்டு செயல்படுவது,இவைகள் முதன் முறை பொய சொல்பவர்கல். முகத்தில் ஒரு பொய்யான் ( செயற்கையான ) புன்னகை, திடுக்க‌வைக்கும் நிக‌ழ்ச்சிக‌ளை ந‌ட‌ந்த உட‌னேயே முக‌த்தில் அச்ச‌மோ ப‌ய‌மோ இல்லாது நிதான‌மான‌ வ‌ர்ண‌னை இவையெல்லாம் தேர்ந்த‌ பொய்ய‌ர்க‌ளாலே ம‌ட்டும் இய‌லும் என்கிறார் க‌ட்டுரையாசிரிய‌ர்.‌

மேற்கொண்டு இக்க‌ட்டுரையை இத்தொட‌ர்பில் காண்க‌:
http://www.scribd.com/doc/8545736/10-Ways-to-Catch-a-Liar


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பொய் தோன்றுவதற்கு முதல் காரணம் உலகப்பொருட்களின் பால் நமக்குள்ள பற்றே. எப்படியேனும் நாம் விரும்பியவற்றை, விரும்பியவாறு, விரும்பிய நேரத்தில் அடைந்து தான் தீர வேண்டும் என்ற ஒருவித வெறியே பொய்யான எண்ணங்களையும், பொய்யான் வார்த்தைகளையும், பொய்யான செயலகளையும் தோற்றுவிக்கின்றன.

இதுவும் ஒரு அறியாமைதானோ !

ஏதோ நாம் விரும்பியதை உடன் எப்படியாவது அடைந்துவிடின், அதன்பின் அழிவுறா மகிழ்வுலகத்தில் திளைத்துவிடலாமென்ற கனவு காண்பதால்தான், பொய்யான் எண்ணங்கள் தோன்றி, பொய் வார்த்தைகள் புறப்பட்டு, பொய்ச்செயல்களுக்கும் காரணமாகின்றன.

இந்த அறியாமைதனைக் களையவேண்டும். கதிரவன் ஒளி பட, இருள் நீங்குவது போல, உண்மை எது என்ற அறிவு தான் நம்மை பொய் உலகத்திலிருந்து அகற்றிட இயலும்.

ஜீவா அவர்கள் தனது ஆத்ம போத விளக்கத்திலே மனத்தை லயிக்கச் செய்யலாமா ?

வாருங்கள். ஜீவா அவர்கள் பதிவுக்குச் செல்வோம்.

2 comments:

  1. //பதிவர் சந்திப்பு என்று ஒன்று நடந்ததா !! சென்னையிலா ?


    ஏதேனும் வலைப்பதிவர் சந்திப்பு நடந்தால் அதை தெரிந்துகொள்வது எப்படி ?

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com///

    டோண்டுவின் வலைபதிவில் உங்கள் பின்னூட்த்தை பார்த்தென்.

    உறுதியான வழையை சொல்ல முடியவில்லை என்றாலும் இதில் ஏதாவது ஒருதளத்தில் அதற்க்கான அறிவிப்புகள் நிச்சயம் வந்துவிடும் ..

    1.http://www.athishaonline.com/
    2.http://muralikkannan.blogspot.com
    3.http://www.narsim.in/
    4.http://www.luckylookonline.com/
    5.http://blog.balabharathi.net/
    6.http://agnipaarvai.blogspot.com
    அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் சந்திப்போம்..

    ReplyDelete
  2. அகத்தின் அழகு - பலமுறை நான் மாட்டிக்கொண்டு முழிப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி