Pages

Friday, April 13, 2007

Tamil New Year Day..15th April 2007


புதிய தமிழ் புத்தாண்டு ஸர்வஜித் 15 ஏப்ரல் 2007 அன்று பிறக்கிறது.


தமிழ் புத்தாண்டு தினமான அன்று உலகத்தமிழர் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்பாக வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.
On the Happy Occasion of the Tamil New Year Day on 15th April 2007, let us all Pray to God Almighty to shower on All Tamils of the World all the Prosperity.
Let us recall the first stanza of Nalvazhi compiled by the Great Tamil Poetess Avvayar on this Grand Occasion.
அவ்வையார் இயற்றிய நல்வழி விநாயகக் கடவுள் துதியுடனே துவங்கும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் ‍ கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பொருளாவது:

அழகினை செய்கின்ற மேலான யானை முகத்தைக் கொண்ட தூய்மையுடைத்த மாணிக்கத்துக்கு ஒப்பான வினாயகனே !

நல்ல பசுவின் பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய நான்கு பொருட்களையும் கலந்து நான் உனக்கு நிவேதனமாக‌ அர்ப்பிக்கிறேன். உன்னிடமிருந்து வேண்டுவது ஒன்றே. மூன்று சங்கங்கள் வளர்த்த மூன்று தமிழ் (இயல், இசை, நாடகம்) அடங்கும் யாவற்றையும் எனக்கு அருள்வாயாக.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி