Pages

Sunday, March 25, 2007

If God Were to Appear Before You and Ask "What do you Want?"

இறைவன் திடீரென ஒரு நாள் உங்கள் முன்னே வருகை தந்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டால் என்ன கேட்பீர்கள் ?
Suppose God were to appear before you one day and ask you, "what do you want?" , what will you reply?
உண்மையைச்சொல்லப்போனால், நாம் அந்த ஒரு நிகழ்வு நடக்கும் என நினைத்து அதற்கான ஆயத்தினைச் செய்யவில்லை .
To be honest, to ourselves, most of us do not believe that such an event would ever happen. Possibly, on that pretext, we are never prepared for such an event.

ஏன் என்றால் கடவுள் நம் முன்னால் வருவார், வரக்கூடும் என நம்மில் பலர் நம்புவதில்லை.
We hardly believe that God will appear before us, when we introspect what we do.

தமிழ் நாட்டின் சிறந்த பாடகர் ஒருவர் நாகூர் அனிபா அவர்கள்.அவர் பாடுகிறார்:
One of the foremost singers of Tamil Nadu, India, Nagoor Hanifa sings:

இறைவனிடம் கையேந்துங்கள் ‍= அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை.

(Stretch your hands before God. He never says No.)

கோவிலுக்குச் செல்கிறோம். ம‌ற்ற‌ த‌வ‌த்திருத்த‌ல‌ங்க‌ளுக்குச் செல்கிறோம். க‌ட‌வுள் முன்னே நின்று க‌ண்க‌ளை மூடிக்கொண்டு ந‌ம்மில் ப‌ல‌ர் ம‌ன‌ம் உருக‌ க‌ண்க‌ளில் நீர் பெருக‌ பிரார்த்திக்கிறோம். க‌ட‌வுள் ந‌ம‌க்கு வேண்டிய‌தை த் த‌ருவார் என‌ ந‌ம்புகிறோம். அந்த ந‌ம்பிக்கையிலே வீடு திரும்புகிறோம். அந்த‌ ந‌ம்பிக்கையிலேயே வாழ்கிறோம். ஆயினும் ஏதேனும் ஒரு நாள் இறைவ‌ன் ந‌ம் முன்னே பிர‌த்ய‌க்ஷ‌மாகி என்ன‌ வேண்டும் என‌ க்கேட்பான் என‌ நாம் நினைத்துப்பார்ப்ப‌தில்லை. அந்த‌ நிக‌ழ்வுக்கு நாம் த‌யாராக‌ இல்லை. ‌(உண்மையைச்சொல்ல‌ப்போனால், நாம் ந‌ட‌ந்து கொள்ளும் விதத்தை நாமே ம‌ன‌ச்சாட்சியின் க‌ண் வ‌ழியே பார்க்கும்போது, கட‌வுள் ந‌ம‌க்கு முன் வ‌ருவான் என‌ தோன்ற‌ வில்லை.)

இருப்பினும், ஒருவேளை க‌ட‌வுள் வ‌ந்து விட்டால்,உனக்கு என்ன வேண்டும் என கேட்டுவிடின், என்ன‌ கேட்ப‌து ?

நாகூர் அனிபா அவ‌ர்கள் மிக‌வும் அழ‌காக மற்றொரு பாடலில் சொல்கிறார்.

அத‌ன் க‌ருத்து:

இறைவா ! நீ இதுவரை என‌க்கு கொடுத்த‌திற்கே ந‌ன்றி சொல்ல‌ என‌து எஞ்சிய‌ ஆயுட்கால‌ம் போதாது. அவ்வாறு இருக்க‌, இன்னும் நான் என்ன‌ கேட்ப‌து " என்று...

Oh God! For All the things you gave me so long, I do not have enough time left in my life to thank You. What else can I ask You ?

மிக‌வும் அற்புத‌மான‌ பாடல்.
உல‌கத்த‌மிழ‌ர் யாவ‌ரும் ர‌சித்து உளம்ம‌கிழ்ந்த‌ பாட‌ல்.

க‌ருத்து ஆவ‌து..
போதும் என்ற‌ ம‌ன‌ம் வ‌ர‌வேண்டும்.
இறைவ‌ன் கொடுத்த்த‌தை வைத்து ந‌ல்ல‌ வாழ்வு வாழ‌வேண்டும். அது வேண்டும், இது வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டு வாழ்வின் அமைதியை இழ‌க்க‌க்கூடாது.
We must live an honest ethical life through whatever we have been given by God. To desire for more and more is just losing our own mental peace and tranquility.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோத‌ல்
அதெனின் அதெனின் இல‌ன்...

என்ப‌து வ‌ள்ளூவ‌ப்பெருந்த‌கையின் பொய்யாமொழியாம்.
One who is rid of thoughts of "what is this? what is this?" is also rid of the miseries that flow out of acquiring those things.

ஆசைப்ப‌டுவ‌த‌னால், இறைவ‌னின் கால‌டிக‌ளை அடைய‌ வேண்டும் என‌ ஆசைப்ப‌ட‌வேண்டும்.
If ever to desire for anything, desire for reaching the Bliss of the Almighty.
இறைவ‌ன் சன்ன‌தி, இறைவ‌ன‌து பாத‌ நிழ‌ல் எவ்வாறு இருக்கும்?

" மாசில் வீணையும் மாலை ம‌திய‌மும்
வீசு தென்ற‌லும் வீங்கிள‌ வேனிலும்
மூசு வ‌ண்ட‌றை பொய்கையும் போன்ற‌தே
ஈச‌ன் எந்த‌ன் இணைய‌டி நிழ‌லே"

குற்ற‌மில்லாத‌ ஸ்வ‌ர‌ங்க‌ளுட‌ன் வாசிக்க‌ப்ப‌டும் வீணை,மாலை நேர‌ம், தென்ற‌ல் வீசும அந்த‌ வேநிற்காற்றில் ஓர் த‌டாக‌ம் (குள‌ம்)அத‌ன் க‌ரையிலே அம‌ர்ந்து அங்கே வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌ம் கேட்டால் எப்ப‌டி உண‌ருவோமோ அது போன்ற‌தாம் இறைவ‌னின் நிழ‌ல். ‌



1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி