Pages

Saturday, February 24, 2007

Your Bodyguard is just "What Good You do to your fellowmen"

அன்புள்ளம் கொண்ட இனிய நண்பர்களே,

இந்த வலைப்பதிவு துவக்கிடும் முதல் பக்கத்திலேயே நான் குறிப்பிட்டது "அறம் செய விரும்பு " என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்ன ஆத்தி சூடியை .விரும்பு எனும் சொல்லுக்கு desire என பொருள் கொள்வின், அந்த விரும்புதலுக்குப்பின்னே ஒருஅழுத்தமான ஆவல், ஒரு தொலை நோக்கு இருக்கவேண்டும். மற்றோருக்கு உதவிட வேண்டும் என்ற ஆசை இருப்பினும், எத்தனை பேருக்கு அந்த ஆசையை உடன் செயல்படுத்திட வேண்டுமென முனைப்பு ஏற்ப‌டுகின்ற‌து...? ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தையே ந‌ம்மில் ப‌ல‌ர் ஒத்திப்போடுகின்ற‌ன‌ர். ந‌ன்றே செய்க‌ அதை இன்றே செய்க‌ என்போர் சான்றோர்.வ‌ள்ளுவ‌ர் கூறுகிறார்:"

அன்று அறிவாம் என்னாது அற‌ம் செய்க‌, ம‌ற்ற‌து
பொன்றும் கால் பொன்றாத்துணை."

இறக்கும்போது ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னாக‌ நிற்ப‌து அற‌ம் ஒன்று ம‌ட்டுமே.


அறநெறிச்சாரம் எனும் வெண்பா வடிவில் அமைந்த ஒரு அற்புதமான நீதி நூல் தமிழ் இலக்கியத்தில் ஓர் பொக்கிஷமாக உள்ளது. ஏறக்குறைய 500 ஆண்டுகட்கு முன்னே சமண மதத்தைச் சார்ந்தவராக கருதப்படும் முனைப்பாடியார் என்பவரால் ‌இயற்றப்பெற்றதாகும். நாயக்கர் மன்னர் காலம் எனச்சொல்லப்படும் 13ம் நூற்றாண்டில் சமயங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு மக்கள் யாவருக்கும் நீதியையும் நேர்மையும் புகட்டிய தமிழ் நூல் இதுவாம்.

அறத்தினை புவியில் பிறந்தோர் யாவரும் உரிய காலத்தில் தம் உயிரோடு உள்ள காலத்திலேயே செய்யவேண்டும் அறத்தினை உடலை வருத்தி உழைத்தாகிலும் செய்யவேண்டும் . பாடலைப் பார்ப்போம்.

" மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்ற்ல் பேதைமை
‍‍ தன்னைத் துணித்தானும் தூங்காது அறம் செய்க ! கூற்ற‌ம்
அணித்தாய் வருதலும் உண்டு."

இளமைக்காலம் மின்னல் போலே,

அது என்றும் நிலைத்து நிற்கும் என நினைத்து பிற்காலத்தில் அறம் செய்வோம் என காலம் தாழ்த்துவது பேதைமை ஆம். யமன் வருவான் எப்போது என யாருக்குத்தெரியும் ?இளமைக்காலத்திலே அவன் வரின் அறம் செய்வது எப்போது ?

ஆகவே தன்னை வருத்திக்கொணடாவது தாமதம் ஏதும் இன்றி உடன் அறச்செயல்களைச் செய்க.

வள்ளுவர் கூறுவார்:

"நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்,
நல்வினை மேற்சென்று செய்யப் படும் "

பேச்சு நின்று விக்க‌ல் மேல் நோக்கி வ‌ருவ‌த‌ற்கு முன்னே ந‌ல்ல‌ க‌ரும‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட‌வேண்டும்.

Lesson:

Never delay doing good things when you are active,
since by the time,
you think of starting,
you may not be.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி