Pages

Thursday, November 15, 2007

சூர சம்ஹாரம்.


ஆறு படை வீடுகளிலும் இன்று மக்கள் வெள்ளம்.

கடலோரத்தில் திருச்செந்தூர்.
மதுரையிலே திருப்பரங்குன்றம்.
பழமுதிர்ச்சோலை
பழனியிலே பழனியாண்டவன்.
சுவாமிமலையிலே தந்தைக்கு உபதேசம் செய்தவன் சுவாமினாதன்.
திருத்தணிகையிலே,
கண்டியிலே கதிர்காமத்திலே...

எல்லா முருகன் கோவில்களிலும் இன்று
சூர சம்ஹாரம்.


தமிழ் மக்கள் யாவரும் சட்டி கவசம் உரைக்கவேண்டும்.
முருகனின் எல்லாப்பெருமைகளையும் எடுத்துச்சொல்கிறது.
அன்பர் குமரன் அவர்களின் வலைப்பதிவு. இது தமிழ்மக்களுக்கோர் பொக்கிஷம்.
அப்பதிவுக்கு எல்லோரும் சென்று முருகப்பெருமானின்
திருவருள் பெற்றிட வேண்டுகிறேன்.




Muruga


Way leading to Lord Muruga
Immediately below Lord Ganapathy
on your left. Please click there.

Saturday, October 13, 2007

ஏதாவது ஒரு அடைக்கலம்

மனிதராய்ப்பிறந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஏதாவது ஓர் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டி எதையாவது மனிதன் நாடுகிறான். சிறிது நாள் சென்ற பின்னே மற்றோர் பயம் பற்றுகிறது. முன்னைய அடைக்கலம் இப்போதைய பயத்தினை அகற்றுவதில்லை. புதியதென ஒரு அடைக்கலத்தைத் தேடி நிற்கிறான்.

இவ்வாறாக வாழ் நாள் முழுதுமே ஏதாவதொரு பயம், ஏதாவது ஒரு அடைக்கலம் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறான். இவனுடைய பயங்களுக்கு என்றுதான் நிரந்தர தீர்வு வருமோ ?

இது என்னுடையது என்ற மன உணர்வு உள்ளவரை, பயம் நீங்காது. இந்த பொருள் நமதல்ல, இந்த உறவு நிலைத்ததல்ல, இந்த தேகம் நிரந்தரமல்ல என்ற உணர்வு ஓங்கி நிலைகொள்ளூம்போதுதான், மனிதன் கவலை ஒழிந்து, பயம் நீங்கி, உண்மையான மெய்யறிவினைப் பெறுகிறான்.

மாணிக்கவாசகர் சொல்லுவார்:

" அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே....."
உடல், பொருள், ஆவி எல்லாமே அந்த ஈசனிடம் அர்ப்பணித்தோருக்கு வேறேதும் அடைக்கலம்தான் தேவையோ ?

Wednesday, June 20, 2007

உளதன்றி இலதன்று Being While not Presenting.

இன்று "திருமந்திரத்தில்" உள்ள 2335 வது பாட்டினைப் படிப்போமா?

" இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லது உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராத் தூரமென்
றெல்லை யுணர்ந்தால் உயிர்க்குயிராமே...."


உளதன்றி இலதன்று

இறைவன் எல்லா இடங்களிலும் எப்பொருள்களிலும் நீக்கமின்றி உள்ளவனாய் இருக்கின்றான். இன்ப துன்மங்கட்கு வேறாகி இல்லாதவனாக திகழ்கிறான்.

ஒரு நாடகம் நடக்கும் இடத்தில் விளக்கு ஒளி எங்கும் கலந்து உள்ளது. நாடகத்தை நடத்துகின்றது. அது காண்கிறது. நம்மை நாடகத்தைக் காணச்செய்கிறது.

சோகமான காட்சியில் நாம் அழுகின்றோம். நகைச்சுவைக் காட்சியில் நாம் சிரிக்கின்றோம். காதல் காட்சியில் நாம் மகிழ்கின்றோம். கொலைக்காட்சியில் நாம் அஞ்சுகின்றோம்.

விளக்கொளி அழுவதில்லை. சிரிப்பதில்லை. மகிழ்வதில்லை. அஞ்சுவதில்லை. சுக துக்கத்திற்கு அப்பாலாய் உள்ளது. உடனாகியும் இலதாகியும் விளக்கொளி இருப்பது போல இறைவன் இவ்வுலகில் இருந்தும் இல்லாதவனாகத் திகழ்கிறான்.
இவ்வுலகம் எங்கும் இறைவன் இருப்பான் எனில் உலக சுக துக்கங்கள் அவனைத் தாக்காதோ ?
தாக்காது.

உவர்க்கடலில் பிறந்து வளர்ந்து உவர் நீரைக்குடித்து வாழ்கிற கடல் மீனில் உப்பு ஏறுமோ ? ஏறாது.

அது போலவே இறைவன் ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளான்.