Pages

Friday, October 16, 2015

மங்கள நாதம் போல



பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்ற வரிகளைத் தான் எத்தனை எத்தனை தரம் படித்திருப்போம் ! பாடியிருப்போம் !! மகிழ்ந்திருப்போம்.

அண்மைக்காலங்களில், கவிதை எழுதுவதே தனது தொழில் என்று தளரா உறுதியுடன் , காலைக் கதிரவன் விடியல் போல், கண் துஞ்சாது,  தமிழ்ப் பாடல் ஒன்று படைப்பதே தன் தினசரிக் கடமை எனக்கொண்டு,

இலக்கியம் சமைப்பவர்களில் முதன்மையானவர்களில் முன் நிற்பவர்
 பாவலர்  சசிகலா மேடம் .  வீறு கொண்டு எழுதுவதில் இவர் ஒரு பெண் சிங்கம்.

தமிழ் மொழி உணர்வுகளைத் தாங்கி வரும் இவர் படைப்புகள் எல்லா எல்லைகளையும் கடந்து தமிழ், தமிழ் என்ற எண்ணம் ஒன்றைத் தான் தனது அடித்தளமாகக் கொண்டுள்ளன.

 இந்நூற்றாண்டின் அவ்வை பிராட்டி என ஒரு எதிர்காலத்தில் இவர் தமிழ் மக்களால் போற்றப்படுவார் என்பது திண்ணம்.

இவரது கவிதையை பாடுவதே நான் தமிழுக்குச் செய்யும் தொண்டென நினைக்கிறேன்.

நவராத்திரி திரு நாட்கள் நடக்கும் இந்நன்னாளில்
நமது ஒரே பிரார்த்தனை துர்கை, இலக்குமி, நா மகள் அன்னையிடம்
இவர் எல்லா நலமும் பெற்றிட இவருக்கு இவர் குடும்பத்தாருக்கு அருள்
புரியுங்கள்.

வாருங்கள் தமிழ்ப்ப்பதிவர்களே !!
எல்லா நலமும் பெற்று வாழ்க என இப்பாவலரை வாழ்த்துவோம்.
வாருங்கள்.


மங்கள நாதம்
எங்கும் ஒலிக்கிறது.
இவர் எண்ணங்களில், எழுத்தில், பேச்சில், மூச்சில்.

வாழ்க. வளர்க.
+sasikala2010eni@gmail.com 

3 comments:

  1. வாழ்க வளர்க! என்ற தங்கள் அன்பான வாழ்த்தில் அகமகிழ்ந்தேன் ஐயா! என்போன்றவர்களின் வளர்ச்சியில் தங்களின் பங்கு நிச்சயம் உண்டு தாங்கள் பாடி பரவசப்படுத்தும் போது கூடுதல் மகிழ்வும் உற்சாகமும் எங்களில் உண்டாகிறது என்பதே உண்மை. தங்கள் பணி தொடர வேண்டுகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  2. அருமை தாத்தா வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமை. சகோ சசிகலாவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி