Pages

Sunday, August 03, 2008

ஆத்திசூடி.2008



ஆத்திசூடி 2008.

அறியாமை உணர். 2. அகந்தை விலக்கு.
ஆணவம் தவிர்.
இன்பமெலாம் இன்னலே. 2. இருளை அகற்றும் குருவடி சேர்.
ஈகையில்லையேல் ஈண்டு இசை இல்லை. 2. ஈகையிலா ஈட்டம் இசை தரா.
உட்பகை உறவு கொல்லும். 2. உள்ளத்தே சினம் அறு.
ஊரை எளியாதே. 2. ஊணை இகழாதே
எவ்வுயிரும் கொல்லாதே.
ஏமாறாதே. ஏமாற்றாதே. 2. ஏணிதனைத் தள்ளாதே.
ஐயம் தொலை.
ஒடிய நடை போடாதே. 2. ஒவ்வாப் பொருள் தவிர்.
ஓடுவதை விரட்டாதே. 2. ஓங்கியதை இகழாதே.
ஓளடதமாம் பசித்து உண்ணல்.

9 comments:

  1. இன்பமெலாம் இன்னலே//

    இன்னலெல்லாம் இன்பமே ன்னு இருக்கலாமோ?

    ReplyDelete
  2. திவா அவர்கள் வருகைக்கு நன்றி.
    இன்பம் தருவதெல்லாம் இன்னலில் தான் முடியும் என்னும் பொருளில் நான்
    எழுதினேன்.
    இன்னலெல்லாம் இன்பமே என்றாலும் " இன்னல் வருவதெல்லாம்
    இன்ப வழியாகத்தான் " " இன்னல் பயப்பதெல்லாம் இன்பம் தரவல்லது "
    எனவும் கூறுகிறீர்கள்.
    முற்றிலும்
    சரியே.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  3. நன்று, மிக்க நன்று!

    ReplyDelete
  4. இப்படி தமிழாசிரியர்களெல்லாம் கவிதை எழுதவந்து விட்டால் எங்கள் பாடு என்னாவது?

    அய்யா ஒவ்வொரு வரியும் செம்பொருள் சேர்க்கிறது. வாழ்த்துகள்.

    ////2. இருளை அகற்றும் குருவடி சேர்.///////

    தேரற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேருவ தென்ப திழுக்கு!-நம் நாட்டில் பற்பல குருக்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல மாணவர்களைத்தான் அவர்களால் உருவாக்க முடியவில்லை. மூன்றுமாதற்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்குப் போராட்டம் நடத்துவது பற்றியே அவர்களின் சிந்தனை செயல்படுகிறது.

    குடந்தைப் பள்ளியில் தீநேர்ச்சியை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அரசுஊழியர்கள் பலஆயிரம்பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நேரம் அது. அத்தீ நேர்ச்சியைக் கவிதையாக்கியபோது ஓர்தாய் தன் எரிந்துப்பிணமான மகனை மடியில் கிடத்திக்கொண்டு அழுதுபுலம்புகையில் அவள் வாயிலிருந்து என்னென்ன சொற்கள் உதிர்ந்திருக்கும் எனக்கற்பனைசெய்து கவிதையாக்கியிருந்தேன்.அதில் இப்படி ஓர் வரிவரும்.

    அரசாங்க வாத்தியெல்லாம் அன்னாடம் ஸ்டிரைக் செய்யத் தனியாரு பள்ளியிலே தான்கொண்டி சேர்த்தேனே! சுட்டப் பிணமாகச் சுடுகாடு சேர்ப்பதற்கா காடுமே டெல்லாம் களையெடுத்துப் படிக்கவெச்சேன்?
    என்பதுபோன்று.

    தமிழ்நாட்டில் அரசியல் வாதிகளுக்கடுத்தபடி கொழுத்துக்கிடப்பது அரசூழியர்களே! தவறிருப்பின் என்னை மன்னிக்கவும்.

    சிங்கையில் ஒரு பீரியடுக்குக் கூட(வகுப்புக்கு) ஆசிரியர் வராமல் ஓய்வெடுக்க முடியாது. அவரவர் அவரவர் பணியைச் செவ்வனே செய்தாகவேண்டும். இல்லையென்றால் கேள்வியெல்லாம் கிடையாது. பணிநீக்கம் தான். தமிழ்நாட்டில்? மிஞ்சுவதெல்லாம் வினாக்குறியே!

    அதுசரி இருளை அகற்றும் குருவை அந்த மூன்று நான்கு வயதில் எப்படித் தேர்ந்தெடுப்பது?

    ==================================================================

    //////உட்பகை உறவு கொல்லும்.//////

    எல்லைகடந்து தீவிரவாதத்தைப் பரப்ப இங்கிருக்கும் இளையர்களைப் பயன்படுத்தி இந்தியனே இந்தியனைக் கொள்ளும் கீழ்மையைச் சுட்டுவதற்கே அப்படி எழுதியதாக நான் கருதுகிறேன். வாழ்த்துகள். இவ்வரியை யாதொன்றோடும் பொருத்திப்பார்க்கலாம்.

    ======================================================

    ///////ஏமாறாதே. ஏமாற்றாதே.//////

    அவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்துகிறேன். ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருப்பது இயல்புதானே!

    ===================================================================

    ///////2. ஓங்கியதை இகழாதே.//////////


    குறிப்பு:-

    என்னைய வெச்சி காமெடிகீமெடி பண்ணலியே?

    ReplyDelete
  5. akaram amudha said:

    // அதுசரி இருளை அகற்றும் குருவை அந்த மூன்று நான்கு வயதில் எப்படித் தேர்ந்தெடுப்பது?
    //

    மூன்று நான்கு வயது பாலகனின் குரு தாய், பின் தந்தையே.
    தந்தையின் கடமையே சரியான குருவினிடம் அழைத்துச்செய்தலே.

    ஒரு ஆசிரியினைத் தேர்வு செய்வதென்பது இக்காலத்தில் கடினமானதுதான்.
    நம்மில் பலருக்கு தேர்வு செய்யும் வாய்ப்பு ( choice )
    கிடைப்பதில்லை என்பதும் உண்மைதான்.

    //வரியை யாதொன்றோடும் பொருத்திப்பார்க்கலாம்.//

    இவ்விளக்கம் என் மனதில் தோன்றவில்லை.
    உட்பகை என்பதை வெவ்வேறு சூழ்னிலைகளில் வெவ்வேறாகப்
    பொருள் கொள்ள இயலும். நீங்கள் சொல்வது சரியே.

    ஒருவன் தனது முகத்தில் சிரிப்பு காட்டி, நெஞ்சத்தில் நெருப்பு வைத்திருக்கும்
    எதிர்மறை குணங்களையே மனதில் கொண்டு எழுதினேன். இவர்களது
    நட்பு வெகு நாட்கள் நீடிக்காது. இவர்களுக்கு நட்பும் உறவும் நீர்த்துப்போம்.

    // ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருப்பது இயல்புதானே!//

    ஏமாறுபவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான். இனி தான்
    ஏமாறமாட்டேன் என எதையும் சிந்தித்துச் செயல்படுபவனை எவரும்
    ஏமாற்ற இயலுமோ ? உணர்ச்சியால் உந்தப்படுவோரை ஏமாற்றுவது
    எளிதல்லவா ?

    //என்னைய வெச்சி காமெடிகீமெடி பண்ணலியே?//

    இது போன்ற எண்ணங்கள் என்று வரினும், நான் எழுதுவதை
    உடன் நிறுத்திடுவேன் .

    உலகத்தே பற்பல நம்பிக்கைகள், கருத்துக்கள், பற்பல இடங்கள் ஆகியன‌
    பல்வேறு காரணங்களினால் ஓங்கி நிற்கின்றன. இவையோடு பலரோ சிலரோ
    ஒத்துப் போக இயலாத நிலை அவ்வப்போது ஏற்படுவதும் உண்மையே. ஆயினும்
    அதை இகழாது இருப்பது நன்று. மாற்றுக்கருத்தைச் சொல்வதில் தயக்கம்
    வேண்டாம்.

    உலகப்புகழ் வாய்ந்த டேகார்ட்டே எனும் தத்துவஞானி தனது நூலின் முக உரையில்
    எழுதுகிறான்: உலகக்கருத்தோடு தனது கருத்து ஒத்துப்போகாத நிலையிலும்
    அதை பாங்குடனே பக்குவத்துடனே எடுத்துச்சொல்தல் அவசியம். சரித்திரத்தின்
    எந்த ஒரு கால கட்டத்திலும் முற்போக்கு சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள்
    கருத்துக்களை அவர்கள் சார்ந்திருந்த சமூகம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை.
    ஆயினும் பிறிதொரு காலத்தில் அவர்தம் கருத்துக்கள் சமூகத்தினால் ஒத்துக்கொள்ளப்
    படுகின்றன. ஆதலால், தமது கருத்துக்களை எடுத்துரைக்கவேண்டும் என்பதில்
    ஐயம் வேண்டா. ஆனால், அவற்றினை உடனடியாக சுற்றியிருப்போர் ஒத்துக்கொள்ள‌
    வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வேண்டாம். இந்த எதிர்பார்ப்புகள் வெற்றியடையாத‌
    போது தான் மனதில் தமது கருத்துக்களை ஒத்துக்கொள்ளாதவர் பால் வெறுப்பு தோன்றுகிறது.
    தாம் இவ்வளவு சொல்லியும் மக்கள் புரிந்துகொள்ளவில்லையே என தம்பாலேயே ஒரு
    விரக்தி தோன்றுகிறது. இந்த இரண்டுமே இகழ்ச்சி செய்வதைத் தூண்டும் மன நிலைகள்.
    ஆகவேதான் ஓங்கியதை இகழாதே என்று சொன்னேன்.
    காய்தலும் உவத்தலும் இரண்டையுமே அறிந்தவன் தவிர்க்கிறான்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. அழகிய விளக்கங்கள் அளித்தீர்கள் அய்யா! மேலும் விளக்கங்கள் பெறுவதற்கே (என்னைய வெச்சி காமெடிகீமெடி பண்ணலியே) என்றெழுதினேன்.. வேறொன்றுமில்லை. நன்றிநன்றி நன்றி

    ReplyDelete
  7. ஆத்திசூடி 2008 படித்து மகிழ்ந்தேன். காலத்திற்கு ஏற்ற கருத்துகள். அகரம் அமுதா கருத்துகள் மனதைக் கவர்ந்தன. தமிழ் மறை தமிழர் நெறி தம்முடைய அரும்பணியை தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. ஊரை எளியாதே

    - இது ஊரை எள்ளாதே என்று பொருள் கூறுகிறதா?

    'எளியாதே' என்ற சொல்லாட்சி எங்குள்ளது?

    ReplyDelete
  9. எளியாதே என்ற சொல்லை எள்ளாதே அல்லது ஏளனம் செய்யாதே எனும் பொருளில்
    எழுதவில்லை. எளிதாக அல்லது சிறியதாக அல்லது அற்பமாக எண்ணாதே எனும்
    பொருளில் தான் எழுதினேன்.

    ஊரை எளியாதே என்பதின் நான் நினைத்த பொருள், தனைச் சுற்றியுள்ள மக்களை எளிதாக அதாவது
    சிறிதாக மதிப்பிடாதே ( தாம் தான் உயர்ந்தவர் எனும் கர்வம் கொள்ளாதே ) என்பது
    வே.

    நீங்கள் சொல்லியிருக்கும் " ஊரை எள்ளாதே " என்பதிலும் பொருள் நிறைவு
    உள்ளது. நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி