Pages

Tuesday, March 11, 2025

திருமூலர் கண்டுபிடித்த கடவுள் பார்டிகிள்

திருமூலர் கண்டுபிடித்த கடவுள் பார்டிகிள்


அணுவின் அணுவினை ஆதிபிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அனுகவல்லற்கு
அணுவின் அணுவினை அணுகலுமமே 


- திருமூலர் 




இதன்  விவரம் இங்கே


 

Wednesday, October 19, 2016

என் திருமால் அடைக்கலங்கொள் எனை நீயே....










நின்னருளாம் கதியின்றி மற்றோன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை உகந்தேன்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து
வானவர்தம் வாட்சி தர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரமேற்றாமல்
என் திருமால் அடைக்கலங்கொள் எனை நீயே............
தேசிகர்.

Sunday, June 19, 2016

இதுதானே உன் அப்பா

தந்தையைப் போற்றுவோம் 


அதான் என் அப்பா.
அந்தப் பாடல் 
க்ளிக்குங்கள். கேளுங்கள்.
நன்றி:
லெரா கார்ட்ஸ்

*************************************************************************

எந்த அப்பா வும் இந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருந்திருப்பாரோ !

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்று
அப்பா சொன்னவை:

ஊஹூம். போகக்  கூடாது போகக் கூடாது. நானெல்லாம் உன் வயசுல்லே அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போனதே கிடையாது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏண்டா ! மாட்டுத் தொழுவத்திலா நீ வளர்ந்தே ! கதவைச் சாத்துடா !!
***************************************
காபி உன் உடம்பைக் குட்டிச் சுவராக்கிடும்டா !!
***********************************
சொல்றதைக் கேளுடா...
*****************************************

எதுக்கு என்னைக் கேட்கிறே ! அம்மாவைக் கேளு....!!

*************************************************************

அந்த லைட் எல்லாத்தையும் அணை. 
நான் என்ன உனக்கு பாங்க் லாக்கர் ஆ ?
அப்பப்ப பணம் எடுத்து எலெக்ட்ரிக் பில் கட்ட ?

********************************************************************

தூக்கம் வல்லையா ? 
இந்தா !  சீத்தலைச் சாத்தனார் பத்தி ஒரு  புஸ்தகம் . நான் படிச்சது.
படி. தூக்கம் வர நானும் இப்படித்தான் செஞ்சேன்.

*****************************************************************************
போர் அடிக்குதா !! நான் ஒரு வேலை தரேன். அதைச் செய்.
அந்த இரண்டு சைக்கிளுக்கு காத்து அடிச்சுண்டு வா.

**********************************************************

டேய்! நான் உன் வயசிலே பத்து அடி தண்ணிலே  ஆத்துலே நீஞ்சிப் போயி,
ஸ்கூலுக்கு போய் இருக்கேன்.

*************************************************************
இப்படியே தொனா தொனா  அப்படின்னு பேசிக்கிட்டே வந்தே ! சைக்கிளை நிறுத்தி உன்னை இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.

*******************************************************************

அப்பா !!

உன் ஒவ்வொரு வார்த்தைக்குப்
பின்னே இருந்த 

பொருளை நான் இன்று உணர்கிறேன். 




********************************************************************************
இப்ப சொல்லப்போறது


 அப்பா.

உன்னைப் படைச்ச 
கடவுள்

மலைலேந்து வலிமை .
மரத்துலேந்து மாட்சிமை 
வசந்தத்தின் இளஞ்சூடு இவ் 
வையத்தின் இதயம். 

ஆழ்கடலின் அமைதி. 
அவனி கண்ட அறிவு. 

விண்ணிலே பறக்கும் கருடன் - அதன் 
கண்ணிலே கூர்ந்த பார்வை 
மண்ணிலே எவ்விலக்கையும் அடையும் 
திண்ணமிகு திடம். 

இளவேனில் இதயத்தின்  
வளமான கற்பனைகள். 
சிறு  கடுகின் விதையில் 
உருவாகும் சிற்பங்கள். 

காலத்தின் நித்தியத்தில் - நாம் 
காணாத பொறுமை 
கருமை சூழ் இரவினில் - என்னை 
இரு கரம் கொண்டணைப்பு .

இத்தனையும்  இணைத்து - என் முன் 
இந்தா  என இறைவன் சொல்ல 
இரு கண்கள் திறந்து பார்த்தேன். 
இதுதானே உன் அப்பா என்றார் .



கருத்து: லீரா கார்ட்ஸ். 



அப்பா நீ எங்கிருக்கே ! 
அப்பப்ப ஒரு லெட்டர் போடு. 



He is your hero, guide and friend. He is always there for you with his love. It is now your time to express your love on Father's Day


Tuesday, May 10, 2016

குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை

தமிழகத்தில் இன்னமும் ஏழே நாட்களில் பொது தேர்தல் நடக்க இருக்கின்றது.

 யார் ஆட்சியைப் பிடித்தாலும் சரி, ஆண்டாலும் சரி,  தமிழ் மக்கள் முன்னே, குறிப்பாக, தமிழ்ப் பெண்டிர் முன்னே இது ஒரு பிரச்னை தான் முழுமையாகத் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்து நிலவி இருக்கிறது.

அதுதான் மதுவிலக்குப் பிரச்னை.

பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பள்ளி முடிந்ததும் டாஸ்மாக் கடை முன்னே நிற்கும் காட்சி பார்க்க, மனம் நொந்து போகிறது.  கல்லூரி மாணவிகள் சிலர் குடிப்பதை ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகக் கருதும் நிலையும் பள்ளி மாணவிகள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலையையும் இந்நாட்களில் படிக்க வேதனைக்கு எல்லை இல்லை.

கடந்த ஐம்பது வருடங்களில் நாலைந்து தலை முறைகள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி தம் வாழ்வையும் மதிப்பையும் கௌரவத்தையும் இழந்து இருப்பது வெள்ளிடை மலை.

இதற்கு ஒரு விடியல் உண்டா !!



ஆஸ்திரிலேயா நாட்டில் வாழும் தமிழ் வலை உலகப பதிவாளர்
திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
தமிழ் மக்களுக்காக ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

குடிக்கும் குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை .


திருமதி கீதா மதிவாணன் அவர்கள் கவிதை
அதை நான் மதுரைத் தமிழன் அவர்கள்  பதிவிலே கண்டேன்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


இன்றைய தமிழ் நாட்டுச் சூழ்நிலையிலே இதை விட ஒரு சிறப்பான கவிதை இருக்க முடியாது.

இந்த அற்புத மனதைத் தொடும் கவிதையை
சுப்பு தாத்தா பாடுகிறார்.

திருமதி கீதா மதிவாணன் அவர்கள் பாடுவதற்கு அனுமதி தருவார் என
எதிர்பார்க்கிறேன்.

தமிழ் நாடு முன்னைய சிறப்பு பெற வேண்டுமெனின்
குடிப்பழக்கம் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

வரும் அரசு இதைச் செய்யவேண்டும்.

தமிழ்ப் பெண்டிரைக் காப்பாற்ற வேண்டும்.

Sunday, May 08, 2016

அன்னையர் தினம் இன்று.



இன்று அன்னையர் தினம்.
உடன் பிறவா சகோதரர் புலவர் இராமானுசம் இயற்றிய அற்புதக்கவிதை.
இங்கே 
இது போன்ற கவிதை தமது மகன் எழுத அந்த தாயும் எத்துணை புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

கண்களிலே நீர் மல்க பாடலைப் பாடினேன்.
எல்லாம் அவர் என்றும் பாடி மகிழும் அந்த கோவிந்தனின் அருள்.



இங்கும் அந்தப் பாடலைக் காணலாம். 

Wednesday, May 04, 2016

921 முதல் 930 வரை.

தினமும் ஒரு குறள் அதிகாரம் முழுவதும் படித்து அதன் பொருளை உள்வாங்கும் தினசரிப் பழக்கம்  என்னிடம் பல வருடங்களாக இருக்கிறது. 
நான் வரிசையாக போவதில்லை.
புத்தகத்தைத் திறப்பேன். 
எந்த அதிகாரம் கண்களுக்கு எதிரே வருகிறதோ அதில் கவனம் சேர்ப்பேன். 
பொதுவாக, அதே அதிகாரம் மறுபடி மறுபடி பெரும்பாலும் வருவதில்லை. 

இந்த அதிகாரம் கடந்த ஒரு ஆண்டில் முதல் தடவையாக வருகிறது. 
அதுவும் இந்தச் சமயத்தில் !!  எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

இது தற்செயலாகத் தான் நடக்கிறது என்று நினைத்தேன். 

நீங்கள் நினைப்பது என்ன ?

என்னைப் பொறுத்த அளவில் ஒரு நல்ல காலம் வருகிறது என்றே  
நம்புகிறேன். 

நீங்கள் ?

****************************************************
#####################################
921 முதல் 930 வரை.  குறட்பாக்களும் அவற்றின் பொருளும். 
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; 
சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.


ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்  கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
 குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.


குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறி யாமை கொளல்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
றியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கலைஞர் உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.


குறள் 927:
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
.
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

நல்லதோர் எதிர்காலம் வருமென நம்புவோம். 

இன்று மக்கள் மனம் திரும்பி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 

அடுத்த தலைமுறைகள் நல் வாழ்வு வாழ வழி தோன்றும் .



ஒன்று முதல் 234 வரை. 

Sunday, March 06, 2016

வாடினேன்.




மணிராஜ் ஜகமணி வலைத் தளத்தின் பதிவாசிரியர் 
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் 

இறைவனடி சேர்ந்தார் என்னும் செய்தி கேட்டு வாடினேன். 

கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நாள் அதி காலையிலும் அவரது தளத்திற்குச் சென்று அங்குள்ள செய்திகளைப் படிப்பதும் 
பாடல்களைப் பாடுவதுமே எனது வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக அவரது தளத்தில் இடுகை ஒன்றும் இல்லையே என்று நினைப்பு இருந்து வந்த நேரத்தில், இப்படி ஒரு செய்தி எனது நெஞ்சினை கனக்கச் செய்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. 

ஆன்மீக உலகில் அவர் அன்னை எனத் திகழ்ந்தார். 

அவர் செய்த பணியினை அவரது செல்வங்கள் தொடர அன்னை அருளட்டும்.

சுப்பு தாத்தா.

Tuesday, February 23, 2016

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.

குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழித்துவிட்டேன்.
நிறை எது ? நிலை எது? நினையாதிருந்து விட்டேன்.
மறை சொல்லும் மாதவா நின் நாமம் அனுதினமும்
உரைத்திட வழி ஒன்று சொல்லித்தா...எனக்கின்று
கோரும் வரம் ஒன்று தா.

பஞ்ச புலன் தந்ததெல்லாம்  நஞ்சென ஆயிற்றே !
அஞ்சிட வேண்டியவை  அறியாது போயிற்றே !1
எஞ்சி நிற்கும் எண்ணம் எல்லாம் நின் பாதங்கள் ஒன்றே.
கெஞ்சி நிற்குமெனை காத்திடவே இன்றெனக்கு
கோரும் வரம் ஒன்று தா.. கோவிந்தா..

 நாராயணா ! நான் "நான்" ல் நிலைத்திருந்தேன்.
நாரணன் நின் நாமம் நாவில் நில்லா நின்றேன். 
கார்மேனியான் நின்னடிகள் சரணம் 
வா என்னை உய்த்திடு விடுதலை தந்திடு 

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.




Friday, December 25, 2015

இதய தீபமே எங்கள் குழந்தை இயேசுவே




உலகம் முழுவதும் பரவியுள்ள 

எனது  நண்பர்களுக்கு தோழமைகளுக்கு 
எனது கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, December 16, 2015

தண்ணீர் வேண்டும்.

கிழிந்த ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தின்
அழிந்து போன எழுத்துக்களாக

மடிவதற்கு சில மணித்துளிகளே இருக்கும் போது
மருள் படர்ந்த மனிதர் நெஞ்சம் போல

உருக்கும் நெருப்புக்குகைக்கு
உள்ளே செல்லும்
உயிர் இழந்த உடல்கள் போல


கிணறுக்குள் செல்லும் செல்லும்
கயிரிலாத்தோணிகள் போல

காட்சி அளிக்கிறது இன்று சென்னை.
கண்ணீர் யாம் வேண்டோம் .
தண்ணீர் வேண்டும்.

ஆம். ஆம். எம்
புண்களைத் துடைக்க.

Courtesy: Picture: AP Photo/Arun Sankar K)



.





Monday, November 09, 2015

தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள். \


அல்லது அழிந்து நல்லது நடக்கும் என்ற விரும்பலில் நம்பிக்கையில் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திரு நாளில்,
இந்த தீபாவளி அன்று ஏதாவது நல்லதொரு புதியதொரு செயல் செய்யவேண்டும் என நினைக்கும் , நினைக்க வாய்ப்பிருக்கும்

நல்ல உள்ளங்களுக்கு,

ஒரு வார்த்தை.

உங்களது ஒரு செயல் உங்கள் மேன்மையை பன்மடங்கு உயர்த்தும்.

தீபாவளிக்காக நீங்கள் செலவு செய்யும் பல பொருட்கள் இருக்கின்றன.

அவற்றினை வாங்கவேண்டாம் , என்று நான் சொல்லவில்லை.
செலவு செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை.

நீங்கள், பட்டாசுகள், ஆடம்பர வண்ண மிகு மின் விளக்குகள் , விலை உயர்ந்த ஒரு தரத்துக்குமேல் அணியப்படாத பட்டு சேலைகள்,

இனிப்பு வகைகள்,

இவை எல்லாவற்றிக்கும் நீங்கள் செய்யும் செலவுக்கான பட்ஜெட்டில்
ஒரு ஐந்து முதல் பத்து விழுக்காடு,

நலிந்து வாடும் சிறு குழந்தைகளுக்கு உங்கள்
தீபாவளிப் பரிசாக வழங்குங்கள்.

இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்று நான் சொல்லப்போவதில்லை.

சேவாலயா, திருநின்ற ஊர் , 

உதவும் கரங்கள்

சிவானந்த குருகுலம் 

போன்ற பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

இயன்றால், அங்கே சென்று அந்தக் குழந்தைகளுடன்

உங்கள் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்.


Wednesday, November 04, 2015

யார் முன் வருவாரோ ?

 மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். 
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார்.

அந்த காலத்தில், 1950 1960 களில், திருச்சி பெரிய கடை வீதியின் ஒரு சந்திலே (தங்க மாளிகைக்கு எதிரில் இருக்கும் சந்து. பெயர் சட்டென்று
நினைவுக்கு வரவில்லை )அங்கே ஒரு வீட்டில் ஒரு திண்ணை. தமிழ்த் திண்ணை என்று  சொல்லவேண்டும். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தமிழ்ப் புலவர் கூடுவர். யாரேனும் ஒரு புலவர் அல்லது ஒரு தமிழ் ஆசிரியர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர்

.மாலை மூன்று மணி அளவில் துவங்கும் கூட்டம் . இரவு 8 மணி வரை செல்லும்.  அதில் வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பொருள் பற்றி பேசுவர் அல்லது தாம் இயற்றிய கவிதை (பொதுவாக அந்தக்காலத்திலே எல்லாமே மரபுக் கவிதை தான்) தனை அரங்கேற்றுவர்.  ஆறுமுக நாவலர், பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார், பேராசிரியர் இராதாகிருஷ்ணன் எனது உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் குலசேகரன் போன்றவர்கள் பேச்சினை நான் அங்கு கேட்டு இருக்கிறேன்.  திருமூலர் பாடல்கள் பற்றி மாதம் ஒரு முறையாவது சொற்பொழிவு நடக்கும். 

தத்துவப் பாடல்கள் பல அந்தக் காலத்திலே முதல் நிலை வகுத்தன. 

 மஸ்தான் சாகிபு பாடல்கள் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். 
எந்த ஒரு கூட்டத்திலும் குணங்குடியார் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டாது இருக்க மாட்டார். 

சூபி தத்துவங்களை உள்ளடக்கி இருக்கும் இப்பாடல்களில் பல அந்தக் காலத்தில், என் தந்தை படிக்க பாடக்கேட்ட எனக்கு மனப்பாடமாக இருந்தன.  மஸ்தான் சாகிபு பாடல்களை ஒரு தத்துவக்கடல் என்று சொல்லவேண்டும். அதில் முழுகி விட்டால் எழுந்து வரும் எண்ணமே வராது.  

ஒரு உதாரணம். இப்படத்தில் உள்ள கவிதை , பிறந்த எல்லா உயிர்களுமே பொம்மலாட்டத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மைகள் எனவும் அவற்றினை ஆட்டிப்படைப்பவர் யாரெனத் தெரிய, கட்டிய கயிற்றினைப் புரிதல் அவசியம் என்பார். 

கயிற்றை ஆட்டுபவனுக்கும் பொம்மைக்கும் உள்ள உறவு என்ன?
தான் ஆட்டப்படுகிறோம் என பொம்மை உணர்கிறதா?
தனக்கும் தன்னை ஆட்டுவிப்பவனுக்கும் உள்ள இணைப்பு, பந்தம் பற்றி அவன் ஆராய்வது உண்டா?  

கட்டியிருக்கும் கயிறின் வலிமை என்ன? எத்தனை நாள் இந்த ஆட்டம்? ஏன் இந்த பொம்மலாட்டம்? 


குணங்குடி மஸ்தான் சாகிபு

அவர்கள் பேரில்
மகாவித்துவான் திருத்தணிகை
சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய

குணங்குடியார் நான்மணிமாலை

அவற்றில் ஒன்று இங்கே.


மாறுகொண் டென்மன மாகிய பரியை
வீறுகொண் டவாவெனும் வீரனிங் கொருவன்
அழுக்கா றெனுங்கல் கணைமிசை யார்த்தாங்கு
இழுக்கா றுடைசின மெனுங்கலி னஞ்சேர்த்து
அளியறு செருக்குமிக் காகிமே லிவர்ந்து
வளியெனும் வாதுவன் வாய்ந்துடன் தொடர்தரப்
பொற்பெனுங் கொடுவழி புகுந்திடச் செய்தலும்
நெறிபிறழ்ந் தப்பரி நீள்புலக் கான்புகுந்து
அரிவையர் மயக்கெனும் குளத்தினுள் வீழ்ந்துந்
தெரிபொன் னெனும்வனத் தீமிதித் தழுங்கியும்
பகர்மண் ணெனுங்கொடும் பாறைதாக் குற்று
மிகுபெருந் துன்பொடு மெலிந்துழல் கின்றதால்
இன்குணங் குடியான் எனுந்தவர்க் கரசே
நன்குமற் றதனைநீ நல்வழி திருப்பியே
அருளெனும் வாளினவ் வீரனைத் துமித்துக்
கருதமக் கல்லனை யாதிகள் களைந்தொழித்து
என்வசம் ஆக்குவை யெனின்யான்
நின்வச மாக்குவன் நினதியல் புகழ்ந்தே. (16)

நம்மிடையே கவிதை படைக்கும் பலர் இருக்கின்றார்கள். மரபுக் கவிதை மட்டுமன்றி, வசனக் கவிதை அல்லது மரபு சாராக் கவிதையில் மனதை ஈர்ப்பரும் உள்ளார். 

இவர்கள் இந்த குணங்குடியார் கவிதையின் பொருளினைச் சிறப்பினை தனது கவிதையாகச் சொன்னால் எப்படி இருக்கும்?

மேலும், இன்னுமொரு படி எடுத்து வைத்து மஸ்தான் சாகிப் அவர்களின் கருத்துக்களை இக்காலக் கவிதையில் எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் !!

யார் முன் வருவாரோ ? 


Wednesday, October 21, 2015

நின்னைத் துதிக்க அருள் புரிவாய்.

நன்றி: ராமர் வலைத்தளம்     

Monday, October 19, 2015

புலவர் இராமானுசம் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவரது ஆசிகள் பெறுவோம்.



தமிழோடு இணைந்து வாழும் 
புலவர் இராமானுசம் அவர்களின் 
பிறந்த நாள் இன்று. 


அவரை வணங்கி அவரது ஆசிகள் பெறுவோம். 
இதோ !! அவர் இயற்றிய வேங்கடவன் பாடல் ஒன்றினையே நாம் பாடி, எங்கும் எல்லாமாய் நிறைந்திருக்கும் அந்த ஏழுமலையானைத் துதிப்போம்.  

Friday, October 16, 2015

மங்கள நாதம் போல



பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்ற வரிகளைத் தான் எத்தனை எத்தனை தரம் படித்திருப்போம் ! பாடியிருப்போம் !! மகிழ்ந்திருப்போம்.

அண்மைக்காலங்களில், கவிதை எழுதுவதே தனது தொழில் என்று தளரா உறுதியுடன் , காலைக் கதிரவன் விடியல் போல், கண் துஞ்சாது,  தமிழ்ப் பாடல் ஒன்று படைப்பதே தன் தினசரிக் கடமை எனக்கொண்டு,

இலக்கியம் சமைப்பவர்களில் முதன்மையானவர்களில் முன் நிற்பவர்
 பாவலர்  சசிகலா மேடம் .  வீறு கொண்டு எழுதுவதில் இவர் ஒரு பெண் சிங்கம்.

தமிழ் மொழி உணர்வுகளைத் தாங்கி வரும் இவர் படைப்புகள் எல்லா எல்லைகளையும் கடந்து தமிழ், தமிழ் என்ற எண்ணம் ஒன்றைத் தான் தனது அடித்தளமாகக் கொண்டுள்ளன.

 இந்நூற்றாண்டின் அவ்வை பிராட்டி என ஒரு எதிர்காலத்தில் இவர் தமிழ் மக்களால் போற்றப்படுவார் என்பது திண்ணம்.

இவரது கவிதையை பாடுவதே நான் தமிழுக்குச் செய்யும் தொண்டென நினைக்கிறேன்.

நவராத்திரி திரு நாட்கள் நடக்கும் இந்நன்னாளில்
நமது ஒரே பிரார்த்தனை துர்கை, இலக்குமி, நா மகள் அன்னையிடம்
இவர் எல்லா நலமும் பெற்றிட இவருக்கு இவர் குடும்பத்தாருக்கு அருள்
புரியுங்கள்.

வாருங்கள் தமிழ்ப்ப்பதிவர்களே !!
எல்லா நலமும் பெற்று வாழ்க என இப்பாவலரை வாழ்த்துவோம்.
வாருங்கள்.


மங்கள நாதம்
எங்கும் ஒலிக்கிறது.
இவர் எண்ணங்களில், எழுத்தில், பேச்சில், மூச்சில்.

வாழ்க. வளர்க.
+sasikala2010eni@gmail.com 

Sunday, October 11, 2015

வா வாத்யாரே ஊட்டாண்டே


வா வாத்யாரே ஊட்டாண்டே

Monday, October 05, 2015

நான் ஏன் பிறந்தேன்.? நின்கருத்தை அறியேன்

    வள்ளலார் 
     
    அருட்பெரும் ஜோதியே !
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
    நான் ஏன் பிறந்தேன்.?
  • 1. குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் பு/லையேன் நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன் நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் 
  • நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே. 
  •  
  • 2. விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
    விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
    அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
    அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
    கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
    கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
    களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
    கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே. 
  •  
  • 3. அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
    அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
    குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
    கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
    செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
    சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
    எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
    இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே. 
  •  
  • 4. இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
    இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
    அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
    அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
    பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
    பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
    தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
    தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே. 
  •  
  • 5. ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
    ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
    சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
    செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
    மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
    வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
    வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
    மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே. 
  •  
  • 6. அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
    டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
    புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
    புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
    பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
    பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
    விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
    வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே. 
  •  
  • 7. பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
    பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
    மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
    வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
    வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
    வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
    தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
    திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே. 
  •  
  • 8. தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
    தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
    பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
    பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
    அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
    ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
    நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
    நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே. 
  •  
  • 9. இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
    இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
    பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
    புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
    நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
    நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
    கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
    கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே. 
  •  
  • 10. காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
    களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
    நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
    நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
    ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
    அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
    கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
    குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே. 
  •  
  • நன்றி: வடலூர் ப்ளாக் ஸ்பாட் காம். 
  • படத்தை சொடுக்க வள்ளலாரின் மந்திரம் கேட்கலாம்.

Thursday, October 01, 2015

காந்திஜி தந்த ஆசிர்வாதம்.

 காந்திஜி தந்த ஆசிர்வாதம்.

 

 





அதெல்லாம் சரி. சுப்பு தாத்தா. 
நீயும் அறுபது வருசமா காந்தி ஜெயந்தி காந்தி ஜெயந்தி அப்படின்னு 
மெசேஜ் விட்டுகிட்டே இருக்கியே..
நீ எப்ப 
காந்தியாகப் போறே !!!