Pages

Sunday, September 02, 2012

அய்யா! வணக்கம்


"அய்யா!  வணக்கம் "  என்றேன்.
அவர் என்னை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் கருமமே கண்ணாயினார் என்னும் வகையிலே கணினியிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

"அய்யா வணக்கம் " என்று மீண்டும் உரத்த குரலில் சொன்னேன்.
தலை நிமிர்ந்தார். எனைப் பார்த்தார்
என்னய்யா ?
பெரிய அய்யாவை பார்க்கணும் என்றேன்.
இப்ப பார்க்க முடியாது. என்றார்
நான் பார்க்கணுமே என்றேன்.
நான்தான் இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்றேனுல்ல

சுற்றி ஒருமுறை பார்த்தேன் பெரிய அறை தான். வரவேற்கும் பி.ஏ .அறையே இவ்வளவு பெரியதாக இருந்தால் உள்ளே இருப்பவர் அறை இன்னமும் பெரியதாக இருக்கும் என்று என் உள் உணர்வு உரைத்தது.

பெரிய அய்யாவைப் பார்க்க வருபவர்களுக்காக என நாற்காலிகள் பல அழகழாக வரிசையாக இருந்தன  .  அதில் அமர்ந்தாலே அந்தஸ்து உயர்வதைப் போல இருந்தது.  ஒரு ஐந்தாறு வரிசைகள் அதில் கடைசி வரிசையில் அமர்ந்தேன்

அந்த பி. ஏ , ஐயா என்னைப் பார்த்தார் என்ன நினைத்தாரோ திரும்பவும் தன் கணினியில் சங்கமம் ஆனார்

சுற்றி இருக்கும் சுவர்களில் அடடா !! என்ன ஒரு மேற்கோள்கள். !!

                                   கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
                                  குரிமை உடைத்திவ் வுலகு.

வள்ளுவனின் படத்தின் கீழே இந்த குரளைப் பார்த்ததும், சரிதான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்று தோன்றியது.

எதிர்ச்சுவரில் அந்த பி. ஏ . இருக்கை மேலே அண்ணல் காந்தி புன்னகைத்து கொண்டிருந்தார்
அவர் சொல்லியதாகச் சொல்லப்படும் சொற்கள் பெரிய எழுத்துக்களில் பிரகாசித்துக் கொண்டு இருந்தன .



"A customer is the most important visitor on our premises. He is not dependent on us; we are dependent on him.He is not an interruption in our work; he is the purpose of it. He is not an outsider in our business; he is a part of it.We are not doing him a favour by serving him; he is doing us a favour
by giving us an opportunity to do so. "

ஆஹா !!  நமது பாக்கியமே நாம் இந்த இடத்துக்கு வந்தது. கண்டிப்பாக நான் நினைத்து வந்த காரியம் முடியும் சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நாம் வந்த காரியம் முடியவேண்டும் என நினைத்துக்  கொண்டேன் 

அப்போது அந்த திடீர் என்று அந்த பி.ஏ . அய்யா தலை நிமிர்ந்தார்

பெரிய அய்யாவை பார்க்க முடியாது என்று சொன்னேன் இல்லையா ? போயிட்டு வாங்க .!!
என்றார் .
நானோ விடாப்பிடியாக ,
"ஐயா,  நான் அவரைக் கண்டிப்பா பார்க்க வேண்டும்".என்றேன்.

பார்க்க முடியாது அப்படின்னு நான் சொன்னா  சொன்னது தான். என்று அழுத்திச் சொன்னார்  போடா வெளிலே என்று தள்ளாத குறைதான்

அந்த சமயம் என்று பார்த்து ஒரு பத்து பேர் தப தப என்று இரைச்சலாக உள்ளே வந்தனர்

நாங்க வந்திருக்கோம் என்று சொல்லுங்க என்று சொல்லவில்லை. ஆணை இட்டார்போல் இருந்தது

பெரியவரு இன்னைக்கு யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்காரு அது தான் என்று தயங்கி தயங்கி சொன்னார் பி. ஏ .

அதெல்லாம் அப்புறம். இப்ப பாத்தாகணும். ஒன்னு ரண்டு இல்லை அப்படின்னு தெரிஞ்சாகனும். என்றார் அதில் வந்திருந்த ஒரு மீசைக்காரர்

ஆமாம்.  ஆமாம். என்றார்கள். மற்றவர்கள்.

கொஞ்சம் இருங்க. அப்படி சொல்லிவிட்டு உள்ளே போனார் பி.ஏ .  அடுத்த நிமிடம் வெளியே வந்தவர், " உங்களை நாளைக்கு காலை வரச் சொல்கிறார் "

" இப்ப என்னவாம்?"

" அர்ஜெண்டா போன் பேசிக்கிட்டு இருக்காரு.. கான்பிரன்ன்ஸ் விஷயம் போல இருக்குங்க .."

அவர்களுக்கேலேயே முணு முணுத்துக் கொண்ட பின்,
" சரி சரி. நாளைக்கு வரோம். "  என்றவர்கள், திரும்பினாற்போல் இருந்தது.
திடீர் என்று ஒருவர் மட்டும் இவர் நாளைக்கு இருப்பாரா என்று கேட்டார்.

இருப்பார்னு தான் நினைக்கிறேன் என்றார் பி.ஏ .
அனிச்சையாக கைகளை மேலே தூக்கிக் காண்பித்தார்

வந்த அதே வேகத்தில்  திரும்பிச் சென்றது அந்த குழாம் .

அந்த பி. ஏ . என்னைப் பார்த்தார்  உங்க கிட்ட எத்தன தர சொல்லுவது ?  நீங்க போங்க !
அவங்கள பாக்க முடியாது. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. என்றார்.

சார் என்று இழுத்தேன்.

சார் மோர் எல்லாம் வேண்டாம் முதல்லே போய்ச்சேருங்க  ...ஏகப்பட்ட வேலை இருக்குது என்றார் அப்ப பார்த்து, அந்த கம்பயூடர் சத்தம் கொஞ்சம் அதிகப்படியாகவே கேட்டது. அது ஒரு பாட்டு.கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன் 

 ( நீங்களும்  கண்டிப்பா கேட்கனும்னா இங்க க்ளிக் பண்ணுங்க.)

அந்த சமயம் பார்த்து தொலை பேசி சத்தம் போட்டது. பி.எ. ஸ்மார்ட் ஆனார். கம்புடர் ஸ்பீக்கரை ஆப செய்தார்

அதை எடுத்தவர் " எஸ்.மேடம். எஸ்.மேடம்." என்று பத்து மேடம் போட்டார்  " ஒரு நிமிஷம் , நீங்க பேசணுமா கனெக்ஷன் கொடுக்கட்டுமா, ....................வேண்டாமா........நான் சொன்னால் போதுமா ...  சரி மேடம் " என்று போனை வைத்தார். பக்கத்தில் இருந்த அடுத்த போனை ( அது இன்டர் காமாக இருக்கும் போல் இருந்தது. ) முதலில் பேசற பக்கத்தை காது பக்கம் வைத்துகொண்டார் பிறகு மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்

" சார் ! வீட்டிலேந்து  மேடம் பேசினாங்க சார். அவங்க அம்மா வந்திருக்காங்களாம். உடனே வரச்சொன்னாங்க ... ........எஸ் சார், ....ஆமாம் சார்..." என்று போனை வைத்தார்.

திடீர் என நினைவுக்கு வந்தது போல, திரும்பவும் போனை எடுத்தார்.

 " சார், சாரி டு டிஸ்டர்ப் யு ஒன்ஸ் எகைன் சார், வரும்போது,  கிராண்ட் ஸ்வீட்ஸ் லே ரண்டு ஸ்வீட்ஸ் ரண்டு காரம் வாங்கிண்டு வரச்சொன்னாங்க சார். என்றார்.

உஸ் என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு அப்பாடி, இன்னி வேலை முடிஞ்சு போச்சு. என்றார்.

இடை வேளைக்கப்பறமாவது சரியா பார்க்கணும். என்று முனு முணுத்தார்

என்ன பார்க்கணும் சார். ! என்று இடை மறித்தேன். என் இடைச் செருகலை அவர் விரும்பவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. வேண்டா வெறுப்பா என்னை பார்த்தார்

அதே நிமிஷம் உள்ளிருந்து அந்த பெரியவர் வெளியே  வந்தார் . வந்த உடனே அவர் கண்கள் பி.ஏ வை மட்டுமே சந்தித்தன என்று நான் கவனித்தேன்.

" வேற எதுனாச்சும் சொன்னாங்களா ? "  என்றார்.

" இல்லை சார், உங்களை சீக்கிரம் வரச் சொன்னாங்க அது தான் " என்றார் பி. எ.

" சரி, நான் கிளம்பறேன். " என்று கிளம்பியவர் , " குமார் !  மேலேந்து எதுனாச்சும் போன் வந்தது அப்படின்னா, நான் டூர் லே இருக்கேன் , அப்படி சொல்லிடுங்க " என்றார்.

 வெளியே போக திரும்பியவர் என்னைப் பார்த்தார்.  திடுக்கிட்டார் என்று சொன்னால் மிகை ஆகாது.

"வாங்க ..வாங்க...நீங்க நாளைக்குத்தானே  வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் ?
குமார் ! இவர் தான் எனது சக்ஸசர் .  என் ப்லேசிலே . ஆமா, இவர் வந்திருக்கார்னு ஏன் சொல்ல வில்லை? சச் அன் இம்பார்டன்ட் பர்சன் "

அந்த பி. எ.  குமார் ( அவரது பெயர் ) முகம் வெளிறிப்போனது நன்றாகவே தெரிந்தது.

" நோ ப்ராப்ளம் .. நான் தான் ஒரு நாள் முன்னாடியே வந்துவிட்டேன். என்னென்ன எப்படி எப்படி செய்யணும் அப்படின்னு உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண வந்தேன். "

" தட்ஸ் ஒ.கே. வாங்க.. முக்கியமா ஒரு வேலை. ஹி ..ஹி ...போய்க்கொண்டே பேசலாமே !!"

"வேண்டாம். நாளைக்கே வரேன். "

" என்னென்ன செய்யணும் அப்படின்னு தெரிஞ்சகண்ணும் அப்படின்னு  சொன்னீர்களே? "

" ஆமாம். ஆனா , இப்ப என்ன என்ன செய்யக்கூடாது அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் அது போதும். "

" ஹி ..ஹி .....    ..  .ஒ.கே. ...   திப்ருகார் எப்படி சார் ? "

 அவருக்கு அங்கே தான் தமிழ் நாட்டிலேந்து மாற்றலாகி இருந்தது.




வருகை தந்த வரும் வர என்னும் எல்லோருக்கும் எனது உளமாற நன்றி.
















Thursday, August 30, 2012

என்னங்க ?




என்னங்க ?

என்ன என்னங்க ?

என்னவா ? ஒரு மணி நேரமா கத்திண்டே  இருக்கேன் ? காதிலே விழல்லையாங்க ?

ஒரு மணி நேரமா ? பொய் சொல்லாதே ? ஒரு நிமிஷம் கூட இல்லை.

நானா பொய்  சொல்றேன் ! என் மூஞ்சியைப் பாத்து சொல்லுங்க.

ஏன் உன் மூஞ்சிலே தான் எதுனாச்சும் ஒட்டி இருக்குதா ?

உங்க மூஞ்சிலாதங்க அதெல்லாம் ஒட்டி இருக்கும். என் மூஞ்சி நெத்தி எல்லாம் எப்பவுமே பட்டுபோல பளிச்சுன்னு தான் இருக்கும்.

அப்ப என் மூஞ்சிலே என்ன ஒட்டி இருக்குதுன்னு சொல்றே ?

மூஞ்சிலே மட்டுமா ? உடம்பு பூராவே இருக்கு.

அது என்னடி அப்படி கண்டே ?

நான் மட்டுமா கண்டேன் .  யாரைபாத்தாலும் அதே தானே சொல்வாக.

அது என்ன சொல்வாக ?


அது சரி. என்ன விஷயம்னு கூப்பிட்ட? ஒரு முக்கியமா விஷயம் பாத்துகிட்டு இருக்கேன்ல ?

அப்படி என்னங்க முக்கியமான விஷயம் ? சாம்பார் கொதிக்குது. குக்கர் சத்தம் போடுது. அனைங்க அணைங்க அப்படின்னு ஆயிரம் தரம் சொல்லணுமா ?

(மனசுக்குள்ளே ) (அனைங்க, அணைங்க  அப்படி நீ சொல்லாமலேயே அணைச்ச காலம் எல்லாமே அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிடுச்சே )

ஏன்  நீ என்ன  பண்ணுறே ? நீ போய் அணைக்க வேண்டியதுதானே ?

