Pages

Monday, September 17, 2012

அப்பாவி கணவர்கள் எல்லாரும் தெரிஞ்சுக்கணும். .

அடியே மீனாட்சி கிழவி .,,,.இங்கே வா

என்ன இப்படி கத்துரீக ..  ஊரே ஓடி வந்துடும் போல இருக்கு?

வரட்டுமே. இன்னிக்கு ஒண்ணு புதிசா தெரிஞ்சதில்ல 

என்ன அப்படி 

நீயும் சிதம்பரமும் ஒண்ணு ...

அதெப்படிங்க.  மீனாச்சி அப்படின்னு பேரை வெச்சுக்கிட்டு நானும் சிதம்பரமும் எப்படி ஒன்னாக முடியும்?
மதுரைலே அம்மன் ஆட்சி. சிதம்பரத்திலே அப்பன் ஆட்சி இல்லையா 

அது சரி.  ஆனா ...

என்ன ஆனா...  ஆவன்னா ?  இத்தனை நாள் ஆட்சிலே இருந்துட்டு இப்ப ஆட்சியை விட்டுகொடுத்துட்டு போக முடியுமா?

நான் ஒன்னை விட்டுகொடு அப்படின்னு சொல்லவே இல்லையே  

அதானே பார்த்தேன்   எங்கே எங்கே சண்டை  போடலாம்னு இருக்கீகளோ அப்படின்னு நினச்சேன் 

ஒரு வார்த்தை பேச விட மாட்டேன் என்கிற நீ எனக்கு ஆட்சியவா கொடுக்கபோறே ?

என்ன ஒரு வார்த்தை..?
சாம்பாரை பண்ணினோமா பொரியலை பண்ணினோமா அப்படின்னு பாத்துட்டு கம்முனு கிடங்க  
பிறந்த நாள் அதுவுமா ?

அதாண்டி நானும் சொல்லவந்தேன் 

என்னவா ?

சிதம்பரம் இருக்கார் லே நம்ம நிதி அமைச்சர் .  அவருக்கும் இன்னிக்கு பிறந்த நாள் ...  உனக்கும் இன்னிக்கு பிறந்த நாள்.  இல்லையா....

.அட .. ஆமாம் ...   நாட்டுக்கு நல்லது செஞ்சவங்க நிறையா பேரு  எல்லாமே இந்த செப்டம்பர்லே பிறந்திருக்காக. 

ஆனா ஒரு வித்தியாசம் தான் 
என்ன ?

அவரு நிதி அமைச்சரு மட்டும்தான்  நீ... நிதி அமைச்சர், ஹோம் மினிஸ்டர் .
வெளிநாட்டு துறை அமைச்சர் எல்லாமே ?

அது சரி தானே வள்ளுவரே சொல்லிருக்கார் இல்லையா..

என்ன அது?

தக்கார் தகவிலர் அவரவர் ...
எச்சத்தால் காணப்படும். 
 அப்படின்னு வருது இல்லையா....

அவங்க அவங்க என்ன எப்படிங்கறது அவங்கவங்க விட்டுட்டு போனதை வெச்சுண்டே தெரிஞ்சுக்கலாம் 

எச்சம் அப்படின்னா வேலை செஞ்சப்பறம் இருக்கற சூழ்நிலை, சந்ததி, இதுமாதிரி எல்லாமே.  அத வச்சுகிண்டே அவங்க அந்த பொறுப்புக்கு தகுதி ஆனவங்களா இல்லையா அப்படின்னு தெரிஞ்சுக்கணும். 

அதுக்கு இப்ப என்ன ?

நீங்க நாப்பது வருஷம் வேல பாத்து என்ன மிச்சம் வச்சு இருக்கீக ??
எல்லாத்தையும் தின்னே தீத்திட்டோம் இல்லையா..
இருப்பதையாவது காப்பாத்தி வச்சுக்கணும் இல்லையா. ?  அதுக்குத்தான் 
நான் பைனன்சையும் எடுத்துகிட்டேன் 

ஏண்டி,இந்த எழுபது வயசிலே உனக்கு இந்த ஆசை ?
வள்ளுவர் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி..

என்ன ?

நினைவுக்கு வந்ததை சொல்றேன் 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை 
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அருள் வேணும் அப்படின்னு அப்பப்ப வாவது கொஞ்சம் நினைக்கனும்டி.

அது அப்ப ...
இந்தக்காலத்துக்கு எத்தனை சரி அப்படின்னு தெரியல்லே 
இந்த பாட்டை கவனிங்க ....

குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,
அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,
நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்
புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?
சரியா பொருள் தெரியல்லையே ?  யாரு பாடி இருக்காக ? எங்க இருக்கு ?
நூல் வளையாபதி  யாரு எழுதினாருன்னு தெரியல்லே. 
நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது  என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது  உயர்குடிமக்களாக உயர்த்திவிடும், நாம் நினைத்த கல்வியை உலகின் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து தரும், நம்மைத் தேடி வந்தவர்களின்  பசியைத் தீர்க்கும் உணவாக உதவும்… இப்படி இன்னும் பல பயன்கள் உண்டு.ஆகவே, நிலமே பிளந்துபோகும்படி வெப்பம் நிறைந்த நீண்ட பால நிலத்தைக் க டந்து சென்றும்கூட, அந்தப் பொருளைத் தேடத் தயங்காதீர்கள். அதுமட்டும் உ ங்களிடம் இருந்துவிட்டால், வேறெந்தக் குறையும் எட்டிப்பார்க்காது.

எங்க படிச்சே ? அதான் நம்ம பையன் வெய்யில்லே வாடறானோ ?

வள்ளுவரா ? வளையாபதியா ?
சபாஷ். சரியான போட்டி. 

அது சரி. எங்க படிச்சே அப்படின்னு சொல்லிப்போடு. என்ன மாதிரி அப்பாவி கணவர்கள்   எல்லாரும் தெரிஞ்சுக்கணும். . 
இங்க தான். நீங்களும் ஒரு வாட்டி தினம் இங்க போய் ஒரு பத்து பாட்டு தெரிஞ்சுகினு வாங்க   

Courtesy:
 http://365paa.wordpress.com/2012/05/29/328/?
blogsub=confirming#blog_subscription-3   

ஆனா கிழவி, ஒன்னு சொல்லிப்போடறேன். என்ன தான் தல கிழே நின்னாலும் உருண்டு உருண்டு உலகம் முழுக்க போனாலும் நமக்குன்னு என்ன அந்த ஆண்டவன் விதிசிருக்கானோ அது தாங்க கிடைக்கும். 

கங்கை லே  அவ்வளவு தண்ணி ஓடுது,  ஆனா, நம்ம கையிலே இருக்கிற சொம்பு பிடிக்கிற அளவுக்குத் தானே நீர் ரொப்பி எடுத்துகிட்டு வரமுடியும்.
வேணும்னா இங்கே பாரு கணேசன் அப்படின்னு ஒருவரு அழகா எழுதறாரு. 

ஆஹா ....  இப்படி சொல்லி சொல்லித்தானே வந்த ப்ரமோஷன் எல்லாமே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டீக..   உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாமே முன்னாடி போயிட்டாக..

யாரு முன்னாடி போனும், யாரு பின்னாடி போனும் அப்படின்னு முடிவு செய்யறதும் அவன் தானே. 

நான் அதை சொல்லவில்லை. 

எதுவும் சொல்லவேண்டாம்  சும்மா இரு. 
அதுவே சுகம். 

சும்மா இருப்பது எப்படி அப்படின்னு இங்கே சொல்றாக என்னமா அழகா படிபடியா?

அப்படியா!  அந்தப் படியை  கெட்டியாப் பிடிச்சுக்க 




















Thursday, September 13, 2012

இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

//செய்கையெலாம் அதன் செய்கை, 
நினைவெல்லாம் அதன் நினைவு,
 தெய்வ மேநாம் உய்கையுற நாமாகி
நமக்குள்ளே யொளிர்வதென உறுதிகொண்டு 
பொய்,கயமை,சினம்,சோம்பர்
கவலை,மயல், வீண் விருப்பம்,
ழுக்கம்,அச்சம், ஜயமெனும் பேயையெலாம்
 ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி,...//


 பாரதி நினைவு நாளன்று பாரதியே இயற்றி காரைக்குடி ஹிந்து அபிமான சங்கத்தில் சொற்பளிவாற்றுகையில் பாடிய பாட்டினை விலையிலாப் பொருள் கொண்ட அதை திருமதி தேனம்மை இலக்ஷ்மணன் அவர்கள் தன் வலையில் இட்டிருக்கிறார்கள். அதனை இங்கே காண்க. முழுப்பாடலும் இங்கே அவர்கள் வலையிலே

(மேலே உள்ள தொடர்பினைக் க்ளிக்கிட்டு செல்ல இயல வில்லை எனின் கீழ்க்காணும் தொடர்பினை ஒட்டவும் பின்  கிடைக்கும்.
 http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_6504.html

அதற்கான பின்னூட்டம் ஒன்று தந்தேன்.
 எனது பாணியிலேயே அதுவும் இதே: 
அத்வைத கருத்தினை 
அருமையாக எளிதாக 
இதைவிடத் தெளிவாக
 ஈண்டு இவ்வுலகத்தே 
யாரேனும் பாரதியைத்தவிர
 உரைத்திட வல்லாரோ ? 
இப்பாடலை இதுவரை நான் படித்ததில்லை.
 புதையலைக் கண்டாற்போல் இருக்கிறது. 
உண்மையிலே இது புதையல் தான்.
 உருவும் அருவுமான 
உண்மைப்பொருளை 
முழுமையாகப் படித்து இன்புற 
முதற்கடமையாக 
அவர்களது வலைக்குச்செல்லுங்க்கள்.
 இன்றைய பொழுதை இனிதாக்குங்கள்.

Tuesday, September 04, 2012

மேலே ஒரு படி செல்ல ...

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாத வாறு.

(ஊரென்ன ? நாடென்ன ?  கற்றவனை அகிலமும் போற்றி மகிழும் .  அவ்வண்ணம் ஒருவன் கல்லாமல் இருப்பது தான் தான் ஏன்?    ...  என்றார்  வள்ளுவர்)


என்கின்ற வள்ளுவனின் வாய்மொழி தான்

இன்று நினைவுக்கு வருகிறது.

இன்று ஆசிரியர்  தினம்.

அன்னை தந்தையை காட்ட,
தந்தை குருவிடம் கூட்டிச் சென்று இவனுக்கு நற்கல்வி புகட்டுங்கள் என்று சொல்ல அந்த
குருவோ, அந்த மாணவனிடம், நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொள் என்று
இறைவனிடம் அழைத்துச் செல்கிறார்
இல்லை.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 


என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப 
வையத்தில் வாழ்வாங்கு வாழும் வழிதனைப் புகட்டுகின்றார் 

ஆகவே தான் மாதா பிதா குரூ தெய்வம் என்றனர் 

ஆசிரியரைப் போற்றுவது நமது கடமை. 
ஆசிரியரின் கடமை என்ன என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது அதுவும் தலையாயதே 

எதிர்கால மன்னவர்களின் திறம்பட வாழ்வு மட்டும் அல்ல அற நெறிக்குட்பட்ட வாழ்வும் 
நம் ஆசிரியர்கள் கையிலேதான் இருக்கிறது. 

தனக்கென வாழா பிறர்கெனவே வாழும் ஆசிரியர்களைப் பணிவோம் போற்றுவோம் 

மேலே ஒரு படி செல்ல  
மேலே படிக்க இங்கே செல்க