Pages

Saturday, December 17, 2011

இன்று மார்கழி மாதம் முதல் நாள்.இன்று மார்கழி மாதம் முதல் நாள்.
திருப்பாவையின் முதல் பாசுரத்தைக் கேட்டு மகிழ்வோம்.

Monday, December 12, 2011

நம்பி விடாதே !!!

எதை நம்புவது !!எனக்கென்று ஒரு 
எதிர்காலம் ... அது 
என் கை ரேகையில் அல்ல ...
என் நம்பிக்கையிலே இருக்கிறது. 

இக்கருத்து அடங்கிய ஒரு சொலவடை தனை அனுப்பிய எனது பழைய நண்பர் திரு நடராஜன் அவர்களுக்கு எனது நன்றி.


Wednesday, November 23, 2011

ஒரு அன்னையின் பிரார்த்தனை


ஒரு அன்னையின் பிரார்த்தனை 

Monday, October 31, 2011

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்

"சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்" 

எனது அதிருஷ்டம் 

கந்த சட்டி நாளை. 1 NOVEMBER 2011.

திருத்தலங்கள் அறுபடை வீடுகள் எல்லா இடத்திலும் லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் அலை மோதும் கணக்கில்லா காவடிகள் சிந்து பாடும்.  நானோ என் வீட்டில் இருந்தபடியே அந்த குமரனை, கந்தனை, குகனை, கார்த்திகேயனை, வேலனை வணங்கி அவன் அருள் பெற வேண்டும். என் செய்வேன் !!   முருகா ! எனக்கூவினேன்.

எதேச்சையாக எனது கையில் என்றோ 1999  ல் பம்பை நகரத்தார் பதிப்பித்த புத்தகம் கார்த்திகேயன் பாமாலை கிடைத்தது.  அதில் கிடைத்ததோ ஒரு பொக்கிஷம். 
கந்தன், கார்த்திகேயன்,குமரன்,  மால் மருகன், குகன், ஷண்முகன், , சுவாமிநாதன், தண்டபாணி, வேலன், வேலாயுதன் என ஆறு படையோனை எந்த விதமாக அழைத்தாலும் அந்த தமிழ்த் தெய்வம் முருகன் , முருகனே !! அந்தமுருகனை, பழனி முருகனை கவிஞர்  மருதகாசி வணங்கும், வர்ணிக்கும் கலைதான் என்னே!! அவர் எழுதிய ஒரு பாடல் சிப்பிக்குள் முத்தாய்.


அவர் பாடிபுகழ் அடைந்தது கலைத் துறையான சினிமாத் துறையில். நாலாயிரத்துக்கும் மேலாக அவர் பாடியிருக்கிறார். அவரது பாடல்கள் காலனையும் காலத்தையும் வென்று நிற்கிறது.  மாசிலா உண்மைக் காதலே என்று பாடியவர், மாறாத காதல் கொண்டது அந்த வள்ளிக்கணவன் செந்தில் ஆண்டவன் திருக்குமரன் கந்தன் வேலன் குமரன் அவனிடம்தான். 
இந்தப் பாடலை கண்ட வினா முதல் பாடிக்கொண்டே இருக்கிறேன். இதில் உள்ள பொருள் நயம், எதுகை மோனை சொல்லிற்கு அப்பாற்பட்டது.  இதை அந்த சுந்தரனே சுவாமிநாதனே ஷண்முகனே எழுதியதோ என்றும் தோன்றியது.

ஆஹா !! படியுங்கள். ரசியுங்கள். !!!

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்துவரச்
   செந்தில்வளர் கந்தனுமே கொலுவிருக்க‌
  நங்கைமலர் தெய்வயானை வள்ளியுடன்
  நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்.

   தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்கத்
   தென் பழனி வலம் வரும் தங்க ரதமாம்
     தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும்
    தண்டபாணித் தெய்வமே சரணமய்யா

    பன்னீரும் சந்தனமும் பாற்குடமும்
    பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
    கொஞ்சுதமிழ் பாலகனுக்கு பழ நியிலே
    கோடிக்கண்கள் வேணுமய்யா காண்பதற்கே

 
    காவடிகள் உன்னைத்தேடி ஆடிவரும்
    கால் நடையாய்ப் பக்தர் கூட்டம் கோடிவரும்
    சேவடியெ சரணமென வாழ்பவர்க்கே
    செல்வ நலம் தந்தருளும் கந்தவேளே

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில்வளாற் கந்தனிடம் தூதுவிடுத்தேன்
கந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகன் பேரழகைப் படம் பிடித்தேன்.

வண்ணமயில் வாகனத்தில் வேல் முருகன்
வள்ளிதெய்வ யானையுடன் மால்முருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலையழகன்
என்னகத்தில் காட்சி தந்தான் கலையழகன்.

வெண்ணீரு நெற்றியிலே பளபளக்க‌
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க‌
பன்னீரும் மார்பினிலே கம கமக்க‌
பார்வதியின் பாலன்வந்தான் மனம் களிக்க.

ஓராறு முகம் கண்டேன் உளம் மகிழ்ந்தேன்
ஈராறு விழி கண்டேன். எனை மறந்தேன்.
சீராளன் உருக்கண்டேன் செயலிழந்தேன்.
செந்தாமரைப் பதத்தில் சரணடைந்தேன்.

முருகா என அழைத்தேன் முறுவல் கண்டேன்.
குமரா என அழைத்தேன் குளுமை கொண்டேன்
கந்தா என அழைத்தேன் களித்து நின்றான்
கடம்பா என அழைத்தேன். கனிந்து நின்றான்.

பழனி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர் சோலையுடன் சுவாமிமலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்.


இதோ !! நான் மருதகாசி பாடலை எனக்குப் பிடித்த ராகமான ஷண்முக பிரியாவில் பாடுகிறேன்.

முருகா !! வா ! எனை ஆட்கொள் !!Sunday, October 16, 2011

முத்தமிழ் அடைவினை


கைத்தல நிறைகனி அப்பமொடு
கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ...... பெருமாளே .

Sunday, October 02, 2011

ஆன்மீகப் பதிவாளர்கள் அனைவரும் வந்திருக்கும் ஒரு கொலு

ஊர் கூடி தேர் இழுத்தோம் என்று சொல்வார்கள். அது போல ஆன்மீகப் பதிவாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு பொம்மை கொண்டு வந்திருக்கும் ஒரு கொலு எங்கள் வீட்டில் அமைத்தேன். அனைவரும் வந்திருந்தார்கள்.
நீங்களும் பாருங்கள். 


வருகை புரியும் எல்லோருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்கள். 
யார் யார் வீட்டு பொம்மை என்று அவரவர்கள் தெரிந்து கொள்வார்கள். 

அது சரி, இந்தநவராத்திரி கொலுப்படிகளின் பின்னணியில் ஒரு பரிணாம தத்துவமேஅடங்கி உள்ளது. அதை இங்கே படிக்கவும். 
 
ஒவ்வொரு மாலையும் நாம் அழைத்தவர்கள் வருவார்கள். நம்முடனே சிறிது நேரம் இருந்து நமது நலம் விசாரிப்பார்கள். நாமும் அவர்கள் வருகைக்கு நன்றி தெரிவிப்போம். இது சகஜம். ஆனால் நேற்று சிறிது  கூட எதிர்பார்கவில்லை திருமதி சுசீலா அம்மா வருவார்கள் என்று. ஒரு பாட்டு பாடுங்களேன் என்று வேண்டினேன். உடனே பாடி வந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தார். 


அவருக்கும் எனது நன்றி.

Thursday, September 01, 2011

கற்பக விநாயகக்..கடவுளே போற்றி... பாரதி பாடல்.


கற்பக விநாயகக்  கடவுளே போற்றி 
சிற்பர மோனத் தேவன் வாழ்க 
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க 
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன் 
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான் 
சந்திர மவுலித் தலைவன் மைந்தன் 
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம். 
குணமதில் பலவாம் கூறக் கீளீர்.
உட்செவி திறக்கும் அதன்கண் ஒளி தரும். 
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் 
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம் 
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம் 
விடத்தையும் நோவையும் வெம்பகை எதனையும் 
துச்ச மென்று எண்ணித் துயரிலாது இங்கு, 

நிச்சலும் வாழ்த்து நிலைபெற்று ஓங்கலாம். 
அச்சம் தீரும், அமுதம் விளையும். 
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்.
அமரத் தன்மை எய்தவும் 
 இங்குநாம் பெறலாம் இது உணர்வீரே.

மகாகவி சுப்பிரமணிய பாரதி பாடல்.

Sunday, August 21, 2011

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் 
புருஷோத்தம் குரல் பாடுங்களேன்.

இன்று கண்ணன் பிறந்த நாள்.
கிருஷ்ணா நீ பேகனே பாரோ ... சித்ரா பாடுகிறார். 


Monday, August 01, 2011

எண்ணா தேனோ இருக்கின்றாய் !!!

எப்பொழுது என்னை ஆட்கொள்வாய் ? என ஈற்றடியுடன் முடியும் கவிஞர் சிவகுமாரன் கவிதை படித்தபோது எனக்கு திரு மந்திரத்தைத்தான் படிக்கிறோமோ என்ற ஐயம் வந்தது. அங்கெங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாக இருக்கும் அந்த பரம்பொருள் சிவன் என உணர்வின், அந்த
சிவனை ஒரு குறியில் வைத்து வணங்க இயலாது எனச் சொல்ல வந்த ஆசிரியர் :

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும் 
பறக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் 
நிறைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை 
வரித்து வளம் செய் யுமாறு அறியேனே.( திருமூலர் 1773 )

பஞ்ச பூதங்கள் எனப்படும் , நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகிய ஐவற்றிலும் இணைந்து அவையாகவே காட்சி அளிக்கும் சிவன் , கவிஞர்  சிவகுமாரன் சொற்களிலே எங்கெலாம் காட்சி அளிக்கிறான் பாருங்கள்: 

அண்ணா மலையில் அனலானாய் 
   ஆனைக் காவில் புனலானாய் 
மண்ணாய் காஞ்சியில் மணக்கின்றாய் 
   மாகாள ஹஸ்தியில்
விண்ணாய் தில்லையில் விரிகின்றாய் 
   விந்தைகள்  பலவும் புரிகின்றாய்
எண்ணா தேனோ இருக்கின்றாய் 
  எப்பொழு தென்னை ஆட்கொள்வாய் ? 

இப்பாடலை நானும் ஒருமுறை பாட வேண்டும் என்ற முனைப்புடன் ஐந்து ராகங்களில் இந்த பத்து பாசுரங்களை பாட முயற்சித்து இருக்கிறேன்.  பாடல் எனது உள்ளம் கவர்ந்த பஜன் சங்கீதத்தில் வல்லவராம் ஜக்ஜித் சிங் அவர்களின் நம சிவாய ஓம் எனும் hymn  உடன் துவங்குகிறது.Sunday, July 03, 2011

சுரக்கட்டும் எழட்டும். கிட்டட்டும். மலரட்டும்.

 இன்று காலையில் கணினியைத் திறந்தபோது ஒரு செய்தி காத்திருந்தது. 
தமிழ் வலை உலகத்தின் ஆன்மீக எழுத்தாளர் திருமதி கீதா அவர்கள் விடுத்திருந்த செய்தி என்னைப் பெரிதும் கவர்ந்தது.  MY WISH FOR YOU 
என்னும் தலைப்பிலே அவர்கள் எழுதியது காண இங்கே கிளிக்குங்கள்.

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்றும் அறியேன் பராபரமே

என்னும் வள்ளலாரின் வாசகம் நினைவுக்கு வந்தது. 

ஆங்கிலத்தில் இருக்கும் அவ்விருப்பங்களை தமிழில் எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றியது.
அவர்களுக்கு எனது நன்றி.

-Where there is pain, I wish you peace and mercy.
 வேதனை வருகையிலே உனக்கு அமைதியும் ஆண்டவனின் அருளும் கிட்டட்டும்.
-Where there is self-doubting, I wish you a renewed confidence in your ability to work through it.
தன்னைப்பற்றியே நீ ஐயுறும்போது, இன்னல்களை நான் சந்திக்கும் சக்தி பெறுவேன் என  ஒரு புது உறுதி நின் நெஞ்சில் சுரக்கட்டும்./
-Where there is tiredness, or exhaustion, I wish you understanding, patience, and renewed strength.
சோர்வும் அயற்சியும் உண்டாகும்போதெல்லாம், பொறுமையும் சூழ்னிலை குறித்த சரியான உணர்வுகளின் அடிப்படையில் ஒரு புதிய சக்தி உண்டாகட்டும்.
-Where there is fear, I wish you love, and courage.
பயம் ஏற்படும்பொதெல்லாம், அன்பும் துணிவும் உள்ளத்தில் மலரட்டும்.

கிட்டட்டும்.சுரக்கட்டும்./எழட்டும்.  மலரட்டும்.

Sunday, June 26, 2011

காலனின் காலனே!

தமிழ் வலை உலகில் அண்மையில் காணும் சில் புலவர்களின் படைப்புகள் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன.  சங்க காலப் புலவர்களின் படைப்புகளுக்குத் தமது படைப்புகளும் ஒக்கும் என்பதை எடுத்துக் கட்டும் வண்ணம் வகையில் திருமதி தங்கமணி அவர்களும் திரு சிவகுமார் அவர்கள் கவிதைகளும் இருப்பதை பார்த்தோம். 
எனது நண்பர் திரு குமரன் அவர்கள் அச்சுதனைத் தேடப்போய் தில்லை நடராசனைக் கண்டார். அவன் புகழ் பாடும் அஷ்டகத்தின் சொல் வலிமை, பொருள் வலிமை இலக்கண உயர்வு கண்டு மகிழ்ந்து தனது வலையில் எடுத்துக் கட்டியிருக்கிறார்.  அதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உண்மையில் இதயம் பூரித்தது.
5 மாத்திரை உள்ள 4கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் இயற்றப்பட்ட இந்த எட்டு செய்யுள்கள் உள்ள இந்த அட்டகம் இலக்கண இலக்கிய நயம் வாய்ந்தது. இதை நமது பாட புத்தகங்களில், தற்கால தமிழ் இசை இலக்கியத்தில் ஆன்மீக உணர்வு எவ்வாறு கலந்துள்ளது என்பதற்கு உதாரணமாகவும் இடத் தகுந்தது.

அதை இங்கே மறுமுறை இடும்பொழுது திரு வேட்டை அனந்த நாராயணன் ( முனைவர் அனந்த் ) அவர்களுக்கும் அதை தனது வலையில் இட்ட திரு குமரன் அவர்களுக்கும் எனது நன்றிதனை தெரிவித்து மகிழ்கிறேன்.

தில்லை நலலோன் அட்டகம்.

திருச்சிற்றம்பலம்அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)

நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)

குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)

புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)

ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5)

பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)

கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8)
திருச் சிற்றம்பலம்.
வாழ்க திரு அனந்த்
https://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/a8e5102fbf34e2d4?hl=es&pli=௧
அவர்கள் வலையில் இருந்து சில வரிகள் :

"பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’ (  உள்ள சங்கர பகவத் பாதரின் ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன் சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::

அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே

இச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:"

வழக்கம்போல் சுப்பு தாத்தா இதை பாடுவதில் சுகம் காண்கிறார். தில்லை நல்லோன் அட்டகம்

Saturday, May 21, 2011

அந்த நாளும் வந்திடாதோ !!!


காலமும் காலனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.


அந்த நாளும் வந்திடாதோ !!! 

இங்கே மூன்று வித்தியாசமான காட்சிகள்.

முதலில்,  இள வயதில்,   சின்னஞ்சிறு வயதில் எந்தக்கவலையுமின்றி விளையாடியே பொழுதைக்கழித்த நாட்கள் .

அவற்றை   நினைத்து ஏங்குகிறார் கவிஞர் சிவகுமாரன் அவர்கள்.    அவை மீண்டும் வருமா ?  என அவர் ஏங்கும் அதே வேளையில்

    இன்னொரு காட்சி.   வாலிப வயது இது.

    இள வயதில் காதலித்த ஒரு பெண்ணை கடுகி மணம் புரிந்து
    ஏதோ ஒரு நாள் சாலை விபத்தில் அவள் நடைப்பிணம் போல ஆன நிலை.
    
    ஐ.ஐ.டி. மாணவர் ஒருவர் எடுத்த குறும்படம் இது. முழுதும் பாருங்கள். 
   
    கடந்த நாட்கள் மணல் தரையில் சிந்திய பால் போலல்லவோ ?
    திரும்பப்பெறுதலும் இயலுமோ ?

    பிறிதொரு காட்சி.
    அவனை நினைத்து அவள் பாடும் பாடல்
    கண்ணனை ஏங்கி மீரா பாடும் பாடல் இங்கே.
 
     அந்த நாளும் வந்திடாதோ என எம்.எஸ். சுப்பு லட்சுமி பாடுகிறார்.
     இது இன்னொரு கோணம். இன்னொரு பார்வை.

Saturday, May 14, 2011

புதிய வானம்

 
 

pudhiya vaanam pudhiya boomi
புதிய வானம் புதிய பூமி 

Thursday, May 05, 2011

இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?


நடிகர் திலகம் சிவாஜி தோளிலும் நடிகையர் திலகம் சாவித்திரி யின் மடியில் தவழும் இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?  என்ன செய்கிறான்  ? யானை படை கொண்டு சேனை பல வென்று வாழ பிறந்தாயடா , என புகழப்பட்ட இச்சிறுவன் இன்று என்ன செய்கிறான் ?அரசியல் வாதியா அல்லது அறிவியல் மேதையா ? சினிமா ஸ்டாரா அல்லது சின்ன திரை டைரக்டரா ?  யார் அறிவார் ? 
என்ன தவம் செய்தனை ? என்று கண்ணனைக் கொஞ்சிய யசோதையை உயர்த்தி பாடும் பாடல் நாம் எல்லோருமே அறிவோமே !!  அது போலவே இமயத்திற்கு மேலான சிவாஜி , அவருக்கு நடிப்பிலே சவால் விடுமளவுக்கு நடித்த சாவித்ரிக்கும் செல்வனாக ( செல்வியோ !!) நடித்த இப்பயலை, நோக்கி நாம் சொல்வதெல்லாம் என்ன தவம் செய்தனை ? இந்த அதிருஷ்டம் (தமிழ்ச் சொல் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவல்.)  யாருக்கு கிடைக்கும் !!


இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?

Saturday, April 23, 2011

2011 ல் கம்சன்.


2011 ல் கம்சன். அதுவும் நமது தமிழகத்தில்.

இன்று ஹிந்து பேப்பரில் ஒரு கொடூரமான கம்சனைப்பற்றிய செய்தி வந்திருக்கிறது.

குடித்து வீட்டுக்குள் நுழைந்த கணவன் ( வயது 35) தனது மனைவியிடம் சண்டை போட்டு, அதன் உச்ச கட்டத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாத போதை நிலையில் தூங்கிக்கொண்டு இருக்கும் தனது மூன்று வயதுக்குழந்தையை இரு கால்களையும் பிடித்து அந்தரத்தில் தூக்கி பக்கத்தில் சுவரில் அதை அறைந்து, அக்குழந்தை அக்கணமே உயிரிழந்த செய்தி.

புராணக் கதையில் கம்சன் தனது சகோதரியின் பிறந்த குழந்தையை எடுத்து சுவரில் மோதிக் கொல்கிறான். ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு குழந்தைகள். இன்றோ ஒரு தகப்பன் தனது செல்வத்தையே அடித்து கொன்று இருக்கிறான். இது நிஜ செய்தி.

கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அந்த மனிதனின் மூளை மதுவின் மயக்கத்தில் செயலிழந்து போயிருக்கிறது.  இவரது கொடுமையான செயலைக் கண்டு நாம் எல்லோரும் கோபபடுவதும் இயல்பே.
எனக்கோ கோபத்தை விட இந்த மனிதர் மீது ஒரு பரிதாபம் தான் ஏற்படுகிறது. 


தன்னைத் தான் காக்கில் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்பார் வள்ளுவர்.


எல்லா தீயவைகளும் மற்றவர்களை அழிக்கும் தன்மையுடையது.  ஆனால், கோபம் எனப்படும் சினமோ த்ன்னையே முதற்கண் அழிக்கவல்ல வலிமை பெற்றதாம்.

சினம் சிந்தையை சிதறடிக்கிறது. ஒன்றும் இல்லை. இன்று ஏதோ பேசிக்கொண்டு இருக்கையில் என் மனைவி உங்களுக்கு கோபம் வந்தால் தலை கால் புரிவதில்லை என்றாள். அப்படி உனக்குத் தான் என்றேன். நானும் அவளும் மாற்றி மாற்றி சொல்ல எனக்கு கோபம் அதிகரிக்க, என் தலையில் முன் நெற்றியில், எல்லாம் என் வேளை என சொல்லி  சிறிதே அடித்துக்கொண்டேன். " பார்த்தீர்களா ! ஒரு வார்த்தை எத்தனை வித்தை செய்துவிட்டது ! என்றாள் என் இல்லக்கிழத்தி.  (stage demonstration !!)

சினம் ஏற்பட உந்தும் சொல்லோ செயலோ நம் கண் முன் நிகழ்கையில் அதை பொறுத்துக்கொள்ள, அதை எதிர்கொள்ள ஒரு மன ஒருங்கிணைப்பும் அமைதியும் முதற்கண் தேவை.

சினத்தைத் தடுத்து நிறுத்த இயலுமா ? அது ஒரு இயல்பான உணர்வு. ஆயினும் 
சினம் வருகையில் நாம் செய்ய வேண்டியது என்ன ? வேண்டாதது என்ன என்பது பற்றி இங்கே சென்று படியுங்கள்.

Saturday, April 16, 2011

ஒற்றியூர் அரன்பதம் பற்றியே தொழுதிட

திருவொற்றியூர் அரனின் திருச் சிறப்பை பாடி உள்ளார் தமிழ் வலை உலக மரபு கவிஞர் திருமதி தங்கமணி அவர்கள். அவரது வலையில் உள்ள இப்பாடல் சீருடைத்து. சிறப்புடைத்து.ஒவ்வொரு எழுத்தும் ஒரு லட்சம் பொன் பெறும்.
அப்பாடலின் வரிகள் இங்கு உள்ளன.  பதிவு தேதி  ௧௫ ஏப்ரில் 2011


சிந்து பைரவி ராகத்தில் நான் பாடுவதை பொறுமை இருப்பின் கேட்கவும். 

திருவொற்றியூர் அரனின் கோவில் சிறப்புகளைப் பற்றி அறிய இங்கே கிளிக்கவும். 

பற்றுக பற்றற்றான் பற்றினை = அப்பற்றை 
பற்றுக பற்று விடற்கு .

எனும் வள்ளுவனின் வாய்மொழி கவிஞர் தங்கமணி அவர்கள் கவிதையால் 
நினைவுக்கு வருகிறது.

வள்ளுவரின் குரலுக்கு மேலும் விளக்கம் இங்கே கிடைக்கிறது. அக்னிசிறகு என்னும் வலைப்பதிவிலே இருக்கும் கருத்துக்களை ஊன்றி படிக்க வேண்டுகிறேன். 
பதிவின் ஆசிரியர் அவர்கள் விளக்கம் அருமை.  படியுங்கள். 

இந்த குறளுக்கான மெய்பொருள் விளக்கம்,

உலகப் பொருள்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப்பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலை கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்

வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினைந்தாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநருளானே

இது ஒரு பக்திப் பாடலாக இருந்த போதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.


Friday, April 01, 2011

அடைவார்வினை அறுமேதமிழ் வலை உலகில் தனித் தன்மையுடன் திகழும்
திருமதி டி .வீ. தங்கமணி அவர்கள் சிவபெருமான் குறித்து  ஒரு அழகான தோத்திரம் எழுதியிருக்கிறார்கள்.  ஐந்து பாடல்களைக் கொண்ட இத் தோத்திரம் இந்த முதல் பாடலுடன் துவங்குகிறது. 
பாடல் இதோ :
 

மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.
இவரது பாடல்களின் சிறப்பு இவரது இசை இலக்கண சுத்தமாக மரபு கவிதையாக விளங்குவதுதான். 

அவரது வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம். 
அரனின் அருள் பெற
அவனடியிலமர்ந்து
ஆனந்தமாய் ஒரு
இசைவெள்ளம்.
ஈசா !
என்னே நின் அருள் !

சுப்பு ரத்தினம்.
இதை விரைவில் காம்போதி ராகத்தில் பாடுவேன்.

அது இதோ :
பாடல் அமைந்த சந்தம். 

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை) 

எனவும் குறித்து உள்ளார்கள். மற்ற ஐந்து பாடல்களையும் அவரது வலைப்பதிவுக்குச் சென்று படிக்க இங்கே சொடுக்குங்கள்.  

இதே காம்போதி ராகத்தில் எல்லோரும் நன்கறிந்த ஒரு பாடல் புலவர் மாரிமுத்தா பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 

"நடமாடித் திரிந்த உமது இடது கால் முடமாகி போனது ஏன் எனச் 
சொல்லுவீர்   ஐயா.  " எனத்துவங்கும் பாடல் பரதம் ஆடுவோர் மத்தியிலே வெகு பிரசித்தம். 

ஒரு பரத நிகழ்வு  இங்கே காண்பீர்:Wednesday, March 30, 2011

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "
(People's money for People's welfare)
எனச சொல்வது மட்டுமல்ல செய்வதிலும் காட்டும் நிறுவனம் எல்.ஐ. சி. ஆகும். பொதுத் துறை நிறுவனமான இந்த இன்சூரன்சு நிறுவனம் மக்களிடம் இருந்து பெறும் பிரிமியத் தொகைகளை நாட்டின் நல்ல திட்டங்களுக்கு ஆக்க பூர்வமான முதலீடுகள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் செயல் பட்டு வருகிறது.  

அண்மையில் சென்னை அருகே திருநின்றவூர் கசுவா கிராமத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஏழைச் சிறுவர்களுக்கு உண்ண உணவளித்து, பிளஸ் டூ வரை இலவசக் கல்வி புகட்டும் தொண்டு நிறுவனமான சேவாலய பள்ளிக்கு அதன் பொன் விழாக் காலத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டி, அதன் துவக்க விழா வரும் 2.4.2011 அன்று நடைபெறும் என்று ஒரு வரவேற்பு மடல் எனக்கு வந்து இருக்கிறது. 
மண்டல மேலாளர் திரு எம். ஆர். குமார் அவர்கள் எல்.ஐ.சி. யின் உதவியால் கட்டப்பெற்ற இந்த ஜி. எல். எப். (GOLDEN JUBILEE BLOCK) கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்கள்.  
நான் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனமும், எனது நாற்பது ஆண்டுகட்கு மேலே எனது நண்பர் திரு ரமணி அவர்களை தொடர்பு அலுவலர் ஆக கொண்ட சேவாலயா நிறுவனமும் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நல்லிதயம் கொண்ட எல்லோரும் வாழ்த்துவர் .

பள்ளித தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதியின் வாக்கு பலித்திருக்கிறது.

சேவாலயா நிறுவனர்களுக்கும் அதில் தொண்டாற்றும் எல்லா ஊழியர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

Tuesday, March 29, 2011

ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைஅன்பு நண்பர் திரு திகழ் அவர்கள் வலைப்பதிவில் அழகான வெண்பா ஓன்று,  சிவனைத் துதித்து " நான் பணிவேன் நயந்து " என்று வினயத்துடன் எழுதியதைக் கண்டு வியந்தேன். வடமொழியிலே ஒரு பழ மொழி உண்டு. 
(vidhya dhadathi vinayam ) 
கல்வி அடக்கத்தைத் தரும் என. அது சொல்வது போல, கற்கக் கற்க, இன்னமும் நாம் கற்க வேண்டியதெல்லாம் உலகளவு உள்ளது என மறவாது  இருப்பதும் அடக்கமே. அந்த அடக்கத்தின் கருவே ஆண்டவனின் நினைவு, துதி எல்லாமே.

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்களால் எழுதப் பட்ட வெண்பா இது எனத்
திகழ் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நன்றி.

சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த இந்த வெண்பா இங்கே உள்ளது.

சுப்பு தாத்தா இப்பாடலை யதுகுல காம்போதி என்னும் ராகத்தில் பாடுகிறார்.

இன்னொரு துதி திரு சிவகுமாரன் அவர்கள் வலையிலே உள்ளது. ஓம் நமோ நாராயண என்னும் பாடல். திரு சிவகுமாரன் அவர்கள் நெஞ்சம் ஒரு கவிதை ஊற்று.  இவர்தம் கவிதையிலே வருகின்ற சொற்கள் யாவுமே எனக்கு மாமல்லபுரத்து சிற்பங்களாகத் தோற்றம் அளிக்கின்றன.

அவர் எழுதிய பாடலை நான் ஹிந்தோளம் எனும் ராகத்தில் பாட எத்தனிப்பதை அவரது வலையில் காணலாம். கேட்கலாம்.

Saturday, March 12, 2011

தாயே நான் அஞ்சேன்


அழகான வெண்பா ஒன்று வலை நண்பர் திகழ் அவர்களால் எழுதப்பெற்று இருக்கிறது.

உலகத்து எல்லா உயிர்கட்கும் அவரவர் வினைப்பயனுக்கேற்ப இன்ப துன்பங்கள் விளையத்தான் செய்கின்றன. இன்பம் வரும்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவது மாந்தரின் இயல்பு. அதுபோல் துன்பம் வரும்போது தொய்ந்து போவதும் இயல்பே.

இருப்பினும், துன்பங்களைக் கண்டு நான் அஞ்சேன் எனக் கூறும் கவிஞர் திகழ் அவர்கள் தனக்கு உறு துணையாக உலகத்து அன்னை இருக்கிறாள் என உணர்கிறார்.  எவ்விடத்திலும் எக்காலத்திலும் உலகத்தின் அன்னை தாயே இருக்கையில் தான் எதற்கு அஞ்சவேண்டும் என நினைந்து அஞ்சேன் என
கூறுகிறார்.

பக்தியின் அடித்தளம் இறையின் பால் கொண்ட உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மனம் இறுகிச் செல்கையில் மாந்தர் எதைக் கண்டு அஞ்சுவார் !!
 வெண்பா படிக்க இங்கே செல்க.

சுப்பு தாத்தா பாடுவது செஞ்சுருட்டி என்னும் ராகத்திலே.

திகழ் அவர்கள் தனது இன்னொரு வெண்பாவிலே இறைவனைத் துதிக்கத் துதிக்க நாம் செய்த பாவம் எல்லாம் தீருமெனச சொல்கிறார். 
நாம் படும் இன்ப துன்பங்கள் யாவுமே நம் வினைப்பயன் என்ற மன நிலை கொண்டபின் இறைவனைத் துதித்தால் செய்த வினை மறைந்து போமோ என்று நினைக்கவும் தோன்றும்.

செய்த வினை இருக்க தைவத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியும் ?  என்பார் அவ்வை பிராட்டி.


இருப்பினும் அந்த இறைவன் கருணையின் கடல். அந்த கடல் அலைகளின் சுழற்சியில் நாம் அமிழ்ந்து போகையிலே நமது துன்பங்களை மறக்கவும் இயலும். அதன் தாக்குதல் இருந்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளவும் முடியும் போல்தான் தோன்றுகிறது.

இதோ திகழ் எழுதிய இன்னொரு கவிதை. 
அதை சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் பாடுகிறார்.


Sunday, February 20, 2011

மதம்கொண்ட யானை நான், மாதவா !ஒரு மாமத யானை நம்முள் ஒளிந்து கொண்டு இருப்பதை நாம் குருவின் அருள் பெற்றால் அன்றி காண இயலாது. அந்த மமதையை, தான் என்னும் ஆணவத்தை, மனதிலே என்றும் குடியிருக்கும் அடங்காத ஆசைகளை, பேராசைகளை,  நம் குருவின் அருளால் அடக்கி நம்முள் அந்த இறைவன் குடி கொண்டிருப்பதை உணரவேண்டும் என பொருள்கூறும் திருமூலரின் இந்த பாசுரத்தை படித்துக்கொண்டிருந்தேன்.

மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தின் மறைந்தது மாமத யானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

இப்பாடலின் பொருளை மனதிற்குள் வாங்கும் காலையில் மனதிலே ஒரு யானை வந்தமர்ந்திருப்பது போல‌......
ஒரு பிரமையா என்ன அது !! திடுக்கிட்டேன். பாடல் புத்தகத்தை மூடிவிட்டு, கணினியைத் திறந்தேன். அதில்......
நான் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளில் ஒன்றான " வெண்பா வனம் " அதில் திகிழ் அவர்கள் ஒரு வெண்பா எழுதியிருந்தார்கள். எனது அப்பொழுதைய மன நிலைக்கு மிகவும் ஒத்து இருந்த அந்த வெண்பாவை

பாடலாம் என நினைத்தேன். பாடியும் விட்டேன்.

அது இதோ !!
மதம்கொண்ட யானைநான், மாதவா ! உந்தன்
இதம்கொண்ட பார்வையால் ஈர்த்திடு !- உந்தன்
கதம்கொண்டே எந்தன் கவலைகளை யெல்லாம்
வதம்செய் தெனைக்காத் திடு !

அம்மாதவனே என் ஆசானாக வந்து எனக்கு அருள் புரியவேண்டும். என் மன இருள் அகற்ற வேண்டும். 

இந்த பாட்டை பாடி முடித்தபின் திகழ் அவர்களிடம் எப்படி சொல்வது எனத் 
தெரியாது திகைத்து நின்றேன்.  அவர்கள் வெண்பா வலைப்பதிவில் ( அது  உண்மையில் ஒரு வனமா  அல்லது வண்ணப்பூங்காவா  என்று பிரமித்து போகிறோம். ) பின்னூட்டத்திற்கு இடம் இல்லை. அவர்கள் இ மெயில் ஐ.டி யும் இல்லை. அவர்களே வந்து பார்த்தால் தான் உண்டு.
வருவார்கள் !! மாதவன் அல்லவா அழைத்துக்கொண்டு வருவார் !!!
Thursday, February 17, 2011

இட்லியும் எஸ்.வீ. சேகரும்.

இட்லியும் எஸ்.வீ. சேகரும். 

எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. புரியவும் புரியாது.  அதனால் அதைப்பற்றி நான் எப்பொழுதும் எழுதுவது கிடையாது. அரசியல் பற்றி பத்திரிகைகளில் படிப்பதன் காரணமே இன்றைய கால கட்டத்தில் அதைவிட நகைச் சுவை காட்சிகள் அளிக்கும் அரங்குகள் கிடையாது என்று நான் நம்புவதுதான். 

நிற்க. நகைச சுவையாக இருக்கும் வலைப்  பதிவுகளில் ஒன்று இட்லி வடை. அதனால் அங்கு போய் படிப்பேன்.  சென்ற ஒரு வாரத்தில் தமிழ் திரை உலகத்தின் நகைச் சுவை நடிகர், மயிலை எம் எல் எ. திரு எஸ்.வீ. சேகர் அவர்கள், ஒரு கட்சியில் இருந்து, மற்றும்  ஒரு குறிப்பிட்ட கட்சிக்குப் போவார் என்று பொதுவாக மக்கள் நினைக்கும் சமயம், அவர் இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்ததை பற்றி இந்த வலைப்பதிவில் எழுதி இருக்கிறார்கள்.  அவரும் அதற்கு பதில் விளக்கமளித்து இருக்கிறார். அதெல்லாம் எனக்கு ஒரு பொருளாக இல்லை. அவர் எந்த கட்சியில் இருந்தார் , இனி எங்கே இருக்கப்போகிறார் என்பது எனக்கு முக்கியமில்லை.


என்னைப் பொறுத்தவரை அவர் தனக்கு இட்லி பிடிக்காது என்று சொல்லிவிட்டாரே ! என்று தான் மனம் உடைந்து போய்  இருக்கிறேன். வழக்கமாக என் நண்பர்கள் வலையில் காணப்படும் கவிதைகளுக்கு மெட்டு போடுவது வழக்கம். இன்று அதில் மனம் செலுத்த இயலவில்லை.  இட்லியை போய் பிடிக்காது என்று ஒரு நகைச் சுவையாளர் என உலகுக்கு அறிமுகமானவர் சொல்லிவிட்டாரே  என்று மனம் வருந்துகிறது. 

தமிழ் நாட்டின் தலையாய சிற்றுண்டியே 
இட்லி தானே.! ஒரு சூடான இட்லி சாம்பார் சாப்பிட்டபின் தானே உடலில் ஒரு புது உணர்வு பிறக்கிறது.  ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆனா உடனே இட்லி கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்களே.!! ஒருவனுக்கு வயிறு சரியில்லை என்று இருந்தாலும் இட்லி சாப்பிடலாம் என்று அனுமதி தருகிறார்களே !! அதில் உள்ள ப்ரோ பயோடிக் சத்துக்கள் பற்றி உலகமே அறிகிறதே !!
இட்லி சாம்பார் என்றாலே உலகத்தில் தமிழன் உணவு என்று தானே சொல்வர்.  அமெரிக்கா, ஆப்ரிகா, ஆஸ்த்ரேலியா மட்டுமன்றி, தமிழன் ஒருவன் அண்டார்டிகா சென்றபோதிலும் இட்லி மாவை மறக்காமல் எடுத்துக்கொண்டு போனான் என்று தானே சரித்திரம் சொல்கிறது.  நான் போன வருடம் அமெரிக்கா சென்று அங்கு எனது நாக்கு செத்து சுண்ணாம்பு ஆன நேரத்திலே எடிசன் நகர சரவணா பவன் தானே எனக்கு இட்லி சாம்பார் அளித்து எனக்கு புது உயிரை அளித்தது !!
ஒரு திருமணம் என்றால், அதிகாலை உணவு இட்லியும், பொங்கலும் தானே. !

அதை பிடிக்காது என்று சொல்லி இவர் எப்படி சொல்வார் ? !!!
வெகுண்டு எழுந்தேன்.  அந்த பதிவிலே ஒரு பின்னூட்டம் போட்டேன். அதை அவர்கள் பிரசுரிக்க வேண்டும். அதை அவர் படிக்க வேண்டும்.  இதெல்லாம் நடக்காது.  அதனால், அங்கே நான் எழுதிய பின்னூட்டத்தை இதிலே இடுகிறேன். 
ஒன்று மட்டும் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இட்லியை பழித்தவர்கள், பகைத்தவர்கள், புறம் பேசுபவர்கள், ஒதுக்குபவர்கள், ஓரம் கட்டுபவர்கள்  யாராக இருந்தால் என்ன !! தமிழ் நாடு எனது, தமிழன் நான் என்றெல்லாம் சொல்லமுடியாது.  அதுவும் மயிலை இட்லி யின் மையம்.  இட்லி பிடிக்காதவர்களை இந்த தொகுதி மக்கள் ஆதரிப்பார்களா ? எனக்குத் தெரியவில்லை.

நிற்க. 
பின் வருவது நான் இட்லி வடை வலைப்பதிவில் எழுதிய பின்னூட்டம். 
சேகர் சார் !!
   உங்களுக்கு இட்லி பிடிக்காதா !!  ஒரு வேளை வெறும் இட்லி மட்டும் சாப்பிடுகிறீர்கள் போல்     இருக்கிறது.  அதனால் தான் !!எனக்கு தெரிந்தவரை உங்கள் புகுந்த வீடு தஞ்சைத் தரணி அல்லவா ? அங்கே வெற்று  இட்லி பரிமாறுவது சாப்பிடுவதே சம்பிரதாய விரோதம் ஆனதே !!

    இட்லிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, வெங்காய சாம்பார், கொத்ஸு,   புதினா சட்னி, வெங்காய சட்னி, கடப்பா சாம்பார், இதையெல்லாம் சேர்த்து சாப்பிட உங்களுக்கு
 தெரியாதா என்ன ? சில பேர் ஊறுகாயும் சேர்த்துகொள்வார்கள். வெங்காய
வெத்தக் குழம்பு அல்லது மிளகு குழம்பு தொட்டுக்கொண்டால் !!! ஆஹா !! அல்லது மோர்குளம்பில் இட்லியை மிதக்கவிட்டு சாப்பிட்டால் அதன் ருசியே தனி.  இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதே என்று அதிசயமாக இருக்கிறது.உங்களது நகைச் சுவை நாடகங்களில் இட்லி வரவே இல்லையா !!

 இட்லியில் சாதாரண இட்லியைத் தவிர காஞ்சிபுரம் இட்லி இருக்கிறது. அதுவும் வேண்டாம் என்றால்   ரவா இட்லி இருக்கிறது.  கோதுமை மாவு கலந்த இட்லியும் உங்களுக்கு டயாபிடிஸ் இருந்தால் ( God Forbid ?)     நல்லது. சரவணா பவனில் பதினைந்து இட்லி என்று சின்ன சின்ன கோலிக்குண்டு போல இட்லி தருகிறார்களே !! சுகமோ சுகம் அல்லவா அது !!


  வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, பெருங்காயம் போட்டு,
    இட்லி மிளகாய் பொடி தூவி, பிறகு கருகப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு இட்லியை திரும்பவும் உதிர்த்து   நன்றாக பொன் நிறம் வந்தபின் சாப்பிடுங்க  ஜோர் ஜோர் என்று சொல்வீர்கள்.  


   முக்கியமாக, இட்லி அரிசி என்றே புழுங்கல் அரிசியில் இருக்கிறது. ஒரு வேளை உங்கள் வீட்டில்    சாப்பாட்டு அரிசியை உபயோகித்து விட்டார்களோ என்னவோ ! அதில் இட்லி செய்தால், கொஞ்சம்
   கொழ கொழ என்று தான் இங்கேயா, அங்கேயா என்று திண்டாடும் திருசங்கு போல் இருக்கும். ( ஹ்யூமர் ஒன்லி )


   இன்னொன்றும் இருக்கிறது.  இட்லி அரைக்கும்பொழுது ஒரு பங்கு உளுந்துக்கு நாலு பங்கு அரிசி    இருக்கவேண்டும்.  மைய அரைக்கவேண்டும்.  அரைத்த மாவை நன்றாக கிளறி விட வேண்டும். இரண்டு நாட்கள் ஆகிவிட்டால் உளுந்து மேலே வந்து விடும்.  பிறகு வார்க்கும் இட்லிகளில் அரிசி மட்டும் தங்கி விடுவதால் கொஞ்சம் கெட்டி ஆகி விடும். இது இல்லத்து அரசிகள் அனைவருக்கும் தெரியும். 


   இத்தனையும் சொன்ன பிறகும் உங்களுக்கு இட்லி பிடிக்காது என்றால், வேற வழியே இல்லை.


   உங்கள் செல்லுக்கு ஃபோன் செய்கிறேன்.  ஒரு நாள் காலை குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு    வரவும்.  இட்லியைப்போல காலை சிற்றுண்டி உண்டா என திகைக்க வைக்கிறேன்.


   சுப்பு தாத்தா.
  

  Saturday, February 05, 2011

வாவா மணிவண்ணா வா.வாவா மணிவண்ணா வா
என்ன ஒரு அற்புத இலக்கிய படைப்பு !!
அதில் இசை கலந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கர்நாடக சங்கீத மெட்டு
ஆனந்த பைரவி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
மேடம் திகழ் அவர்களின் வெண்பாவைக் கண்டு ரசிக்க இங்கே கிளிக்குங்கள்.

Thursday, January 20, 2011

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

உண்மையாகத்தான் சொல்கிறேன். 
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அவரே வருவார் என்று.
ஆச்சரியம், பயம், மகிழ்ச்சி ஆகிய பல  உணர்வுகள் ஒரே சமயத்தில் மனதில் !!
எனக்கு இப்படி ஒரு அதிருஷடமா ?
நினைத்துப்பார்க்க கூட இல்லையே !  இப்படி ஒரு அதிருஷ்டம் வருமென்று எந்த சோதிடர் கூட சொல்லவில்லையே !! உடல் ஒருதரம் ஒரு கணம் புல்லரித்து போனது.,  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

நம்பக்கூடிய செய்தியா அது !!

என் மனைவி கூட பக்கத்தில் இல்லை. அவள் பக்கத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டாம் என்று சரியாக சொல்வாளே ?

(இந்த மனைவிகளே,( ஐ மீன் ஹவுஸ் வோயவ்ஸ்) இப்படித்தான்,  ஒரு கோணத்தில் பார்த்தால், கம்ப்யுடர் மாதிரி.  சரியான நேரத்தில் டவுன் ஆகி விடுவார்கள். .)

போனால் போகிறது. நாமே சமாளிக்கலாம் என்று வந்தவரை இன்னும் ஒருமுறை நன்றாக கவனித்தேன்.
ஐயமே இல்லை. அவரே தான்.

கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரம்.
வாசல் பக்கம் ஒரு கண் பார்த்தேன். வாகனம் ஏதாவது ?
அட ! கருடன் கண்ணில் பட்டார் !!
வியாழன் அதுவுமா கருடன் சேவையா !  என்ன பாக்கியம் !!
பக்தா !! ஏன் மௌனம் !! என்ன வேண்டும்? உடனே  கேள் என்றார்.
என்ன கேட்பது என்றே புரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வேண்டும் என்று எதை எதை எல்லாம் வேண்டும் வேண்டும் நினைத்துக்கொண்டிருந்தேனோ  அவை அனைத்துமே நினைவுக்கு வரவில்லை.
வீடு, வாசல், பதவி, புகழ், எல்லாமே இந்த வயதிலே எதற்கு, தேவை இல்லை துச்சம் என்று அவ்வப்போது தோன்றி கொண்டு இருந்தாலும், இந்த அவசியம் இல்லாத ஆசைகள் மனத்துக்குள் ஆரவாரிப்பது  நிஜந்தான். நேற்று கூட ஒரு ஸ்லைடிங் சேர் கம் பெட் ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ....திருவான்மியூர் கிராண்ட் ஸ்வீட் கடையில் இருந்து தினப்படி புளியோதரை, பாயசம், ஆத்து மாமிக்கு மிக்சர் (துளசி மேடம் போயிட்டு வந்தாங்களாம். ) முறுக்கு இத்யாதி, இத்யாதி.  

என் போராத காலமோ என்னவோ !  அந்த அத்தனை ஆசைகளில், தேவைகளில், ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.அவை எல்லாமே குப்பை என நினைத்து விரக்தியில் கவிதை எழுதிய காலமும் உண்டு.அதெல்லாம் அந்தக் காலம்.  ( மனுஷனுக்கு காலன் நெருங்கி வர வர காலங்கடந்த ஆசைகளும் வரும் போல் !! )

அடடா !! என் ஞாபக மறதி காரணமாக எப்படிப்பட்ட நேரம் வீணாகிறதே !!
வந்தவர் எத்தனை நேரம் எனக்காக காத்திருப்பார் ?  என்னைப்போல் எத்தனை பக்தர்களுக்கு அவர் தரிசனம் தரவேண்டுமோ ? சீக்கிரம் சொல் சீக்கிரம் சொல் உனக்கு என்ன வேண்டும் என்று எதோ ஒன்று என்னை உந்தித் தள்ளியது.

இன்னும் ஒரு சோபா கம் பெட் , ஒரு எல்சி டி.   டி .வி. ஹால் அளவுக்கு,   ஒரு டூப்ளே பிளாட் (நமக்குச் சரிப்பட்டு வருமோ ? மாடிக்கும் கீழேயும் எத்தனை நாளைக்கு ஏறி இரங்கா முடியும் ?), ,,இல்லை ..ஒரு தனி வீடு,.. சுத்தி வர ஒரு  தோட்டம், ஒரு புதிய மாடல் கார் (டோயடோ போட்டிருக்கானே 13 லச்சதிலே )  இன்னும் கொஞ்சம் வங்கி பாலன்ஸ்  மனசு அடுக்கிகொண்டே போகிறது. வெட்கத்தை விட்டு கேட்கலாம் என்று நினைத்தபோதே,  அடடா ! உனக்கு இந்த வயசிலே கூட இந்த மாதிரி அநித்தியமான குப்பையைத் தவிர வேறு ஒன்றும் கேட்கத் தோணாதா என்று மனச்சாட்சி குடைந்தது.  இன்று தானே திருமதி லலிதா மிட்டல் அவர்கள் வலைக்குச் சென்று அவர்கள் தமிழில் கருத்தாக்கம் செய்த பஜ கோவிந்தம் *அதை பாடினேன் என்று கதறினாயே !! அப்படியுமா இந்த அல்ப சமாச்சாரங்களில் உன் புத்தி போகிறது என்று மன சாட்சி சொன்னது.

வாயைத்திறக்கலாம் என்று நினைக்கும்போதே  குப்பை என்ற சொல்லும் மனதிற்கு வந்தது.   இந்த மனசு இருக்கே ! விசித்திரம்.    எதை மறக்க வேண்டும் அப்படின்னு நினைக்கிறோமோ அதுவே மனசிலேயே இருந்துகொண்டு கழுத்து அறுக்கும்.

கேட்டுவிடுவோமா ! கேட்பது  சரியா தப்பா எனச சொல்வதற்கு இந்த கிழம் கூட பக்கத்தில் இல்லை.

துணிந்து கேட்டுவிடுவோம் என்று நினைத்து , ஒரு முறை மனதிற்குள் ஒரு ஒத்திகை பார்த்துவிடுவோம் என்று சொல்லிப்பார்த்துகொண்டேன்.

இன்னும் ஒரு வீடு அடையார் மாதிரி லோகாலிடிலே, ஒரு தோட்டம் கொடைக்கானல் லே ( பக்கத்தில் பன்னைக்காடா இருந்தாலும் பரவா இல்லை ) ஒரு சுமார ஒரு கோடி ரூபா சுவிஸ் வங்கிலேநெட் பாங்கிங் வசதியோட  என்று சொல்ல நினைக்கும்போதே, மனம்,  இல்லை, மனச்சாட்சி "நீ கேட்பதெல்லாம் குப்பை"  எனச்சொல்லியது. "நீ செத்த நேரம் சும்மா இரு. என்றுஅதை ஒதுக்கி தள்ளிவிட்டு கேட்போம் என்று வாயைத் திறந்தேன்.    அதற்குள்......

ஆண்டவன் வாசல் பக்கம் பார்க்கிறார். அவருக்கு என்னைப் போல் நிறைய பேரை பார்க்கவேண்டும் என்று இருக்குமோ இன்னவோ!  சீக்கிரம் போய்விடுவார்.  போல் இருக்கிறது.

"நாற்பது வருஷத்திலே உனக்கு கிடைக்காததை எல்லாத்தையும் நாராயணன் உனக்கு நாலே வினாடிலே கொடுத்துடுவார். அதனாலே ....
"சட்டுன்னு சொல்லு, சட்டுன்னு சொல்லு" என்றது மனது.

" பகவத் சான்னித்யமே உனக்கு கிடைத்து இருக்கிறது. மற்றது எல்லாமே அல்பம், அல்பம், வாயை மூடிண்டு சும்மா இரு. " என்றது மனச்சாட்சி.

மனசு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் வாய் எழவில்லை.  வாய் திறந்தது ஆனால் குழறுகிறது.  குரல் எழவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சொல்ல ஆரம்பித்தேன்.  என்ன துரதிருஷ்டம் !! எனது ஒரு வார்த்தையில் கூட ஓலி இல்லை.

"என்ன என்ன ? "  என்று என்னை ஊக்குவித்தார் இறைவன்.
சொல்ல துவங்கினேன். சொல்லியும் விட்டேன்.

என்ன இது?  குரல் ஒலியே எழும்ப வில்லையே !!  கண்கள் நிரம்பின.

என்ன என்னவெல்லாம் எனக்கு  வேண்டும் என்று சொல்ல நினைத்தேனோ அவை எல்லாமே அடங்கிபோனால் போல் இருந்தது.  ஓலியாக வெளி வரவில்லை. கடைசி வார்த்தை ..கடைசி ஒரு சொல் அது தான் அந்த  மனச்சாட்சி சொன்னது.
 அதுதான் வெளியே ஏதோ ஒன மேன் ஆர்மி போல் தனிக்  குரலாக ஒலித்தது.

ஆம். அதுதான் .
குப்பை என்று ஒரு சொல். ஒரே சொல்.

இறைவன் அதிர்ந்து போனார் போல், திடுக்கிட்டாற்போல் தோன்றியது. இருந்தும் சொன்னார்.

"என்னது, குப்பையா !! புரியவில்லையே !! ஓஹோ !  சென்னை நகர வீதிகளில் இருக்கும் குப்பை,கழிவு, இதெல்லாம் அகற்றவேண்டுமா !!"

நான் பதில் சொல்லுமுன்னே அவர் தொடர்ந்தார்.

"ஐ ஆம் ஸோ சாரி ! என்னால் முடிந்ததைக் கேட்பாய் என்று நான் எதிர்பார்த்தேன் !!" என்று சொல்லி அவர் மறைந்து போனார்.     
அப்பறம்....?
**********************************************************************************
*தள்ளாமையால் உடல் தளர்ந்துவிட்டாலும்
             வெள்ளியாய்த்தலைமுடி வெளுத்துவிட்டாலும்
           பல்லிழந்தே வாய் பொக்கையானாலும்
           பொல்லாத ஆசைகள் போவதேயில்லை !
*************************************************************************************
பின் குறிப்பு. 
எச்சரிக்கை. 
மனைவிக்கு ஜால்ரா போடாதவர்கள் இதை தயவு செய்து படிக்க வேண்டாம்.  
டந்தது என்ன?   "என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.


அடடா ! ரொம்ப தூங்கிவிட்டேன் போல் இருக்கே !!  பகல் லே கண வந்தா பலிக்கும பலிக்காதா தெரியவில்லையே ?
ஒரு காலிங் பெல் சப்தம். தட் என்று எழுந்தேன்.
வாசல் கதவை திறந்து பார்த்தேன். கொரியர் ஒரு பார்சலை தந்தார். 
அவசரம் எனக்கு எப்பவுமே !  அதை உடைத்து பார்த்தேன். எனக்கு யார் என்ன அனுப்பி இருப்பார்கள்?
அட ! அமெரிக்காவில் இருந்து என் பெண் எப்போதோ நான் இந்த ஸ்வைன் ப்ளூ வந்த டயத்தில் கேட்ட முக மூடி அனுப்பி இருக்கிறாள்.  அந்த டப்பாவில் ஒரு ஐநூறு இருக்கும். 
என்ன்ன என்ன என்று கேட்டுகொண்டே என் வீட்டுக் கிழம் !!
கனவைச் சொல்லிவிட்டு பார்சலையும் காண்பித்தேன். 

" இந்த பாருங்க... லைப் லே சிலதெல்லாம் நம்மாலே முடியும்.  பலது நம்மாலே  முடியாது.       என்ன முடியும்...   அப்படின்னும் தெரியனும்.  அதே சமயம் , என்ன முடியாது அப்படின்னும் தெரியனும். "

" எனக்குத் தெரியாது அப்படின்னு சொல்றியா ?" நான் இடை மரித்தேன். 

" அப்படி சொல்லலை. இரண்டுக்கும் நடுவில் இருக்கிற வித்தியாசத்தையும் தெரிஞ்சுக்கணும்
 *****

************************************************************************
பரியினும் ஆகாவாம் பாலல்ல
உய்த்துச்சொரியினும் போகா தம

Sunday, January 16, 2011

சின்ன சின்ன குஞ்சுகள் சிங்கார பிஞ்சுகள்.

இந்த சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் இந்த ஊர் சிடி யூனியன் வங்கி மாத காலண்டர் கிடைத்தது. 
 

அதில் உள்ள பிஞ்சுகளைப் பார்த்தேன். ரசித்தேன். இந்தச் சிறார்களுக்கு பெயர் வையேன் என்று எங்க வீட்டு கிழவியிடம் சொன்னேன். அவள் வைத்த பெயர்கள் கீழே.

நீங்கள் என்ன பெயர் வைத்து இந்த செல்வங்களை அழைப்பீர்கள் ?

புன்னகை மன்னன்


விஜயன்

 

Posted by Picasa


சுட்டிPosted by Picasa

Posted by Picasa
விஷமக்காரன்
Posted by Picasa

அப்பு

Posted by Picasa

ஆயுத பாணி
Posted by Picasaசின்ன சின்ன குஞ்சுகள் 
    சிங்கார பிஞ்சுகள்.

Thursday, January 13, 2011

நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக! மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!


தைப்பொங்கல் திருநாள் முன்னிட்டு எனக்கு வாழ்த்து அனுப்பியிருக்கும் திரு ஆர். நடராஜன் அவர்கள் நான் பணி புரிந்த நிறுவனத்திலே வேலை பார்ப்பவர். என்னை விட ஒரு 20   வருடம் இளையவர். இருப்பினும் அவர் மனதிலே நான் ஒரு நல்ல நண்பனாக இருந்து இருக்கிறேன். நான் ஒய்வு பெற்று ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகியபோதிலும் என்னை நினைவு கூர்ந்து வாழ்த்து மடல் அனுப்பியிருக்கும் அவரது அன்பு உள்ளத்துக்கு நன்றி சொல்ல, ஒரு வழியாக  அவர்தம் வாழ்த்து மடலையே இங்கு பதிவிடுவோம் என்று எண்ணினேன்.

அடுத்து வருவது தமிழ் பதிவுலக கவிதாயினி கவிநயா அவர்கள் கவிதை. இது இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இயற்றி நான் மெட்டு அமைத்து அவரது வலையில் இட்டது.
அழகான கவிதை.  என்றும் உயிர் துடிப்புடன் அமைந்த கவிதை இது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பதிவு உலக கவிதாயினி திருமதி கவிநயா அவர்களின் கவிதையை இந்த வருட பொங்கலன்று மறுபடியும் பதிவிட்டு தமிழ் மக்கள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!


மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!

நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்க


திருமதி துளசி கோபால் அவர்கள் தமது வலைப்பதிவிலே ஒரு அழகான வாழ்த்து படம் இட்டு இருக்கிறார்கள்.  அதையும் பார்த்து மகிழுங்கள். பொங்கல் திருவிழா வட மா நிலங்களிலும் பல விதமாகக் கொண்டாடப் படுகிறது. துளசி மேடம் என்னமா அழகாக  வர்ணிக்கிறார் என்று பார்க்க இங்கே சொடுக்குங்கள்.