நான் என்ன பன்னுறேனா ?  பாத்தா தெரியலையா ?

என்னத்தை பாக்கிறது ?

உங்களுக்கு எத பாக்கிறது எத பாக்க வேண்டாம் அப்படி என்னாலே கிளாஸ் எடுக்க முடியாது.   இந்த சரவணன் மீனாச்சி சீரியல் இப்ப விட்டா அப்பறம் பாக்க முடியுமா ?

அப்ப நான் தான் சமையலை கவனிக்கனுமா என்ன ?
அடேய் சரவணா ? நீ எப்படா சீரியலே முடிக்கப்போறே ?

சீரியல் முடியறதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ளே சாம்பார் தீஞ்சு போயிடும்.
போயி சாம்பார் வாணலியை  ஆF  பண்ணுங்க.

பண்ணிட்டேன்

குக்கரை ஆப பண்ணுங்க.

பண்ணிட்டேன்.

பண்ணிட்டேன், பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னா எப்படி. நீங்க என்ன
பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்ன கவனிக்கிறத விட்டுட்டு. ?

இத பாத்துகினு இருக்கேன்.

என்ன அது ?





என்னங்க உங்களுக்கு பொன்னாடை போத்தறாங்க ?

ஆமாண்டி. மெதுவா கேளு.

சரி வேகமா கேட்கறேன். யாருங்க அது? என்ன விசேஷம் ?

எனக்கு போன ஞாயிறு அன்னிக்கு தமிழ் பதிவாளர்கள் கூட்டத்தில் சமூக ஆர்வலர்
மூத்த குடிமகன் அப்படின்னு சொல்லி கௌரவச்சாங்க .  ஒரு நினைவுப் பரிசும் தந்தாங்க

அதான் இந்த போட்டோவாங்க ?

ஆமாண்டி   எப்படி கீறேன் பாத்தியா ? சும்மா ஸல் லுனு இருக்கேன்ல ...

ரொம்ப தான் மெலிஞ்சு போயிட்டீங்க

கரெக்ட். பொன்னாடை போத்த கூப்பிடும்போது கூடத்தான் அத சொன்னாக இப்படி ஒல்லியா இருக்கீகளே ? அது என்ன சீக்ரட் அப்படின்னாக ?

என்ன சொன்னீங்க ..

சொல்லனும்னு நினைச்சேன். மறந்து போச்சு.

என்ன அது ?

Most of us live to eat.
Some of us eat to live. 

.
என்ன செஞ்சா நம்ப உடம்ப ட்ரிம்மா வச்சுக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இங்கன  க்ளிக்குங்க 

சுப்பு தாத்தா ஞாயிறு இரவு ஒரு கனவு காண்கிறார் அது என்ன ? 

சுப்பு தாத்தா பாராட்டு பெற்றதை முன்னிட்டு ஒரு கச்சேரி







Sunday, March 18, 2012

தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.

Courtesy: arvindsdad.blogspot.in/2012/03/who-is-great-mother-or-daughter.html



சீக்கிரம் போடும்மா பொத்தானை !! நான்  உடனே போகணும் அம்மா !!

எங்கடா கண்ணா இன்னிக்கு இத்தனை அவசரம் ஸ்கூலுக்கு ?

அம்மா அம்மா !! உனக்குத் தெரியாதா !! சசின் நூறு நூறு எடுத்துட்டாராம் 
எங்க ஸ்கூல் லே விழா கொண்டாடுறாங்க...அதிலே நாங்க டான்சே ஆடப்போறோம். 

ராசாத்தி ...போயிட்டு வாடி என் கண்ணம்மா !!  

ஏம்மா !! எம்புட்டு சம்பாதிக்கிறாரு அந்த சசின்னு ?  நம்மைப் போலவுங்களுக்கு
ஒரு வீடு கட்டி தரக்கூடாதா ?

அத நம்ப மாரியாத்தா தான் செய்யணும். செய்ய முடியும். 
நல்ல படிச்சு நீயே காணி நிலம் வாங்குவே. அதிலே ஒரு மாளிகை கட்டுவே. 
அத நினச்சு நினச்சு தான் கண்ணம்மா நான் தூங்காமலேயே கனவு கண்டுண்டு இருக்கேன்.    

என்னம்மா கனவு ?

காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும் 
அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டி தர வேண்டும்.